தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

காதலும் மதமும்

கொ.நூருல் அமீன்
'காதல்' கொண்டு உருவாகும் மதம். !
மதம் கொண்டு உருளும் காதல். !
காதல் பிடித் அலயும் ஒரு தல. !
மதம் பிடித் உருளும் பலர் தல. !
காதல் பிரிந்தால் ஓருயிர். !
மதம் பிரிந்தால் ஒரு சமுகம். !
காதல் உள்ளத்தின் உயிர். !
மதம் இறவனின் முகம். !
காதல் _---------- ஜனனம். !
மதம் -_ மரணம். !
சமயம் பார்த் வருவதில்ல !
காதல். !
சமயங்கள் வழிப்பட்டு வளர்வ !
மதம். !
காதலுக்கு வேண்டும் இரு !
மனம் சம்மதம். !
மதத்திற்கு மட்டும் போம் ஒரு !
மனம் சம்மதம். !
காதல் இருந்தால் உயிர்க்காலம் வர !
வாழ்வான் மனிதன். !
மதம் இருந்தால் உயிர் முடிந் !
வாழ்வான் மனிதன்......? !
காதல்.... !
மனிதனின் மதம்! !
-கொ.நூருல் அமீன்

காத்திருத்தலின் வலி

க.உதயகுமார்
பழுதடைந்துபோன!
என் வீட்டின் கதவுகளை!
என்றாவது!
நீ தட்டக்கூடும்!
என எதிர்பார்ப்புகளோடும் !
மௌனமாகிப்போன!
என் புல்லாங்குழலின்!
துளைகளில்!
உன் இசை குறிப்புகள்!
வந்தமரக்கூடும்!
என பரிதவிப்போடும்…… !
உன்னை தேடி வந்த!
அந்திமழையின் விசாரிப்புகளுக்கு!
பதில் கூறும் துணிச்சல் அற்று ,!
காத்துக்கொண்டே இருக்கிறேன் .. !
உனக்காக!
நான் வங்கி வைத்த கைகடிகாரம்!
நின்ற பின்னும்!
உன் மீள்வருகைக்காக!
காத்துக்கொண்டே இருக்கிறேன் .... !
உறைந்துபோன!
என நிகழ்காலம்!
மீண்டும் உயிர்பெறும்!
என்கிற பேராசையில் மிதந்தபடி!
காத்துக்கொண்டே இருக்கிறேன் ... !
நீ வரும் வரைக்கும்!
காத்திருத்தலின் வலியை!
உடைந்த!
என் புல்லாங்குழல் வழி!
இசைக்கத்தான் எத்தனிக்கிறேன்,!
அவை மௌனங்களை மட்டுமே!
சொட்டுகிறது !
இசைக்கபடாத என் இசைக்குறிப்புகள்!
மரித்துவிடுமோ!
என அச்சப்படுகிறேன் நான் .!
சீக்கிரம் வந்துவிடு

கல்விமான்கள்

ஜான் பீ. பெனடிக்ட்
என் தாயின் மடிதனிலே!
ஏழாவது மகவு நான்!
ஏழும் ஏழு விதம்!
எனக்கென தனி விதம்!
கடைக்குட்டி ஆயினேன்!
கடை கடையாய் ஓடினேன்!
கடனாய்க் காபி வாங்கினேன்!
தாயின் தலைவலி தீர உதவினேன்!
செருப்பில்லா பாதங்கள்!
தெருவெல்லாம் என் போன்ற சிறுவர்கள்!
நாலு கிலோ மீட்டர் நடையைக் கட்டி!
நாங்கள் கற்றோம் நாலெழுத்து!
காலை சென்றேன் பள்ளிக்கு!
கிழிஞ்ச கால் சட்டையோடும்!
கிளுகிளுக்கும் அட்டை போட்ட!
கிழிஞ்சு போன நோட்டோடும்!
பள்ளிக் கூடம் முடிந்து வந்து!
பம்பரங்கள் சுற்றினேன்!
பால்கரக்கும் பசு மாட்டினை!
பக்குவமாய்க் குளிப்பாட்டினேன்!
காலம் கடந்திட்டாலும்!
கடந்த காலம் மறக்கவில்லை!
கற்றறிந்த கல்வி அன்று!
கஞ்சி ஊத்துது எனக்கு இன்று!
கல்வி கற்றுத் தந்திட்டக்!
கல்விமான்களை நினைக்கிறேன்!
காலமெல்லாம் நன்றி சொல்லி!
களிப்புடனே வாழ்கிறேன்

