திக்கெட்டும் ஒலிக்கட்டும் தேமதுரத் தமிழோசை !
ப. மதியழகன்
சொற்கள் தீயை கக்கின!
அதைப் படித்தவர்கள் உள்ளம்!
விம்மி அடங்கின!
கலைத்தாயின் மகுடத்தில் வைரக்கல்லானான்!
தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களில்!
தங்கமகனானான்!
வறுமையின் கோரப்பிடி!
வாழ்விலோ பசி, பிணி!
சுற்றத்தினரின் கேலிச்சிரிப்பொலி!
உள்ளத்திலோ, பரங்கியர்களால்!
நயவஞ்சகமாக பந்தாடப்பட்டதனால்!
உண்டான வலி!
சிறைக்கதவுகளால் அவனது சிந்தனையை!
சிறைப்படுத்த இயலவில்லை!
அவனது சுதந்திர தாகம் மட்டும்!
இறுதி வரை தணியவே இல்லை!
முறுக்கு மீசை கொண்டவன்!
முத்தமிழையும் ஆகாய கங்கையென!
தமிழ் மண்ணெங்கும் பாய்ந்தோடச் செய்தான்!
முண்டாசு அணிந்தவன்!
ருத்ர தாண்டவமாடினான், கவிநாதனாக!
விடுதலை எழுச்சியை தேசத்தில் தோற்றுவிக்க!
மேற்கொண்ட பெரும் முயற்சிகளில்!
அவனே வித்தானான்!
அந்த விதை அழிந்த பின்பு தான்!
புரட்சி முளைவிட்டு விருட்சமாய்!
எழுந்து நின்றது!
காணி நிலம் அவன் கேட்ட போது!
கொடுக்கவில்லை பராசக்தி!
இன்று தமிழ் மண்ணெங்கும் பரவிக்கிடக்கின்றது!
அவனது உயிர்சக்தி!
ஆழிப்பேரலையை!
நேரில் கண்டுவிட்ட நாமனைவரும்!
அஞ்சிநடுங்குகிறோம், அல்லல்படுகின்றோம்!
அன்று செந்தமிழ்ச்சுனாமி மானிடனாய்!
வாழ்ந்து காவியங்கள் பல படைத்து!
பின்பொரு நாள் மத்திம வயதிலேயே!
மாயமானதை!
காலச்சுவடுகள் மூலம் அறிகிறோம்!
கோயில் யானை பாரதியின் தேகத்தை!
தனது துதிக்கையால் வீழ்த்தியது!
கருவறையில் சயனத்திலிருந்த பார்த்தசாரதி,!
கோயிலுக்கு உள்ளிருந்து ஓடோடி வந்தானய்யா!
குவளைக் கண்ணனாய்!
மகாகவிஞனை தனது தோளில்!
சுமந்தானய்யா!
யானை அறியாமல் செய்த பிழைக்கு!
பரிகாரம் செய்தானய்யா!
பார்த்தனுக்கு மட்டுமல்ல!
பாரதிக்கும் தானொரு சாரதி - என்று!
அன்று நிரூபித்துச் சென்றானய்யா!
அவன் பிராணன் அடங்கிய போது!
சடலத்தைச் சுமந்து மாயனம் நோக்கிச் சென்ற!
இறுதி ஊர்வலத்தில்!
விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச்சிலருடன்!
இடுகாடு வரை தமிழன்னை வந்தாள்!
தனக்காக வாழ்ந்தவனுக்கு!
வாழ்த்தி விடைகொடுக்க.... !