ஆசிரியர் போற்றுதும் - அகரம் அமுதா

Photo by FLY:D on Unsplash

அஞ்சில் எமைவளைத்து!
அமுதனைய கல்வியினை!
நெஞ்சில் நிறைக்கின்ற!
நேர்த்தியெலாம் கற்றவரே!!
பேசரிய மாண்பெல்லாம்!
பிள்ளைகள் எமைச்சேர!
ஆசிரிய பணிசெய்யும்!
அன்பின் தெய்வங்காள்!!
பொற்போடு எமைநடத்திப்!
புகழ்மணக்கும் கல்வியினைக்!
கற்போடு கற்பிக்கும்!
கடமையிற் பெரியோரே!!
குன்றளவு கொடுத்தாலும்!
குறையாத செல்வத்தை!
இன்றளவும் எமக்களித்து!
இன்புறும் வள்ளல்காள்!!
ஈன்றோரின் மேலாக!
எம்நெஞ்சில் நிறைபவரே!!
சான்றோராய் எமைமாற்றும்!
சாதனைகள் புரிபவரே!!
எச்செல்வம் அளித்தாலும்!
எச்சமின்றித் தீர்வதுண்டு!
மெச்சிநீங்கள் அளித்தசெல்வம்!
விளிவின்றி வளருமன்றோ!!
அன்னையே தெய்வமென்றும்!
அன்பே தெய்வமென்றும்!
கன்னின்றோர் தெய்வமென்றும்!
கதைகள்பல உண்டெனினும்!
பள்ளிக் கூடமெனும்!
பண்பட்ட கோயிலின்!
உள்ளே எழுந்தருளும்!
உயர்தெய்வம் நீங்களன்றோ!!
தாய்சொல்ல முதன்முதலிற்!
சேய்பேசும் அம்மொழியே!
தாய்மொழியாம் என்றெவரும்!
சாற்றும் மொழியினையும்!
சேய்நாங்கள் தப்பின்றிச்!
செப்புதற்குக் கருத்துடனே!
ஆய்ந்தறிந்து ஊட்டுகின்ற!
அன்னையரும் நீங்களன்றோ!!
தரிசை சீர்செய்து!
தக்கபடி ஏர்நடத்தி!
வரிசை பிடித்துவிதை!
வார்த்திடுவர் வேளாலர்!
அறிவு நீர்பாய்ச்சி!
அகந்தைக் களையகற்றி!
செறிவுடையோ ராய்எம்மைச்!
செய்உழவர் நீங்களன்றோ!!
சிலையின் இறுதிநிலை!
சீர்மிகு கண்திறப்பாம்…!
விளையும் பயிரெமக்கோ!
விழிதிறப்பே முதல்நிலையாம்...!
எண்ணோடு எழுத்தென்னும்!
இருகண்கள் திறக்கின்ற!
திண்ணிய பணிசெய்யும்!
சிற்பியரும் நீங்களன்றோ!!
அன்றாடம் எமைநாடி!
அறிவு புகட்டுமுமை!
இன்றிந்நாள் எம்நெஞ்சில்!
இருத்திப் புகழ்கின்றோம்!!
வாழ்நாள் முழுவதையும்!
மாணவர் எமக்களித்து!
வீழ்நாள் இலாக்கல்வி!
விளைக்கும்நீர் வாழியவே
அகரம் அமுதா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.