மீன்பிடிக்கிறவர்கள்!
வருகிறார்கள்!
வலையில்லாமல்!
வார்த்தைகளோடு!
எந்தமீன் என்ற!
எந்த இலக்கும் இல்லை!
பிடிபட்ட மீன்களெல்லாம்!
பிரமாதமான மீன்கள்!
பிடிபட்ட மீன்களே !
பிடித்தமான மீன்கள்!
பிரமாதம்...பிரமாதம்!
புகழோசைக்குள்ளே!
சமையல் ஆசையும்தான்!
சேர்ந்திருக்கிறது!
பிச்சினிக்காடு இளங்கோ( சிங்கப்பூர்)
பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)