மதம் விரும்பும் மந்தைகள் - முத்துசாமி பழனியப்பன்

Photo by FLY:D on Unsplash

மதம் அது களிருடைய வளம்!
பெருங்கடன் கொண்டாயோ நீ மனிதனிடம்!
வராக்கடன் வசூலித்திட - கட்டாயப் பறிமுதலாய்!
தன்வசப்படுத்தினான் உன் ஒரே வளத்தை!!
இப்போதும் அப்போதும் எப்போதுமாய்த்தான்!
மதம் அதற்குப் பிடித்துப் போகிறது!
மனிதா காடு கண்டதுண்டா நீ? - களிறு!
மதம் கொண்ட வேளையிலே!
மதமடைந்து செய்வதும்!
மதம் பிடித்துச் செய்வதென்பதும்!
வேறுவேறு - குற்றங்களில்!
சிறிதென்றும் பெரிதென்றும் இல்லை!
சேருடல் கொண்ட களிறாய் - தரந்தாழ்த்திக்!
கொள்கிறாய் உன் மதம் சிறிதென்றும் பெரிதென்றும்!
யானை மதம் பிடித்து எப்போதாவது தான் சாகிறது!
மானுடா நீ சாகும் போதும் மதம் பிடித்துச் சாகிறாய்!
அறிந்த வேற்றுமைகளெல்லாம் - அறிவு!
எண்ணிக்கையில் மட்டும் தானா?!
சாதி இரண்டொழிய வேறில்லை என்றானே - பாரதி!
கனவு எப்போது மெய்ப்படுமடா?
முத்துசாமி பழனியப்பன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.