பனியும்.. சிரிப்பதும் .. காத்திரு - கிரிகாசன்

Photo by engin akyurt on Unsplash

பனியும் வெயிலும் இவளே.. சிரிப்பதும் அழுவதும் ஏன்??.. காத்திரு ! காற்றில் வருவேன்!
01.!
பனியும் வெயிலும் இவளே!
---------------------------------------!
மானென் றிடவேழம் மதமெடு!
பூவும்பொலி தேனென் றழகொடு!
நானும் உயிர்தானும் துடிபட!
காணும் அவள் தேரென் றுலவிட!
வானும் மழைகாணும் சிறுமயில்!
ஆடும் எனப்பூவை நடைகொள!
ஏனென் கனவாகும் நினைவுகள்!
காணும் மனமேகு மிவளிடை!
பாலும் பழநீரும் கலந்திடப்!
பாயும் மதிதாரு மொளிகொள!
நூலும் எனக் காணு மிடைகொள!
நூறும் எனயாரும் அளவிட!
மேலும் பலமின்னும் நினைவெழ!
மேனிமழை கொண்டோர் நிலமென!
ஆலும் அதுதாரும் நிழலென!
ஆசைமொழி கூறிக் குளிர்பவள்!
சேனைபடைகொண்டோர் அரசெனச்!
சீறும் பெருவேங்கை திமிரென!
தான்ஐம் பொறியாவும் ஒருங்கிடத்!
தாரும் பெரிதாகும் சுவையென!
பூநெய்தனை உண்ணும் உயிரெனப்!
போதில் இருள் கூடும் பொழுதிடை!
ஏனை மலரென்னும் கணைகளை!
என்னில் எறிந்தாடு மிவள் அவள்!
தானோ? எமன்போலும் உயிர்கொளத்!
தாவும் எருதேறும் நிலைதனில்!
ஊனும் உருயாவும் உருகிட!
உள்ளம் மெழுகென்றே இளகிட!
கோனும் அவன் கொள்ளும் வாளினைக்!
கொண்டே இருகண்கள் வீச்சிட!
நானும் அழிவேனோ என்னுடன்!
நாளும் உயிர் கொல்வாள் போரிட !!
நாளும் வரும் என்னைத் துணையென!
நானும் மலர்மாலை தோளிட!
தோளும் வலி கொள்வோ னிவனிடம்!
தோற்றே னெனத் துறவிப் தனமொடு!
நாலும் அதில் நாணம் மிழந்திட!
நேரம் மலர்மூடும் பனியிடை!
கோலம் நிலவென்றே நிகரிட!
கொடுமை தனை விளையென் றுழறுவள் !!!
!
02.!
சிரிப்பதும் அழுவதும் ஏன்??!
-----------------------------------------!
நீலமுகிலோடும் வானிலெழுந்திடும்!
நித்திய சூரியனே - நினைப்!
போலும் ஒளியுடன் வாழும்மனிதரும்!
பாரிலிருக் கையிலே!
கால விதியிதோ மாலைமதி கெட்டு!
காணும் பிறை யொளியாய்-பலர்!
கோல மழிந் துயிர் கொள்ளும் துயருடன்!
கூடியிருப்ப தென்ன?!
மாலை மலர்ந்திடும் பூக்களும் உண்டதை!
மேவி இருள் பரவும் - அதி!
காலை மலர்களின் வாழ்வு ஒளிர்ந்திடும்!
காணும் இரண்டுவிதம்!
சாலை யோரம்மரம் கீழும் வாழ்ந்துவரும்!
சந்ததி யொன்றிருக்கும் - பக்கம்!
மேலு யரும்மாடி மெல்லிய பஞ்சணை!
மீது துயில் சிலர்க்கும்!
கானமிடும் நல்ல வானில் குருவிகள்!
ஊர்வலம் செய்யழகும் அங்கு!
கூனல் நிமிர்முகில் கூட்டங்கள் பஞ்சென!
கோலமிடும் எழிலும்!
தேனொளி மின்னிட வானிடை ஆயிரம்!
