பின்னங்கால் வடு - எம்.ரிஷான் ஷெரீப்

Photo by Philippa Rose-Tite on Unsplash

உதிர்ந்த சருகு போலாகிவிட்ட!
அப்பாவுக்கு முந்தியவர்கள்!
எப்பொழுதோ நட்டுச் சென்ற!
முற்றத்து மாமரம்!
அகன்ற நிழலைப் பரப்பி!
மாம்பிஞ்சுகளை!
பூக்களைப் பழங்களை வீழ்த்தும்!
தண்டின் தடித்த பரப்பிலோர் நாள்!
என் பெயர் செதுக்கினார் அப்பா!
தடவிப்பார்க்கிறேன்!
கசிந்து காய்ந்த தழும்பின்!
நெருடலும் அப்பாவுமாக!
விரல்களில் உறைகிறது நினைவுகள் !
இறுதியாக அவர் மடியிலமர்த்திச்!
சொல்லித்தந்திட்ட வேளையில்!
விரிந்திருந்த அரிச்சுவடியின்!
எழுத்துகள் ஒவ்வொன்றிலும்!
நகர்ந்த என் பிஞ்சுச் சுட்டுவிரலின் அழுத்தத்தில்!
நகக்கண்ணில் வெள்ளை பூத்தது!
எழுத்துக்கள் குறித்துநின்ற!
விலங்குகளுக்கும் கூட!
உயிரிருந்திருக்கும் அப்பொழுது !
வீட்டின் கொல்லையில்!
அகன்ற பெருங்கூட்டுக்குள்!
அழகிய பூமைனா வளர்ந்தது!
விழி சூழ்ந்த மஞ்சள் கீற்று!
மென்சதை மூடித்திறக்கும் கருமணிகள் உருள!
நாற்சூழலுக்கும் கேட்கும் படி!
தன் சொண்டுகளிலிருந்து!
எப்பொழுதுமேதேனும்!
வார்த்தைகளை வழியவிட்டுக் கொண்டிருக்கும்!
அதுதான் முதலில் அலறியது!
கப்பம் கேட்டு!
ஆயுதங்கள் நுழையக் கண்டு !
பீதியில் நடுங்கிப்!
பதைபதைத்து நாங்கள்!
ஒளிந்திருந்த தளத்துள்!
பலத்த அரவங்களோடு!
அப் பேய்கள் நுழைந்திற்று!
ஏதும் சொல்ல வாயெழாக் கணம்!
கோரமாயிருந்தவற்றின் அகலத்திறந்த!
வாயிலிருந்து கடுஞ்சொற்களும்!
துப்பாக்கிகளில் சன்னங்களும் உதிரக்கண்டு!
மேலுமச்சத்தில் விதிர்விதித்து!
மூர்ச்சையுற்றுப் போனேன் !
விழித்துப் பார்க்கையில்!
பிணமாகியிருந்தார் அப்பா!
ஊனமாகியிருந்தேன் நான்!
அம்மாவும் அக்காவும்!
எங்கெனத் தெரியவில்லை!
இன்றுவரை !
குறி பிசகிய!
துப்பாக்கி ரவை விட்டுச் சென்ற!
ஒற்றைக்காலின் சாம்பல் வடு!
அப்பா, அம்மா, அக்கா, சுற்றம் குறித்த நினைவுகளை!
இனி வரும் நாட்களிலும் ஏந்தி வரக்கூடும்
எம்.ரிஷான் ஷெரீப்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.