உறைவு - அசரீரி

Photo by Jr Korpa on Unsplash

நாலே வருடங்கள் புணர்ந்ததும்!
ஒரு பிள்ளை மட்டுமே பெற்றுக் கொண்டதுமான!
யோனியையுடையவளாய்!
பெருமூச்சையும் சேர்த்தே!
நீள் கபுறுக்குள் அடக்கிவிட்டவள்!
அவளின் இளமையைப் பற்றியோ!
பற்றியெரிந்த ஏக்கங்கள் பற்றியோ!
பீறிட்டு வரப்பார்த்த விரகம் பற்றியோ!
குஞ்சி விறைக்காத காலம்!
எதையுமே பேசாமல் நகர்ந்திற்று!
இப்போது வருவதும் நின்றுபோயிருக்கும் அவளுக்கு!
எல்லா உணர்ச்சிகளும் சேர்த்துத்தான்!
மலைகளென உருவகம் செய்தெழுதிய!
அவளின் விதவைத் துயர் பற்றிய காலத்துக் கவிதையெல்லாம் பிழையோவென்று தோன்றுகிறது!
இக்கணம்!
அதையும் சுமந்து கடந்து விட்ட வலியும் திடமும்!
அவள் கொண்டிருக்கும் நியாயத்தால்!
இருபது வயதில் பிள்ளையிருக்கும் அவளின்!
உம்மாத்தனத்தின் புனிதத்திலிருந்தே!
வரலாறு அவள் பற்றி முதலாவதாகக்!
கதைக்கத் தொடங்கலாமினி!
அப்படியும் இல்லாமலும் போகலாம்!
ஆயினும்!
பெரும் பாறைக்கனத்துடன்!
துணியோடு உறைந்து தீர்ந்த அவளின்!
சுக்கிலத் துளிகளுக்கு நியாயம் தேடி!
அவர்கள் வருவார்கள்!
நீ முக்கியமாகத் தெரிந்து கொள்!
அவர்களுக்காய் சூரியன் கலந்த இந்திரியம்!
செலுத்தப்பட்டிருக்கும்!
!
-அசரீரி
அசரீரி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.