01.!
இடம் !
--------------!
பேருந்தில்.... !
குழந்தையுடன் நின்ற !
அம்மாவுக்கு !
எழுந்து இடம் கொடுத்தார் !
பெரியவர் ! !
அம்மா உட்கார்ந்ததும் !
குழந்தை தாவியது !
நின்றுக் கொண்டிருந்த !
அப்பாவிடம்...! !
!
02.!
அலைபாயுதே !
---------------------- !
என்னதான் நம் !
உடம்பு ஆண்டவனை !
தரிசித்தாலும்... !
மனசு என்னவோ !
வெளியில் விட்ட !
செருப்பின் மீதுதான்...! !
!
03.!
மேய்ச்சல் நிலம் !
--------------------------- !
'பயணங்களில்... !
ஜேம்ஸ் ஹார்ட்லீ சேஸோ, !
சுஜாதாவோ... !
யாருடைய நாவலை படித்தாலும், !
ஆவலுடன் மேய்கிறோம்... !
பக்கத்து இருக்கையில் இருப்பவர் !
படிக்கும் தினசரியை..!'
கி.அற்புதராஜு