1.அந்தி வேளை!
இன்றைய நாட்களில் என்னவோ என்னிலிருந்து!
குறைந்து கொண்டுபோவதைக் காண்கிறேன்.!
பெண்களின் கலகலப்பில்!
சிரிப்பில்!
நளினத்தில்!
நாணத்தில்!
புலன்களைச் செலுத்துவதில் இருந்து வந்த விருப்பம்.!
பழைய சம்பவங்கைளைக் கிளறிவிட்டு!
09.02.90 வெள்ளி மாலைக்குள்!
சாலை மணலுக்குள் செருப்பையும் மீறி!
புதையுண்டு போகும் அவள் பாதங்கள்!
நடையில் சாந்தமில்லாத வேகமுமாய்!
முன்பின் புறங்கள் சிறுமியரின் காவலுமாய்!
அவள் வந்த பாதையை மாற்றிப் போகையில்!
என்னை மனம் முழுவதும் நிறைத்திருப்பாள்!
ஒரே கருப்பையில் தரிக்காத சகோதரியாய்…….!
நீண்ட நாட்களின் பின்னும் !
ஒரு முடிவுக்கும் அவள் வரவில்லை என்பதை!
அவள் மறைவதில் இருந்த அக்கறை சொன்னது.!
பலம்பெற்ற பெண்மையை அவளுக்கே உரியதாக்கியது!
இதயத்தை நோண்டி குப்பைக்குள் வீசிய வேகம்!
பக்கத்து மரத்திலாவது தாவிக்கொள்ள!
சுதந்திரம் இல்லையா?!
காக்கை விரட்டிய குயில் குஞ்சுக்கு.!
சலனங்கைளை சகித்துக்கொள்ள முடியாத!
மென்மை இதயத்துடன் வாழ்பவன் நான்.!
வெள்ளிக் குறிப்பினை!
நண்பர்களிடம் கதைத்துத் தீர்ப்பதிலும் அர்த்தமில்லை!
ஓடிப்போய்!
அவள் காதல் கடிதங்களைப் புரட்டுவதிலும்!
அர்த்தமில்லை.!
அவள் உருவத்தைப் புதைத்திருக்கும் இதயத்திலும்!
அர்த்தமில்லை.!
எதிலும் அர்த்தமில்லை என்பதை உணரவே செய்தேன்.!
பழைய நண்பர்களின் மனங்களின் மாதிரியையும்!
அந்த ஒரு சில வினாடிக்குள்!
என் பெருமூச்சு உசுப்பிக் கொண்டுபோனது.!
எத்தனையோ வகையான கேள்விகளும்!
என் தலைக்குள்!
விடை இல்லாமல் தேங்கிக்கிடப்பதைக் காண்கிறேன்.!
நன்றி-!
செப்டம்பர் 1991 - முனைப்பு !
!
2.கள்ளன் விளையாட்டு!
என்னைச் சுற்றி வட்டம் போட்டு!
பொடியன் பொடிச்சுகளாய்!
வயதுகள் பத்தும் பன்னிரண்டும்!
கூடிக் கை கோர்த்து!
ஆள்மாறிஆள் தூரவிரட்டும் நான்.!
நிலாவென்றும் இருளென்றும்!
அலைந்து தேடிப்பிடிக்கும்!
கள்ளர்களாய் எல்லோரும்.!
“உள்ளங் குரும்பை!
உருகட்டைப் பனம் பழம்!
மானூடு தேனூடு!
அடிச்சு குடிச்சு!
அடிபட்ட கள்ளன்!
மா!
ஊ !
மர தள்ளு”!
ஒவ்வொருவரும் படுக்கையில்!
நான் தனித்து நிற்கையில்!
ஒருத்தன் கொல்லையில்!
மற்றவன் மாவில்!
அடுத்தவன் அடுக்களைக்குள்.!
ஒருத்தி ஓலைக்குள்!
ஒருத்தி உம்மாவுக்குள்!
ஒருத்தி மட்டும் என் நெஞ்சுக்குள்!
இவளையே தேடிப்பிடிப்பதில் என் கரிசனை.!
ஓதாமல் படிக்காமல்!
அன்றைய நானும்!
அன்றைய நண்பரும் கள்ளர்களாய்…….!
நன்றி!
20121992 - வீரகேசரி

டீன்கபூர்