தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

அயோத்தி

முத்துசாமி பழனியப்பன்
இந்துக்களே முஸ்லீம்களே!
தந்து கொண்டே இருக்கும் காலத்திடமிருந்து!
இதோ நமக்காக இன்னுமொரு வாய்ப்பு!
நாளையோ மறுநாளோ எப்போதோ!
வரப் போகிறது அயோத்தி தீர்ப்பு!
நாம் மனிதர்கள் என்று சொல்லிக் கொள்ள!
செய்த தவறுகளிலிருந்து நம்மை மீட்டெடுக்க!
புதுப்பித்த உறவுகளுடன் தொடர்ந்து செல்ல!
மூதாதையர்கள் மேல் விழுந்த கறை நீக்க!
இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்வோம்!
உலகம் தன்னைக் கிள்ளிப் பார்த்து!
உணர்ந்து கொள்ளட்டும் இது நனவென்று

இன்னுமொரு..உயிர்த்தெழு.. காத்திரு

நடராஜா முரளிதரன், கனடா
இன்னுமொருமுறை எழுதுவேன்.. உயிர்த்தெழுந்து பார்.. காத்திருப்பேன்!
!
01.!
இன்னுமொருமுறை எழுதுவேன்!
------------------------------------!
நான் சிறு பையனாக!
இருந்தவேளை!
எனது அம்மம்மா சொல்வாள்!
தான் பிறந்த வாழ்ந்த!
ஓடு வேய்ந்த!
சுண்ணாம்புக் கட்டிட வீடு பற்றி!
ஊடுருவி உறைந்து!
காலக்கண்ணாடியில் படிந்து!
சடத்துவமாய் காட்சி தந்து!
மூலக்கூற்றுக் கவர்ச்சி விசையிலிருந்து!
பிரிந்து அவை!
எங்கே செல்ல முடியும்!
அந்தவேளையில்!
அது அழிக்கப்பட்டு!
அதன்மீது குந்தியிருந்தது!
இன்னுமோர் சீமெந்துக் கட்டிட வீடு!
என்னுள் அடங்கிய!
ஆர்ப்பரிப்புச் சுழல்களின்!
மூல இருப்பை!
சுருங்கிய ஆதாரத்தின்!
மைய மோகிப்பை!
உந்தித்தள்ளிய விசையின்!
திமிறலை!
என்னால் எடுத்துரைக்க முடியாது!
சூழ இருந்தது தோட்டம்!
மா பலா வாழை மாதுளை!
எலுமிச்சை வேம்பு பனை தென்னை புளியென!
எல்லாமே அங்கு பூத்துக் கிடந்தது!
கல் விளைந்த அப்பூமியில்!
என் முன்னோர் பயிர் விளைக்க!
முனைந்த கதை!
கழிவிரக்கத்தால்!
இங்கு பாடுபொருள் ஆகியது!
எனது அப்பு பென்சனில் வந்து!
அந்த மண்ணுக்குள்ளே!
புதைந்து கொண்டு!
வெளியே வர மறுத்தார்!
தனது ஊனினை உருக்கி!
ஓர் தவம் புரிந்தார்!
பச்சைத் தாவரங்களின்!
தழுவல்களுக்கிடையில்!
சேர்ந்து சுகித்த!
காலங்களின் வதையை!
மோதி உராய்ந்து!
சுக்கிலத்தைச் சிதறியும்!
கலத்தில் ஏற்றியும்!
ஏறியும் புரண்டும்!
உச்சத்தில் ததும்பியும்!
மது வேண்டியும்!
திளைத்து நின்ற!
இழந்த அந்த மண்ணின்!
வரலாற்றை!
நான் எப்படியும்!
இன்னுமொருமுறை எழுதுவேன்!
!
02.!
உயிர்த்தெழுந்து பார்!
-------------------------!
நீ கறை படிந்தவன்!
எப்படி எமது புனிதப்போரில்!
உன்னை எம்மோடு!
இணைத்துக் கொள்வது!
கங்கையிலே மூழ்கி!
இமயமலையின் உச்சியிலே!
ஏறியமர்ந்து எத்தனை!
தவமியற்றினாலும்!
உனது பாவங்களைக்!
கழுவ முடியாது!
உனக்குத் தேவர்கள்!
வரமளித்து!
உன்னை மீட்டெடுப்பார்கள்!
என்று மனப்பால் குடியாதே!
நீ மதம் மாறிப்!
பாவமன்னிப்புக் கோர!
எந்தத் திருச்சபையும்!
உன்னை அனுமதிக்கப் போவதில்லை!
நாங்கள் புனிதர்கள்!
அதனால்!
எத்தகைய கேள்விகளுக்கும்!
உட்படுத்தப்பட முடியாதவர்கள்!
ஆதலால் தீர்ப்பு வழங்கும்!
பேறு பெற்றவர்கள்!
எனவேதான் உன்னைச்!
சிலுவையில் அறைகின்றோம்!
முடியுமானால்!
மூன்று நாள் கழித்து!
உயிர்த்தெழுந்து பார்!
!
03.!
காத்திருப்பேன்!
-------------------!
ஒடுங்கிய உடற்கூட்டிலிருந்து!
வழிந்து விழுந்த!
ஊனமாய்!
எகிறிப் பாய்ந்த!
இச்சைகளாய்!
இன்னும் என்னவாயோ!
எல்லாம் சில!
என்னுள் அடியுண்டு கிடக்கின்றன!
அனைத்தையும் சுமந்து கொண்டு!
எனது நடைபாதைப் பயணம்!
தொடருகின்றது!
விளங்காத கதையொன்றை!
வெறி கொண்டு வாசிக்கும்!
சிலரைப் பார்த்து!
அசட்டை செய்யாது!
அகன்று கொண்டிருக்கிறது!
பெரும் மக்கள் கூட்டம்!
அந்தக் கூட்டம்!
எழுப்பிய பேரொலி!
இன்னும் ஓயவில்லை!
அது எழுப்பிய!
அலை வெள்ளத்தில்!
அனைவரும்!
அடித்துச் செல்லப்பட்டனர்!
அன்றொரு நாள் நான்!
காலணியற்ற பாதத்துடன்!
நடந்து கொண்டிருந்தபோது!
பாதம் பதித்த நிலமெலாம்!
எமது நிலம் என்றார்கள்!
இன்னும் சிலர் ஆங்காங்கே!
ஓடிந்து கிடந்த!
துண்டுப்புலங்களையும்!
தங்களது சொந்த நிலப்பரப்புக்கள்!
என்று கூறினார்கள்!
கடும் பனியில் நுழைந்து!
பயணம் அமைந்ததுவாய்!
பெருந்தூரம் அலைந்தாகி விட்டது!
இன்னும் ஏன் அவை!
என் நினைவுச்சுழியில்!
உக்கி அழிந்து விடவில்லை!
மரபணுக்களில் அவை!
அமர்ந்து இன்னும்!
பல்லாயிரம் வருடங்கள்!
பயணிக்கும் என்று!
எவனோ ஒரு கவிஞன்!
கூறும் நாளை எதிர்நோக்கிக்!
காத்திருப்பேன்

