அந்திச் சிகப்பு!
அஸ்தமனத்தை கொட்டுவதல்ல!
நாளைய உதயத்திற்கான!
விடியல் வார்ப்புகளாய்!
அடிவானில் வரையப்படுகின்றன!
மாங்கனித் தீவின் மகுடத்திற்குள்ளும்!
விடியல் வார்ப்புக்களை!
குருதி நதியில் ஓடம் விட்டு!
செதுக்கியுள்ளோம்!
குட்டிச் சுவர் திண்ணைகளை விட்டு!
வெட்டிப் பேச்சு வீரரை துறந்து!
விண்ணையும் எட்டித் தொட்ட!
எங்கள் வீர வேங்கைகளாய்!
எழுந்து வா தமிழா!
சத்திய சோதனைகள்!
நித்திய வெள்ளம் அல்ல!
நித்தம் வீழ்வதும்!
நீதியின் கரங்களல்ல!
செந்தமிழர் சிந்திய குருதியில்!
செந்நெல் மணிகளையே!
விதைத்துள்ளோம்!
இமைகளுக்குள் ஈழம் இருக்கயில்!
விழிகளுக்குள் இன்னும் ஏன் கங்கை!
அந்திச் சிகப்பின் அச்சாரத்திற்குள்!
அஸ்தம பேய்களை அழித்திடுவோம்!
சத்திரியன் சாவதில்லை!
சந்திர சூரியராகவே வாழுகிறார்
வல்வை சுஜேன்