உரையாடலில் தவறிய சொற்கள்

சித்தாந்தன்
மிகத்தாமதமான குரலில்தான்!
உரையாடல் தொடங்கியது!
மழை தூறலிட்டு பெருமாரியாகி ஓய்கையில்!
ஓராயிரம் சொற்களைப்பேசிக் களைத்திருந்தோம்!
மாயப்புன்னகையில் மலர்ந்து!
கத்திகளாய் நீண்ட சொற்கள் வரையிலும்!
தந்திரமான மௌனத்தோடு கடல் கூடவந்தது!
நிழல் பிரிந்த உருவங்களின் மிதப்பில்!
வெளியின் மர்மங்கள் அவிழ்ந்தன!
காற்று!
சொற்களின் வெற்றிடங்களிலிருந்து திரும்பி!
கண்ணாடிக்குவளையுள் நிரம்பித்ததும்பியது!
பேசாத சொற்கள் குறித்துக்கவலையில்லை!
பேசிய சொற்களிலோ!
கண்ணீரோ துயரமோ இருக்கவில்லை!
வெறும் புழுதி!
வசவுகளாய் படிந்துபோனது!
குரல் இறங்கி சரிவுகளில் உருண்டு!
தடுமாறிய தருணத்தில்!
சில வார்த்தைகளை!
அவசரமாக என்கைகளில் வைத்துப்!
பொத்தியபடி நீ வெளியேறினாய்!
ஒளியும் நிழலுமற்ற வார்த்தைகள் அவை!
அர்த்தங்கள் நிறைந்த!
ஒரு சோடிச்சொற்களையாயினும்!
சாத்தப்பட்ட நகரத்தின் சுவர்களில் எழுதியிருக்கலாம்!
ஒருவேளை அவற்றில்!
பறவைகள் சில கூடுகட்டி வாழ்ந்திருக்கலாம்!
எந்தப் பிரகடனங்களுமற்று!
தாகித்து அலைந்து சலிப்புறும் போது!
இருளில் நச்சுப்புகையாய் சொற்கள் மேலெழுகையில்!
நதியொன்றினது உள்ளுற்றிலிருந்து!
சரித்திரத்தின் பிணங்கள்!
நாம்பேசாத சொற்களைப் பேசத்தான் போகின்றன!
அப்போது கடல்!
கரையிலிருந்து எம்சுவடுகளை!
உள்ளிழுத்துச் சென்றுவிடும்!
-சித்தாந்தன்

நீ ?

எதிக்கா
நீ உன் காதலைத் தெரிவுக்கும்போது!
எனக்கு தெரிந்ததில்லை!
நீ எனக்குள் ஒளிந்திருந்ததை!
அன்று!
நீ பாலைவனத்தில் வீசிய!
தென்றல் போல் வந்தாய்!
இன்று!
இயற்கையின் சீற்றத்துக்குள் அகப்பட்ட!
தென்றலாய் நிலை தடுமாறுகின்றாய்!
அன்றெல்லாம்!
பாரதி முழங்கிய வார்த்தைகளை!
உன்னுள் முணுமுணுத்தாய்!
இன்று!
அவையெல்லாம் ஒரு நடிப்புத்தான்!
என உன்னை நீயே!
ஏமாற்றுகின்றாய்!
நான் உனக்குள் எதையுமே தேடவில்லை!
ஆம்!
உன் அன்பைத் தவிர!
உனக்கு காதலொரு விளையாட்டு!
ஆனால் எனக்கது உயிர்நாடி!
என் காதலே!
தயவுசெய்து நம் காதலை வரையறை!
செய்யாதே!!
உன் வார்த்தைகளை உனக்குள் முடக்காதே !!
உன் உணர்ச்சிகளையெல்லாம் கடமைக்காக!
வெளிக்காட்டாதே!
நீயும் என்னைப்போல் பத்துமாதம் பொறுமையாக!
தாயின் கருவறையில் சிறையிருந்தவன் தானே!
ஆனால்!
இப்போதெல்லாம் நீ சில கணங்களில்!
பொறுமையிழந்தவனாய்!
விருப்பு வெறுப்பில்லாத நிர்வாண நிலையில்!
உன்னை மாற்ற எத்தனிக்கின்றாய்!
என்னுயிரே இப்போதாவது சொல்!
உனக்குள் ஏன் இந்த மாற்றம் ?

