தெய்வத் தாரகை
ப. மதியழகன்
எங்கெங்கு தேடிடினும்!
பாவை, உன் போல வருமோ!
திக்கெற்று அலைகையில்!
நிழல் கொஞ்சம் தருமோ?!
வாடி நின்ற போது!
கலைகளால் ஞானத்தாகம் தீர்த்தாய்!
கலங்கி நின்ற போது!
ஆதரவாய் கை கொடுத்தாய்!
வீழ்ந்து கிடந்த போது!
நம்பிக்கை கொடுத்து மீண்டும்!
உயிர்கொடுத்தாய்!
எனை தொலைத்து அலைந்த போது!
இம்மண்ணில் எனக்கோர்!
முகவரி கொடுத்தாய்!
அவமானங்கள் உள்ளத்தை நொறுக்கிய போது!
உனது வார்த்தைகளின் ஈரம்!
அதனை ஒட்டவைத்தது!
காலம் கொடுத்த காயங்களுக்கெல்லாம்!
மருந்தாய் நீ இருந்து,!
எனையொரு மனிதனாய் உருவாக்கினாய்!
உதாசீனப்படுத்துபவர்களை அலட்சியப்படுத்தி!
லட்சியத்தை நோக்கி முன்னேறச் சொன்னாய்!
‘முயற்சிகளே முடிவுபெறாத வெற்றிகள்’!
என்று நெஞசத்தில் பதிய வைத்தாய்!
‘மழைநீருக்கு வாய்க்கால்கள் வெட்டப்படுவதில்லை!
பறவைகளுக்கு கலங்கரை விளக்கம்!
அமைக்கப்படுவதில்லை!
விதைக்கு எப்படி முளைவிட வேண்டுமென்று!
யாரும் பாடம் நடத்துவதில்லை’-!
என்று ஊக்கம் கொடுத்து உறுதுணையாய் நின்றாய்!
முயற்சி எனும் துடுப்பை வளித்து!
வாழ்க்கைக் கடலை!
துணிந்து கடக்க முனைந்தபோது!
உருவமிழந்து ஞானச்சுடராய்!
எனதுள்ளத்தில் நீ கலந்தாய்!
நித்தமும், என் குரல் வானம் எட்டும் வரை!
உரக்கச் சத்தமிட்டுக் கேட்கின்றேன்!
நீ வறியவர் தேடும் செல்வமோ!
குடும்பஸ்தன் ஏங்கும் மன நிம்மதியோ!
கூண்டுக்கிளியின் வானவெளியோ!
முதி்ர்கன்னியின் திருமணக் கனவோ!
மரங்கள் வேண்டி நிற்கும் மழையோ!
ராமனின் பேராண்மையோ!
சீதையின் பொன் எழிலோ!
பாஞ்சாலியின் அவிழ்ந்த கூந்தலோ!
பெண் உருவில் இம்மண்ணில் வந்து உலாவும்!
விண்ணவளோ?!
விண்ணவளோ?!
விண்ணவளோ?