**************!
மழை கசிந்து கொண்டிருக்கும்!
இருள் தேங்கிய அதிகாலையில்!
உங்கள் நினைவுக் குறிப்புகளைப்!
புரட்டிக் கொண்டிருக்கிறேன்!
பிசு பிசுக்கும் புல் வெளியின்!
வேர்களிடையே தேங்கிக் கிடக்கிறது!
நேற்றைய பெரு மழை!
!
நதிகள் பெருக்கெடுத்தோடும்!
நிர்க்கதி மிகுந்த தீவில்!
இந்த மழையை!
யாருமே வரவேற்றதில்லை!
உங்களிடமிருந்து!
பிரிவின் போர்வை எடுத்து!
எனை மூடுகிறேன்!
!
என் நதி சுமந்து வந்த!
திரவியங்களனைத்தையும்!
உங்களிடமே கொடுத்தேன்!
!
திடுமென வருமோர்!
காட்டாற்று வெள்ளத்தில்!
என் கரை வளர்த்த மரங்கள்!
இழுபட்டுச் செல்லாதிருக்கப்!
பின்னிப் பின்னிப் பிணைந்திருக்கும்!
பெயர் தெரியாப் பெருங்கொடிகள்!
!
நனைந்த பூமி உலர்ந்திட!
நாளை வரும் கோடையில்!
உங்கள் நதித் தீரங்கள் ஊடாக!
ஊற்றெடுத்து ஓடிக் கொண்டிருக்கும்!
என்றென்றைக்குமான!
என் குரலோசை!
பஹீமாஜஹான்
பஹீமா ஜஹான்