விவரெங்கெட்ட பூக்களும்

ஜெனோவா
விவரெங்கெட்ட பூக்களும்,வெட்கங்கெட்ட நானும்!!
--------------------------------------------------!
ஒவ்வொரு மூர்க்கமான மோதலிலும்!
மாறி மாறி!
சில பூக்களையும் இலைகளையும்!
இழந்துகொண்டிருந்தது!
காற்றிடம் மரம்.!
வாடிக்கையான சண்டை போல்!
இல்லாமல்!
இன்று கொஞ்சம் உக்கிரமாயிருந்தது!
தள்ளாடியபடியே!
நான் மரத்தினடியில் அமர்ந்தேன்!
சாராய நெடி ஏகமாய் அடித்தது!
குடித்துவிட்டு வந்திருந்த காற்று!
உலுப்பியதில்!
முன்னத்திக் கிளைகளில் ஒன்றிரண்டு!
முறிய தொடங்கின!
மனம் ஏற்கனவே வெகுவாய்!
சோர்வுற்றிருந்தது.!
பூக்களும் உதிர்ந்துகொண்டேயிருக்கின்றன!
காற்றும் விட்டபாடில்லை.!
உதிர்ந்திருந்தவற்றில்!
ஒன்றிரண்டை கைகளில் வாங்கி!
சோகம் தவிர்க்க வருடினேன்!
விவரங்கெட்ட பூக்களுக்கு!
அப்போதும்!
சிரிப்பதை தவிரவும்!
வேறொன்றும் தெரியவில்லை.!
வெட்கங்கெட்ட நானும்!
சிரிப்பை மட்டும் களவாடி!
வீடு திரும்புகிறேன்

விதி

இளந்திரையன்
அம்மி மிதித்து !
அருந்ததி தேடி !
அந்தணன் காட்டிய !
பகலிலும் பார்த்ததாகப் !
பல்லிளித்து !
மோதிரம் மாத்தி !
மொய் எழுதிப் !
போன உறவுகளும் !
சாட்சியாக !
சக வாழ்வுக்காய் !
கைப் பிடித்ததென்னவோ !
உண்மைதான் !
நான் வரும் வரை !
நடு நிசியென்றாலும் !
நாக்கு வரண்டு !
தண்ணீர் குடிக்கும் !
உன்னைப் பார்த்து !
சிரிக்கின்றாள் !
அருந்ததி !
- இளந்திரையன்

சுதந்திரம் : ஒரு தியாகியின்

துரை.ந.உ
சுதந்திரம் : ஒரு தியாகியின் மீள் பார்வையில் ..!
-----------------------------------------------------!
!
””அன்று!
அடிமை நாட்டில்.....!
சுதந்திரம் !
அது ஒன்றே!
எங்களுயிர் மந்திரம்!
ஒரே தலைமை!
ஒன்றே இலக்கு!
வேற்றுமையைப் போக்கும்!
ஒற்றுமையே நோக்கம்!
அமைதியாய் ஆர்ப்பாட்டம்!
அகிம்சையேப் போராட்டம்!
பலன் எதிர்பாராத எண்ணம்!
நாட்டின் எதிர்காலமே திண்ணம்!
தன்வாரிசுகளை மறந்த கூட்டம்!
தாய்மண்ணின் எதிர்காலமே திட்டம்!
வாங்கித்தந்தோம் சுதந்திரம் - பாதுகாக்கக்!
கொடுத்துவைத்தோம் உங்களிடம்!
இதோ..!
கடந்துவிட்டது!
அறுபத்திரண்டு ஆண்டுகள் !!
இன்று ...!
சுதந்திர நாட்டில்!
சுதந்திரம்........?!
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........???!
சுதந்திரம் என்றால்........?!
சாதிக்கொரு தலைமை!
சாதிக்க இல்லை நிலைமை!
வீதிக்கொரு கொள்கை!
விதியே என்ற வாழ்க்கை!
காலையில் சாதி ஓழிப்புப் போராட்டம்!
மாலையில் இடஒதுக்கீடு ஆர்ப்பாட்டம் !
தாய் நாட்டையே மறந்த கூட்டம்!
தன் வாரிசின் எதிர்காலமே திட்டம்!
!
சுதந்திரம்......?!
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.........??!
சுதந்திரம் என்றால்......???!
ஊர் வம்பே சுதந்திரம்!
வெட்டிப் பேச்சே சுதந்திரம்!
ஆணவப் போக்கே சுதந்திரம்!
ஆடைக் குறைப்பே சுதந்திரம்!
வீட்டினுள் மதுசேர்த்தல் சுதந்திரம்!
வெளியில் மாதுசேர்தல் சுதந்திரம்!
முதியோர் மதியாமை சுதந்திரம்!
பெரியோர்சொல் கேளாமை சுதந்திரம்!
அதிகாரிகாரங்கள் தேனெடுக்க சுதந்திரம்!
அதிகாரிகளுகள் புறங்கைநக்க சுதந்திரம்!
மதத்துக்குள் மோதல் சுதந்திரம்!
மதத்துக்கே மதம்பிடித்தல் சுதந்திரம்!
கலாச்சார சீரழிவு சுதந்திரம்!
பாலியல் சீர்கேடு சுதந்திரம்!
இன்றைய இளைஞர்களுக்கே!
இதுதான் தெரிந்த சுதந்திரம் ..............!
நாளைய நமது!
வருங்காலத் தூண்களுக்கு ????!
காந்திஎன்றால்....!
கம்பூன்றிய தாத்தாவாகவும் .,!
விடுதலையென்றால்.....!
விடுமுறையும் இனிப்பும் .,!
தமிழக வரலாற்றில் முதன்முறையாக!
புத்தம்புதுத் திரைப்படத்தோடும் .,!
சிறப்புப் பட்டிமன்றத்தோடும்!
முடிந்தே போகும்...!!
ஏ ., இளைஞனே !!
இந்தியக் குடிமகனே !!!
ஏமாளிகள் நாங்கள்!
சந்ததியர் உங்களை நம்பி!
வெள்ளையனிடம் போராடி!
வாங்கித்தந்த சுதந்திரமதை!
தானென்ற அகந்தையில்!
தெரியுமென்ற போதையில்!
மதிகெட்டு மமதையில்!
வீதியில் தொலைத்துவிட்டு!
எங்களைப்போல உங்களின்!
வாரிசுகளிடம் சேர்க்காமல் !
வாரிக் கொடுத்துவிட்டு!
மீண்டும் அடிமையாகிக் கொண்டிருக்கிறாய்!
அந்நிய மோகமென்னும்!
கிழக்கிந்தியக் கம்பெனியின்!
மாற்று உருவிடம் !!
வேண்டும் வேண்டும்!
இன்னும் ஒரு சுதந்திரம் !!
இனியாவது சுதந்திரம் !!!
ஆனால்.......!
யாரிடமிருந்து !?!?!?!?!?!?!?!
முடிவு செய் இன்றே !!
முயற்சி செய் நன்றே !! !
-------------------------------------!
சகோதர சகோதரிகளுக்கு!
இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் ,!
விடுதலைப் போராட்ட தியாகி ஒருவர்!
தொடர்கிறார் உங்களிடம்