விடைபெறல்

பஹீமா ஜஹான்
**************!
மழை கசிந்து கொண்டிருக்கும்!
இருள் தேங்கிய அதிகாலையில்!
உங்கள் நினைவுக் குறிப்புகளைப்!
புரட்டிக் கொண்டிருக்கிறேன்!
பிசு பிசுக்கும் புல் வெளியின்!
வேர்களிடையே தேங்கிக் கிடக்கிறது!
நேற்றைய பெரு மழை!
!
நதிகள் பெருக்கெடுத்தோடும்!
நிர்க்கதி மிகுந்த தீவில்!
இந்த மழையை!
யாருமே வரவேற்றதில்லை!
உங்களிடமிருந்து!
பிரிவின் போர்வை எடுத்து!
எனை மூடுகிறேன்!
!
என் நதி சுமந்து வந்த!
திரவியங்களனைத்தையும்!
உங்களிடமே கொடுத்தேன்!
!
திடுமென வருமோர்!
காட்டாற்று வெள்ளத்தில்!
என் கரை வளர்த்த மரங்கள்!
இழுபட்டுச் செல்லாதிருக்கப்!
பின்னிப் பின்னிப் பிணைந்திருக்கும்!
பெயர் தெரியாப் பெருங்கொடிகள்!
!
நனைந்த பூமி உலர்ந்திட!
நாளை வரும் கோடையில்!
உங்கள் நதித் தீரங்கள் ஊடாக!
ஊற்றெடுத்து ஓடிக் கொண்டிருக்கும்!
என்றென்றைக்குமான!
என் குரலோசை!
பஹீமாஜஹான்

