காணாமல் போகிறார்கள்!
நின்ற இடம் விட்டு!
நிலை குலைந்தோடுகிறார்கள்.!
கைகால் இழக்கிறார்கள்!
கண்டதுண்டமாகிறார்கள்.!
கொல்லப்பட்டவர்களை!
காணாமல் போனார்கள் என!
கணக்குத் தருகிறார்கள்.!
முன்னகர்தல் பின்னகர்தல்!
பதுங்கல் பாய்ச்சலென!
எதுவும் பார்க்காமல்!
போரின் வெள்ளம்!
புரட்டிக் கொண்டோடுகிறது!
புகலிடமில்லா ஓரிடம்.!
முகவரிகள்!
முகங்களை தேடுகின்றன.!
காணாமல் போனவர்களிடம்!
கையெழுத்து வாங்கிப்போய்!
அனுப்பியவரிடம் காட்ட!
அஞ்சலகங்களில் மூட்டை மூட்டையாய்!
பதிவுக் கடிதங்கள்.!
காணாமல் போகிறார்கள்!
இனம் அழிக்கும்!
எதிரி படையில் சேர்ந்த வீரர்கள்!
களத்தில்!
காணாமல் போகிறார்கள்.!
-பட்டுக்கோட்டை தமிழ்மதி!
சிங்கப்பூர்
பட்டுக்கோட்டை தமிழ்மதி