நலம் விரும்பிகளே!.. காகித கப்பல்
வேல் கண்ணன்
01.!
நலம் விரும்பிகளே!!
----------------------!
நானிருப்பது கரையான்புற்றுக்குள்!
பாம்புகள் வருவதற்குள் வேறிடம் சென்றடைவேன்!
பறவைகளின் கூடு!
ஆமைகள் அடைகாக்கும் குழிகள்!
தவறினால் விழி திறந்த நிலம்!
ஊதாரிகளுக்கு உங்களின்!
கதவுகளிலும் சன்னல்களிலும்!
தெரியும் வானம் பற்றாது!
முடிவிலிகளை தேடிக்களைத்த!
கால்கள் இளைப்பாறுகின்றன அலைகளில்!
வெடிப்பில் கசியும் இரத்தத்தில்!
பசியாறுகின்றன மீன் குஞ்சுகள்!
வெளுத்து பிளந்த உதடுகள்!
ஈரக்காற்றில் சுவாசிக்கின்றன!
சுமந்த புத்தகங்கள்!
இறக்கைகள் அல்ல என்பதை நான் அறிவேன்!
சிலுவைகள் அல்ல என்பதை நீங்கள் அறிக!
படைப்பு அனுபவம் பார்வை உலகம் ;!
எனக்கும்.!
அவ்வப்போது!
காறியுமிழ்ந்த எச்சிலை துடைத்துவிடுகிறேன்!
மேல்விழுந்த கற்களை புதைத்துவிடுகிறேன்!
வீச்சமும் வடுக்களும் இருக்கத்தான் செய்கின்றன!
தளர்த்திய கச்சையின்!
இடைத்துணியின் பின்னிருக்கும்!
இளஉறுப்புகளினால் பெரிதான சலனமில்லை!
தன்னை சூடேற்றி கொள்வதை தவிர!
நேர்ப்பார்வையை தவிர்ப்பது நானல்ல.!
நீளஅகலங்களை குறித்து!
குழி வெட்டுதலுக்கோ!
சிதையூட்டுவதற்கோ !
சொல்லியனுப்ப வேண்டியதில்லை!
சில நொடிகளில்!
மரணிக்க நேரிடும் என்னை!
இந்த நதியே இழுத்து செல்லும்!
கரையொதுக்காமல்!
(ஆத்மாநாமிற்க்கு.... )!
!
02.!
காகித கப்பல்!
-----------------!
மண்வாசம் வீசும் திசையில் விரைகிறேன்!
வழியெங்கும் மழை!
எதிர் வரும் காற்றிலும் இழுத்து செல்லும் நீரிலும்!
பேரிரைச்சலும் பெரும் சேதத்தையும் ஏற்படுத்துகிறேன்.!
நீ அனுப்பிய காகித கப்பல் கடந்து செல்கிறது!
துளியும் சலனமில்லாமல்