சபலம் நிறைந்த கூட்டத்தில்!
என்னை நெருங்கி!
பெண்கள் பற்றிப் பேசினான்!
வீடு, வாசல், படிப்பு!
அப்பா, அம்மா, காதலன் என!
எல்லோரையும் பற்றிக் கதைத்து!
நேரம் பார்த்து விடைபெற்று!
இயல்பாய் இருந்தேன்!
நேசம், காதல் போன்ற!
உணர்ச்சிகளற்று!
ஸ்நேகம் பேணிக் கை குலுக்கி!
காதலின்றிப் பிரிவது கடினமாயில்லை.!
-தான்யா!
(கணையாழி)

தான்யா