மூச்சுக்காற்று!
----------------------------------------------------!
கனரக பீரங்கிகள்போல் அதிர்ந்து எழுகின்றன!
பேச்சுக்கள்.!
தலைக்குமேல் செல் போல் கூவிச் செல்கின்றன!
அறிக்கைகள்.!
கிளஸ்தர் குண்டுகள் போல் சிதறி விழுகின்றன!
உறுதி மொழிகள்.!
கூத்தும் கரணமும் !
இது ஒரு தேர்தல் காலம்;;!
இழப்பும் அவலமும் !
எமக்கு யுத்தகாலம்.!
நேற்றைய பேச்சு !
இன்று இல்லை!
இன்றைய உயிர் !
நாளை இல்லை.!
நாங்கள் இழப்பது !
நீங்கள் பெறுவதற்கு!
இழப்பதோ உயிர்கள் !
பெறுவதோ வாக்குகள்.!
போதும்!!
எதிர்பார்த்து ஏமாந்து போவதிலும்!
எதிர்கொண்டு எழுவதே மேல்
தம்பா