அவள் நகம் கடித்தால்!
அவள் நகம் ஆகுவான்.!
அவள் இமை கவிழ்த்தால்!
அவள் விழி ஆகுவான்.!
அவள் புன்னகைத்தால்!
அவள் இதழ் ஆகுவான்.!
அவள் பேசினால்!
அவள் நா ஆகுவான்.!
அவள் வேர்த்து நின்றால்!
அவள் உடல் ஆகுவான்.!
அவள் பார்த்து நின்றால்!
அவள் ஒளி ஆகுவான்.!
அவள் பேசி நின்றால்!
அவள் தமிழ் ஆகுவான்.!
அவள் உண்ணச் சென்றால்!
அவள் உணவு ஆகுவான்.!
அவள் மூச்சிழுத்தால்!
அவள் உள் செல்லுவான்.!
அவள் மூச்சு விட்டால்!
அவள் மூச்சு ஆகுவான்!
அவள் தூங்கச்சென்றால்!
அவள் மெத்தை ஆகுவான்.!
அவள் முணு முணுத்தால்!
அவள் வீணை ஆகுவான்.!
அவள் உள்ளம் என்றால்!
அவள் ஆழம் கண்டானா?!
இல்லை...இல்லை.!
இல்லவே இல்லை.!
அவன் காதலித்தான்.!
அவள் வெளியே நின்றாள்