வானில் பறவைகள்!
வரிசையாய்ப் பறக்கின்றன,!
வாய்விட்டு எண்ணுகிறது குழந்தை-!
ஒன்று, இரண்டு, மூன்று!
என்றாக!!
மனிதனே,!
இந்த!
ஒழுங்குமுறை உனக்கு!
ஒத்துவரமாட்டேன் என்கிறதே!!
ஏக்கம்...!
ஏங்குகிறது மனது-!
இப்போது!
மண்டையோடுகளை!
மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கும்!
மனிதன்,!
எப்போது பார்க்கப்போகிறான்!
இதயத்தை!!
இயற்கையும்..!
மண பந்தங்கள்,!
பணத்தைப்!
பணத்துடன் இணைக்கின்றன!!
இவர்களைப் பார்த்துத்தான்!
இப்படிச் செய்கிறதோ!
இயற்கையும்-!
கரையில் உள்ளவரை!
கண்ணீர் விடவிட்டுக்!
கடலில் பெய்கிறதே!
மழை
செண்பக ஜெகதீசன்