கண்ணீர்.. கவிதை..காதலின் சறுக்கல்

கல்முனையான்
01.!
கண்ணீர்!
-------------!
எனது இதயத்தின் இடுக்குகளிலே!
கண்ணீரின் பாசி படிந்துள்ளதால்!
என் இதயத்தினுள் வர நினைப்பவர்கள்!
கவனம் பாசியில் வழுக்கி விழுந்துவிடுவீர்கள்!
சற்று தள்ளி நின்று எட்டிப்பாருங்கள்!
அங்கே நைல் நதியாய் என் கண்ணீரும்!
எவெரெஸ்ட் சிகரமாய் என் பெரு மூச்சும்!
மனதில் பாரமாய் இமய மலைச்சாரல்கள்!
என் இதயத்தின் இரத்த குழாய்களில்!
கண்ணீர்த்துளிகளும் இரத்தமும்!
போட்டி போட்டு மரதன் ஓட்டம் ஓடுகிறது!
யார் இறுதியில் மரணப் பரிசை பெறுவது என்று!
பரவாயில்லை என் கண் மட்டும்!
இன்னும் உறங்கவில்லை ஏனென்றால்!
அது வற்றாத கண்ணீரைச் சிந்தும்!
நயாகரா நீர் வீழ்ச்சியாகிட்டே....!
02.!
கவிதை!
------------!
காதலித்தால் கவிதை வருமாம்!
உண்மையோ நானறியேன்!
ஒன்று மட்டும் சொல்வேன் நான்!
க(னவு) விதை என்று!
காதலனும் காதலில் தோற்றவனும்!
புதிய, பழைய கனவுகளை மீட்க!
பண்படுத்திய இதய மண்ணிலே!
விதைக்கின்ற விதைகள்தான் இது!
சில வேளை அழகு என்ற கறையானும்!
வசதி என்ற எறும்புகளும்!
குடும்பம் என்ற நத்தையும்!
க(னவு)விதைகளை நாசம் செய்யும்!
அப்போதே விடடுக்கொடுக்க தயாராக!
உங்கள் கைகளிலே ஏந்துங்கள்!
நீங்கள் கனவுலகில் பெற்றெடுத்த உங்கள்!
அன்புக் குழந்தையை மட்டும்!
அது மட்டுமே உங்களுக்கு சொந்தம்!
மற்றதெல்லாம் மாறிவிடும்!
சந்தர்ப்ப சூழ்நிலை என்ற!
வெள்ளப் பெருக்கினால்....!
03.!
காதலின் சறுக்கல்..!
-------------------------!
வெண்மையான உடலுக்குள்ளே!
உண்மையை மறைத்து!
ஆண்மையை ஏமாற்றும்!
திறமை அது பெண்மை.!
இனிக்க இனிக்க பேசி!
பின் கண் சிவக்க சிவக்க அழுது!
உன் நாசி வழியே நீர் வடிய!
உன்னை அழ வைப்பதும் பெண்மை.!
உந்தன் மனதினை மாற்றி!
அதன் கோலத்தை குறைத்து பின்!
இவ் அகிலத்தையே ஏமாற்றும்!
ஒரு விச ஜந்து பெண்மை.!
ஒரு தடவை மனிதனும் ஏமாந்தான்!
இக் காதல் என்ற பெண்மையில்!
அதனால்தான் வாழ்க்கைப் பாதையில்!
சற்று சறுக்கி பின் எழுந்து விட்டான்.!
சற்று உற்றுப்பாருங்கள் அவனை!
தெரிகின்றதா காதல் வடு அவன் கண்ணில்!
தெரியாது... அது தெரியாது....!
அது கரைந்து போனது அவன் இதயத்தினுள்ளே..!
யாரும் அழவேண்டாம் இனிமேல்!
ஏன் தெரியுமா எமக்காகத்தானே!
அந்த வானம் அழுகிறது அதோடு!
அவனும் அழுகிறான்.!
அழுது முடித்து விட்டான்!
ஆனால் அவன் கண்கள் மட்டும்!
அடம் பிடிக்கிறது இமை மூட!
பரவாயில்லை பார்க்கலாம் நாளை..!
மன்னியுங்கள்.. உங்களையும்!
இந்த பெண்மையையும்!
அழ வைத்ததற்கு!
சென்று வருகிறேன் நான்