கைதட்டுங்கள்! காதல் தோற்றுவிட்டது

ரசிகவ் ஞானியார்
அன்று பார்த்தது போலவே..!
இன்றும் இருப்பாயோ?!
பரிட்சை தோல்விக்கே!
பயந்தாயே..?!
இப்பொழுது!
சின்ன சின்ன தோல்விகளை ...!
எப்படித் தாங்கிக்கொள்கிறாய்?!
யதேச்சையாய்!
கடைவீதியில்….!
காணநேர்ந்தால் புன்னகைப்பாயோ?!
கல்லூரி இருக்கை மீது!
தாளம் போடும் பழக்கத்தை...!
விட்டுவிட்டாயா? இன்னமுமிருக்கிறதா?!
அன்றுபோலவே இன்றும்!
மழைத்துளிக்குள் ...!
முகம்புதைத்து விளையாடுகிறாயா?!
ஒரு இலையுதிர் காலத்தில்!
சருகு மிதித்து ...!
சந்தோஷப்பட்ட அந்த!
குழந்தைதனம் இன்னமும் இருக்குமா?!
இப்படி!
எங்கு இருந்தேனும்!
எல்லா சந்தர்ப்பங்களிலும்..!
சின்ன சின்ன நிகழ்வுகளிலிருந்து கூட!
காதலைப் பிரித்தெடுக்கத் தவறுவதில்லை...!
பிரிந்து போன காதலர்கள்!!
ஆயுள் முழுவதும்...!
ஆழமாய் மிக ஆழமாய்!
காதல் நினைவுகளை...!
அசைபோடுவதற்காகவேனும்!
காதல் பிரிவு அவசியம்தானோ?!
!
- ரசிகவ் ஞானியார்
K.Gnaniyar!
Dubai

பின்னங்கால் வடு

எம்.ரிஷான் ஷெரீப்
உதிர்ந்த சருகு போலாகிவிட்ட!
அப்பாவுக்கு முந்தியவர்கள்!
எப்பொழுதோ நட்டுச் சென்ற!
முற்றத்து மாமரம்!
அகன்ற நிழலைப் பரப்பி!
மாம்பிஞ்சுகளை!
பூக்களைப் பழங்களை வீழ்த்தும்!
தண்டின் தடித்த பரப்பிலோர் நாள்!
என் பெயர் செதுக்கினார் அப்பா!
தடவிப்பார்க்கிறேன்!
கசிந்து காய்ந்த தழும்பின்!
நெருடலும் அப்பாவுமாக!
விரல்களில் உறைகிறது நினைவுகள் !
இறுதியாக அவர் மடியிலமர்த்திச்!
சொல்லித்தந்திட்ட வேளையில்!
விரிந்திருந்த அரிச்சுவடியின்!
எழுத்துகள் ஒவ்வொன்றிலும்!
நகர்ந்த என் பிஞ்சுச் சுட்டுவிரலின் அழுத்தத்தில்!
நகக்கண்ணில் வெள்ளை பூத்தது!
எழுத்துக்கள் குறித்துநின்ற!
விலங்குகளுக்கும் கூட!
உயிரிருந்திருக்கும் அப்பொழுது !
வீட்டின் கொல்லையில்!
அகன்ற பெருங்கூட்டுக்குள்!
அழகிய பூமைனா வளர்ந்தது!
விழி சூழ்ந்த மஞ்சள் கீற்று!
மென்சதை மூடித்திறக்கும் கருமணிகள் உருள!
நாற்சூழலுக்கும் கேட்கும் படி!
தன் சொண்டுகளிலிருந்து!
எப்பொழுதுமேதேனும்!
வார்த்தைகளை வழியவிட்டுக் கொண்டிருக்கும்!
அதுதான் முதலில் அலறியது!
கப்பம் கேட்டு!
ஆயுதங்கள் நுழையக் கண்டு !
பீதியில் நடுங்கிப்!
பதைபதைத்து நாங்கள்!
ஒளிந்திருந்த தளத்துள்!
பலத்த அரவங்களோடு!
அப் பேய்கள் நுழைந்திற்று!
ஏதும் சொல்ல வாயெழாக் கணம்!
கோரமாயிருந்தவற்றின் அகலத்திறந்த!
வாயிலிருந்து கடுஞ்சொற்களும்!
துப்பாக்கிகளில் சன்னங்களும் உதிரக்கண்டு!
மேலுமச்சத்தில் விதிர்விதித்து!
மூர்ச்சையுற்றுப் போனேன் !
விழித்துப் பார்க்கையில்!
பிணமாகியிருந்தார் அப்பா!
ஊனமாகியிருந்தேன் நான்!
அம்மாவும் அக்காவும்!
எங்கெனத் தெரியவில்லை!
இன்றுவரை !
குறி பிசகிய!
துப்பாக்கி ரவை விட்டுச் சென்ற!
ஒற்றைக்காலின் சாம்பல் வடு!
அப்பா, அம்மா, அக்கா, சுற்றம் குறித்த நினைவுகளை!
இனி வரும் நாட்களிலும் ஏந்தி வரக்கூடும்

