கால்கள்.. பதுங்குகுழி !
01.!
கால்கள் !
--------------!
அப்போது பிறந்த!
கால்களை அப்பி நிற்கிறது!
செம்பருத்தி!
வண்டில்!
காலுடைந்து கிடக்கிறது!
வண்டில்!
உறுட்டிய கால்கள்!
வயசுக்கு விளைஞ்சகால்கள்!
கிளைஞ்சு நிற்கிறது!
பத்திரிகை!
அம்மி மிதித்த கால்கள்!
தனித்து!
விம்மி நிற்கிறது!
அம்மி.!
உடைந்தே போகும்கால்கள்!
உடைந்ததிண்ணையில்!
உடைந்து.!
கால் நூற்றாண்டைக்கடந்த!
இந்தப்போர்-பல!
கால் குடைந்து நூறைக்கடந்து!
!
02.!
பதுங்குகுழி !
----------------!
படைக்கலம் பயந்து!
அடைக்கலம் தந்த-ஆறு!
படைத்தலம் என்றான் ஒருவன்!
மெழுகுவர்த்தி!
உருகும் பிரார்த்தனை!
தேவாலயம் என்றான் ஒருவன்!
பிரசவம் முடித்து!
பிள்ளை முகம்பார்த்து!
வைத்தியசாலை என்றான் ஒருவன்!
மண்ணுப்போரில் மண்ணில் இருக்கும்!
மண்ணாய்ப்போவோரின்!
கோட்டை என்றான் ஒருவன்!
சத்தமாய்ப்போடு மொத்தமாய் அள்ளும்!
சவக்குழியே- இவர்கள்!
பதுங்குகுழி என்றான் அரசாங்கம்
சங்கைத்தீபன்