புதுவருடத்தை நோக்கி - சத்தி சக்திதாசன்

Photo by Tengyart on Unsplash

சக்தி சக்திதாசன் !
!
புத்தம் புதியதோர் !
புதுவருடத்தை நோக்கி !
புதியாய் மேற்கொள்ளும் !
புதுப்புனல் போன்றதோர் !
பயணம் !
சித்திரைத் திருமகள் !
இத்தரை மீது போர்த்தும் !
புற்தரை போன்றதோர் !
பொற்திரைக் கம்பளம் !
நிஜங்களைத் தேடி !
நிழல்களை மிதித்து !
நீயும் நானும் தேடிய !
நிலையற்ற முடிவுகள் !
கடந்து போகட்டும் !
கரைந்து மறையட்டும் !
கனிந்து வருவது புதிய !
கச்சிதமான வருடம் !
சூறாவளியாக தென்றல் !
சூறையாடிய கடற்கோள் !
வனியமான வாழ்க்கை !
சுடராகிப் போகட்டும் !
புரட்சிக் கவி பாரதி !
புனைந்த கவிதைகளை !
புதிய வேதமாய்க் கொண்ட !
புனர்ஜென்ங்கள் மலரட்டும் !
தமிழின் தனயர் கண்டேன் !
தழைத்து எழுகின்ற நிகழ்வு !
தரணியில் எனக்கு என்றும் !
தருவது இன்பம் தானே !
புதுவருடத்தை நோக்கி !
புலரும் பொழுதினிலே !
பொங்கும் உள்ளத்துடன் !
போகின்றேன் பயணமே
சத்தி சக்திதாசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.