உனை ஈர்க்காவொரு மழையின் பாடல்

எம்.ரிஷான் ஷெரீப்
நான் மழை!
ஈரலிப்பாக உனைச் சூழப் படர்கிறேன்!
உன் பழங்கால ஞாபகங்களை!
ஒரு கோழியின் நகங்களாய்க் கிளறுகிறேன் !
எனை மறந்து!
சிறுவயதுக் காகிதக் கப்பலும், வெள்ள வாசனையும்!
குடை மறந்த கணங்களும், இழந்த காதலுமென!
தொன்ம நினைவுகளில் மூழ்கிறாய்!
ஆனாலும்!
உன் முன்னால் உனைச் சூழச்!
சடசடத்துப் பெய்தபடியே இருக்கிறேன் !
உனைக் காண்பவர்க்கெலாம்!
நீயெனைத்தான் சுவாரஸ்யமாய்க்!
கவனித்தபடியிருக்கிறாயெனத் தோன்றும்!
எனக்குள்ளிருக்கும் உன்!
மழைக்கால நினைவுகளைத்தான்!
நீ மீட்கிறாயென!
எனை உணரவைக்கிறது!
எனது தூய்மை மட்டும் !
இன்னும் சில கணங்களில்!
ஒலிச் சலனங்களை நிறுத்திக்!
குட்டைகளாய்த் தேங்கி நிற்க!
நான் நகர்வேன் !
சேறடித்து நகரும் வாகனச்சக்கரத்தை நோக்கி!
'அடச்சீ..நீயெல்லாம் ஒரு மனிதனா?'!
எனக் கோபத்தில் நீ அதிர்வாய் !
எனைத் தனியே ரசிக்கத் தெரியாத!
நீ மட்டும் மனிதனா என்ன?

பங்கருக்குள் இருந்து ஒரு

தம்பா
மூச்சுக்காற்று!
----------------------------------------------------!
கனரக பீரங்கிகள்போல் அதிர்ந்து எழுகின்றன!
பேச்சுக்கள்.!
தலைக்குமேல் செல் போல் கூவிச் செல்கின்றன!
அறிக்கைகள்.!
கிளஸ்தர் குண்டுகள் போல் சிதறி விழுகின்றன!
உறுதி மொழிகள்.!
கூத்தும் கரணமும் !
இது ஒரு தேர்தல் காலம்;;!
இழப்பும் அவலமும் !
எமக்கு யுத்தகாலம்.!
நேற்றைய பேச்சு !
இன்று இல்லை!
இன்றைய உயிர் !
நாளை இல்லை.!
நாங்கள் இழப்பது !
நீங்கள் பெறுவதற்கு!
இழப்பதோ உயிர்கள் !
பெறுவதோ வாக்குகள்.!
போதும்!!
எதிர்பார்த்து ஏமாந்து போவதிலும்!
எதிர்கொண்டு எழுவதே மேல்