போதுமடா சாமி...2

த.சு.மணியம்
நாற்சார வீடுமங்கே நடுவாய் நிற்க!
நாலுபக்க வேலிகளும் முருங்கை காய்க்க!
காற்றோடு சலசலத்து தென்னை வாழை!
காலையிலே சாமி வைக்க மரத்தில் பூவும்!
தூற்றோடு துரவுகளும் சுரத்து முட்ட!
சுற்றிவந்து நீர் பருகும் கோழி, ஆடும்!
நேற்றோடு முடிந்திடுத்தே அவளின் வாழ்வில்!
நெஞ்சமின்று கலங்குகுதே நினைவை எண்ணி.!
பிள்ளைகளின் பின்னலினால் விமானம் ஏறி!
பிறந்தமண்ணைப் பிரிந்துவந்த அவளின் வாழ்வும்!
கொள்ளைபோயோ வருடமது இரண்டாய் நீள!
கொடுத்தஅந்த சோசல் பணம் எதுவோ ஆக!
பிள்ளைபெறு பார்க்கவந்து வருடம் இரண்டும்!
பெரும் பகுதி அவள் உழைப்போ சமையல்கட்டாய்!
வெள்ளையென நம்பி வந்தாள் கள்ளும் வெள்ளை!
வேதனையில் குமுறுகிறாள் மகனாய்ப் போச்சே.!
போகவிடு என்றவளும் பல நாட்கேட்க!
பொறுத்திரணை பேரனுக்கு ஆண்டு இரண்டும்!
தாகமுடன் களைப்படைந்த தாயின் சோகம்!
தனம்தேடும் தவிப்புடனே தனயன் ஏக்கம்!
வேகமுடன் முடிவெடுக்கும் திறனும் உள்ளாள்!
வேற்றிடத்தில் ஏதறிவாள் ஏதைச் செய்வாள்!
சோகமுடன் வாழ்வுமது கழிந்தே போக!
சொற்பதினம் பொறுத்திருக்காள் ஊர் போய்ச்சேர.!
கேடுகெட்ட மானுடனே கேளும் கொஞ்சம்!
கேள்வியது உன் வாழ்வோ தினமும் இங்கே!
பாடுபட்டு வழர்த்துவிட்ட பாசத்துக்கா!
பணம் தேட பக்குவமாய் இதனைக் கொண்டாய்!
கூடுகட்டி முட்டையிட்ட குற்றம் என்றால்-நீ!
கூண்டோடு இங்கிருக்க ஏதோ காதை!
நாடுவிட்டு நாடு வந்தும் உன்தன் மூளை!
நல்லவற்றை நினைக்குதில்லை ஏனோ தானோ.!
த.சு.மணியம்