ஏனிந்தப் பிரிவினை?
பவித்திரா
கனடாவிலிருந்து பவித்திரா !
அன்புசால் தமிழினமே! அமைதிசற் றடைந்திடுக! !
ஆறறிவை எமக்கிங்கு ஆண்டவன் அளித்தமை !
இன்புற வாழ்வுதனை இனிது களித்தற்கே! !
இடருடன் துயரும் இடையிடையே வருதல்தான் !
மன்னுமிவ் வையகத்தே மாண்புறு உயிர்கட்கு !
மீட்சியிலா நிகழ்வன்றோ? மேதினியில் இயல்பன்றோ? !
என்புருக உளம்நோக எதிர்கொண்ட செய்திகள்தாம் !
ஏக்கம்தனை யளித்து எமைவாட்டி நிற்பனவே! !
கண்ணெனப் போற்றிடும் மாவீரர் கனவுகளும், !
கதிரோனாம் தம்பியவன் கனிவான நினைவுகளும், !
நுண்ணிய ஆற்றலுடை மறவர்தம் கொடைகளும், !
நோன்பிரு தமிழன்னை மாதவப் பேறதுவும், !
மண்ணிழந்து மரபிழந்து மானம்தனைத் தொலைத்து, !
மகிழ்வின்றி வாழ்ந்திடும் மாந்தர்தாம் சொரிந்திட்ட, !
கண்ணீரும் செந்நீரும் களங்கமிலா வாழ்வுமங்கே !
காத்திடுமெம் நாடுதனை! கலங்காதீர் தெளிவடைவீர்!!
களத்தினிலே இடமளித் தணைத்த எம்தலைவன் !
கருணா என்கின்ற கனிவான பெயர்கொடுத்துத் !
தளத்தினிலே பெருந்தலையாய்த் திகழ்ந் திட வேயங்கு !
தக்கநல் பதவியும் தருணத்தில் வழங்கினான்! !
வளமிகு நாடுகட்கு வாழ்த்தியே அனுப்பிநின்றான்: !
வாஞ்சையுடன் சந்தித்து வருடிக் கொடுத்திருந்தான்! !
அளவிலா வாய்ப்புக்கள் அத்தனையும் பெற்றிருந்தும்,!
அறிவிலியாய்ப் போனதன் ம+மம்தான் பு£¤யவில்லை!!
போரியல் வரலாற்றில் புதிதல்ல இவையொன்றும், !
புல்பூண்டு நெல்வயலிற் களைதலென அவைகளையும்!
நேரகாலம் பார்த்திருந்து நீக்கிடுவார், பொறுத்திடுக! !
நீசர்கள் வாழ்வங்கு நிர்மூல மாகுமன்றோ? !
பாரதிர வந்ததுயர் பனியென விலகிவிடும்! !
பகலவனாம் தலைவனவன் ஒளிபட் டுருகிவிடும்! !
தூரமில்லை! தாயகத்தின் விடிவங்கு தெரிகிறது! !
துணையான மறவர்கள் தோள்களும் துடிக்கின்றன! !
!
வதந்திகளை நம்பாதீர்! வார்த்தைகளை அளவிடுவீர்!!
வடக்கெனவும் கிழக்கெனவும் பிரிவினைகள் பேசாதீர்! !
சுதந்திரமாய் நாமங்கு சுற்றிவந்த காலங்கள், !
சொந்தமெனப் பந்தமெனத் துணைநின்ற கோலங்கள்!!
இதந்தரு வாழ்வுதனை இன்றுநாம் மறக்கலாமா? !
ஏனிந்த வேறுபாடு? எவரிதன் மூலகர்த்தா? !
பதந்தரு வேளைதனில் பறித்திட வந்தவரைப் !
பகுத்தறிந்து புறம்தள்ளப் பக்குவமாய்ச் செயற்படுவீர்!!
திருமணங்கள் புரிந்ததும் சீர்வரிசை பேணியதும் !
சிறப்புற வாழ்வுதனைச் செம்மைப்ப டுத்தியதும் !
திருவிழா நாட்களிலே திசையெதிராய்ப் பயணித்து !
தித்திக்கும் விருந்துண்டு திரைகடல் எழில்கண்டு !
பருவமழை காத்திருந்து பயிர்செய்ய உதவிநின்று !
பயனுடனே விடுமுறையை நட்பிற்காய்ப் பேணிநின்று!
பெருமனதாய் நாமன்று பிணைந்துவாழ்ந் திருந்தோமே! !
பிரிவினைகள் பேசுகின்ற பாதகரை விலக்கிடுவீர்! !
ஆனையுடன் மோதவரும் ஓநாய்கள் அவரன்றோ? !
அழகியவெள் ளாடொன்று செம்மறியாய் மாறியதோ?!
மானமிகு சூரியனின் மஞ்சட்கதிர் தெறித்து !
மாய்ந்திடும் விட்டில் களாவாரி வரன்றோ? !
கானகத்து வேங்கையுடன் குள்ளநரிக் கூட்டமொன்று!
காலநேரம் பார்த்திருந்து கபடம் புரிகிறதோ? !
சேனைபல புடைசூழச் செந்தமிழர் திசைவந்த !
சிங்களமும் ஆரியமும் அடைந்தகதி மறந்தனரோ? !
ஒற்றுமையே பலமெனும் உயர்வாய்க் கியம்தனை !
ஒவ்வொரு தமிழ்மகனும் உணர்ந்து வாழ்ந்திருப்பின் !
இற்றைவரை வாட்டிடும் இனவேறென் றசொல்லும் !
என்றோ தொலைந்திருக்கும்! எம்தேசமும் விடிந்திருக்கும்! !
நற்றரையில் ஊர்ந்திருக்கும் சிற்றெறும்புக் குழுகாணீர்! !
நறைசேர் குளவிக் கூட்டம்தனை நோக்கிடுவீர்! !
மற்றையதம் மினத்தோடு மகிழ்ந்திருந் துறவாடி !
மனமுவந்து பகிர்ந்துண்ணும் காக்கைதனைக் கண்டிடுவீர்! !
பொறுமையுடன் எம்புலிகள் புரிகின்றார் சாதனைகள்! !
புவிதனிலே சந்தித்தார் பொல்லாத சோதனைகள்! !
நிறுவிடுவார் விரைவினிலே தாயகக் கோட்பாடு! !
நீதியுடன் நாம்வாழ நற்பணிக ளாற்றிடுவார்! !
மறம்காத்த தமிழினத்தின் சரித்திரத்தை முன்நோக்கி,!
மாறுபட்ட வேற்றுமையால் விளைந்த துயரறிந்து, !
உறவினருக்கும் நண்பருக்கும் ஊரிலுள்ள அனைவருக்கும் !
ஒற்றுமையின் மகத்துவத்தை ஒன்றிணைந் தெடுத்துரைப்பீர்