இடம்.. அலைபாயுதே.. மேய்ச்சல் நிலம்

கி.அற்புதராஜு
01.!
இடம் !
--------------!
பேருந்தில்.... !
குழந்தையுடன் நின்ற !
அம்மாவுக்கு !
எழுந்து இடம் கொடுத்தார் !
பெரியவர் ! !
அம்மா உட்கார்ந்ததும் !
குழந்தை தாவியது !
நின்றுக் கொண்டிருந்த !
அப்பாவிடம்...! !
!
02.!
அலைபாயுதே !
---------------------- !
என்னதான் நம் !
உடம்பு ஆண்டவனை !
தரிசித்தாலும்... !
மனசு என்னவோ !
வெளியில் விட்ட !
செருப்பின் மீதுதான்...! !
!
03.!
மேய்ச்சல் நிலம் !
--------------------------- !
'பயணங்களில்... !
ஜேம்ஸ் ஹார்ட்‌லீ சேஸோ, !
சுஜாதாவோ... !
யாருடைய நாவலை படித்தாலும், !
ஆவலுடன் மேய்கிறோம்... !
பக்கத்து இருக்கையில் இருப்பவர் !
படிக்கும் தினசரியை..!'

பூக்குங்காலம்

கருணாகரன்
நான் நானாக இருப்பதிலும் !
நீ நீயாக இருப்பதிலும் !
ஏன் நம்மிடையே ஓயாத பிணக்கு? !
உன்னை என்னுள் திணிப்பதையும் !
என்னை உன்மீது ஏற்றுவதையும் வெறுக்கிறேன். !
உன் மகிழ்ச்சியை நீயே பாடுவதிலும் !
என் பாடல்களை நானே இசைப்பதிலும் !
ஆனந்த முண்டல்லவா? !
உனது கனவுகளை நீயே வரைந்துகொள் !
எனது வண்ணங்களை நானே குழைக்கின்றேன் !
காலம் ஒரு பதிய பூவாய் மலரட்டும் !
வானத்தில் அதன் மலர்ச்சி ததும்பட்டும். !
-கருணாகரன் !
நன்றி: !
’ஒரு பொழுதுக்காகக் காத்திருத்தல்’ !
மகிழ் வெளியீடு (ஈழம்)

தப்பித்து வந்தவனின் மரணம். !

ரோஷான் ஏ.ஜிப்ரி
நன்பனும் இல்லை,உறவும் இல்லை அவன்.!
முகம் மளித்து மூன்று,நான்கு வருடம் இருக்கவேண்டும்.!
தாடிக்குள் ஒளிந்திருந்தான் கரடியாய்.!
எங்கேயோ பார்த்த பரிற்சயத்தில்தான் பேசத்தொடங்கினான்.!
வாழ்வது பற்றிய கனவுகளின் மூட்டைகளை!
மாராப்பாய் கட்டி தோளில் போட்டபடிதான் வந்திருக்க வேண்டும் .!
சட்டி ,பானை ,உலாமூடி,பிங்கான் ,அகப்பயேன குடும்பமா!
வாழ்வதிலிருக்கும் அலாதியை சொல்லிவிட முடியாது எளிதில் என்றான்.!
காண்டா மிருகங்களின் கால்களின்கீழ் பட்டு !
அவனது உலகமே தொலைந்ததாய் கதறினான் .!
நெருப்புமழை பொழிந்த வானத்தின் கீழ் வசித்ததாகவும்,!
குரூரமான எல்லா விஷஜந்துக்களையும் பார்த்ததாகவும்,!
பயத்தின் நடுக்கம் மேலிட தழுதழுத்த குரலில் சொன்னான்.!
வாழ்வு பற்றிய பசி, தாகம்!
அவனது கண்களிலிருந்து உதிர்ந்து விழுந்தது நெருப்பின் சாயலில்.!
வயிற்றை இறுக தடவிய படி ஐயா என்றவாறு சரிந்தான் !
மீண்டெழ முடியாதபடி சாவின் மடியில்.!
இறுக மூடிய விரல்களை பிரித்தபோது .....,!
உள்ளங்கையில் ஒரு பிடி மண்ணிருந்தது .!
அவனது ஊரினுடயதாய் இருந்திருக்க வேண்டுமது.!
மரண வாக்குமூலமாய் என்னிடம் கூறியதை பார்த்தால்!
இவன் பொய் சொல்லியிருக்க மாட்டான். !
என்பதை எண்ணியெண்ணி,பேய் பிடித்தது போல் !
அதற்கு பின்வந்தநாட்கள் தூங்கவே இல்லை.!