தீபங்கள் வைத்தவளோ - மன!
மானது ரம்மிய மாகக் களித்திட!
மஞ்சள் நிலவு வைத்தாள்!
ஆனதி வைசெய்த தேவியும் ஏனங்கு!
அத்தனை கோபங்கொண்டு - பல!
மான இடியுடன் பூமிஅதிர்ந்திட!
மின்னலை கொண்டுவைத்தாள்!
வானம் அழுவது போல மழையுடன்!
வாரிப் புயலடித்து - பெரி!
தான முரண்படும் பேய்மழை ஊதலும்!
ஏனோ நிகழவிட்டாள்!
பூவழுதால் இதழ்தேன்வழியும் அதைப்!
பூவுலகே யறியும் - அலை!
மேவுகடல் மீது மீனழுதால் அலை!
யோடு கலந்துவிடும்!
தாவும் முயல் என்றும் தாவியோடவேண்டும்!
தப்பிப் பிழைப்பதற்கும் - விதி!
யாவும் குறையின்றி சாதுவெனப் பிறந்!
தாலும் துயர் இருக்கும்!
பூவும் உதிர்ந்திடப் பொல்லாப் புயல்வந்து!
பற்றிடத் தேவையில்லை - மலர்க்!
காவும் மலைதொட்டு வீசும்தென்றல் தொட!
வீழும் விதிமுடியும்!
நோவும் அழுதிட நூறுதுன்பங்களும்!
நெஞ்சில் குடியிருக்கும் -இதை!
யாவும் அறிந்திடில் தோன்றும் எண்ணங்களில்!
உண்மை நிலைதிகழும் !
03.!
காத்திரு ! காற்றில் வருவேன்!!
--------------------------------------------!
தேனிற் குழைத்த தீங்கனியாய் !
தேவி எந்தன் அருகிருந்தாய்!
வானிற் குழைத்த ஓவியமாய்!
வாழ்வை மறந்து ஏன்சென்றாய்!
பச்சைப்பசுமைப் புல்வெளியும் !
பனிநீர் தூங்கும் அதனிதழும்!
இச்சையுடன் நீ பக்கமதில்!
இருந்ததை எழுந்து கூறாதோ!
கொத்துமலர்களின் தோட்டமென!
கோடிநிலவுகள் கூட்டமென!
நித்தம் அருகினில் நீ இருந்தாய்!
நினைவுகள் மீண்டும் வாராதோ!
வெற்றாய் விரியும் விண்ணில் நீ!
விட்டுச் சென்றது எங்கே சொல்!
உற்றே நோக்கும் உன்விழிகள்!
உயரச் சென்றது உண்மையெனில்!
பஞ்சு போன்றோர் வெண்மேகம்!
பரந்தநீலப் பிரபஞ்சம்!
விஞ்சும் எழில்வான் விரிதிசைகள்!
எங்கும்நீயே நீயேதான்!
சுட்டுத் தீய்க்கும் சூரியனும்!
சுடர்போல் நினது விழிதன்னை!
சுட்டி காட்டி எரிகிறதே!
சோர்ந்தே தவிக்கு மென்மனதை!
கட்டிக் காக்கமுடியவில்லை!
காற்றும் தீண்டிச் செல்லுகையில்!
பட்டுத் தழுவு முன்கர்ங்கள்!
பனிநீர்விழவும் உன் தேகம்!
தொட்டுக் காணு மின்பமென!
தோன்றச் சிந்தை வாடுகிறேன்!
வட்டச் சந்திரன் உன்வதனம்!
வடிவம் காட்டி எனைக்கொல்லும்!
சிட்டுக் குருவி ஜோடிகளும்!
சேர்ந்தே கிளையில் கொஞ்சுவதும்!
வெட்டிக் கொல்லும் வகையாக!
வேதனை யாகிக் கொல்லுதமா!
நின்னை பிரிந்து நானொருவன்!
நித்திலம் வாழுதல் நேர்ந்திடுமோ!
கண்ணை விழித்துக் காண்பவளே !
காதலன் வருவேன் காத்திரடி
கிரிகாசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.