ஈன்றெடுத்து எனை வளர்த்து!
கண்டடைந்த சுகம் யாவும்!
என்னைப் பொருத்த மட்டில்!
ஏதுமில்லை என அறிவேன்!
எனையே நான் உணரும்!
காலம் கடக்கும் வரை!
உன்னுடனே நின் விழிதனில்!
மணியெனப் பொதித்துக் கொண்டாய்!
உறுத்தலெனும் வலி கண்டும்!
எனக்காகப் பொருத்துக் கொண்டாய்!
நீயடைந்த இடர் யாவும்!
சொல்லாமல் நானறிவேன்!
துயர் யாவும் களைந்திடவே!
பெற்ற செல்வன் பொறுப்புணர்நதேன்!
இன்று முதல் சேயாகி!
கண்மணியாய் நீ இருப்பாய்
வினோத்குமார் கோபால்