நாம் சண்டையிட்டு!
பிரிந்த அந்த!
கடற்கறை சந்திப்பின்!
அடையாளச்சின்னம்!
இன்னமும்!
அங்கேயே வானம்பார்த்து!
வரமொன்று கேட்டு!
தவம் செய்கின்றது.!
மனசை நகங்களில்!
வைத்திருக்கும் தேவதையே!
உன் கைசேர!!
என்னைபோலவே!!!
!
திருமேனி தரிசனம்!
தினம்தறித்த கண்கள்!
உன் தொழைதலில்!
துவண்டு கிடக்கின்றது!
என் முகம்தனில்…!
விழியில் பிறந்து!
கன்னம் கடந்து!
இதழினை கடந்த!
உப்புக்கரைசலோடு!
எனை கடந்து போனாயோ?!
பாதி தூக்கதில்!
என்னை கண்விழிக்கச்செய்யும்!
கனவாகப் போனாயோ?!
என் கவிதைப்!
புத்தகங்களின் ஓரங்களை!
தின்றுப் போன கரப்பானின்!
வாயிடுக்கினில் மாட்டிக்கொண்டாயோ?!
பறிக்க மறந்த!
பூவின் மகரந்ததில்!
புதைந்திருக்கின்றாயோ?!
ஊஞ்சல் காற்றாய்!
என் குழல் சுருள்களில்!
உன்னை சூடிக்கொண்டாயோ?!
எதுவாக!
இருக்கின்றாய் நீ,!
நான் மட்டும்!
வாழும் இவ்வுலகில்.!
!
நீ மிச்சம்!
விட்டு சென்ற!
அந்த ரோஜாவுடன்!
ஒற்றையாக நான்!
அதே நதிக்கரையில்!
இன்றும் காத்துக்கிடக்கின்றேன்.!
போர்முனையில்!
புதைந்துப் போனதாக!
ஊர் பேசுகின்றது.!
உண்மைதானா?!
நீ என்னுள் வாழ்வதாக!
சொன்னது,சிருங்காரா?!
உன் இதழ் பதித்து!
பூவின் இதழில் இட்ட!
முத்தத்தின் வாசம்!
கரையெல்லம், நீ என்றே!
பரவிக்கிடக்கின்றது.!
மீண்டும் வருவதாய் இருந்தால்!
இன்றே வந்துவிடு.!
மனிக்கட்டு நரம்புகள்!
அறுபட்டு, நதிக்கரையெல்லாம்!
குருதியின் வாசம்.!
நான் சுவாசிப்பது!
இன்றே கடைசி.!
!
மொழிமறந்து எழுதிய!
கவிதையிது!!
உன்!
கண்மொழியினிலே!
கரையொதிங்கிய பின்!
நான்!!
நீலங்கள் கறைந்தொழுகி!
வானம் விட்டு!
உன் நிழல் சேர்ந்ததால்!
நிலவு திசை மாறி!
போனதோ.!!
சற்றே திரும்பிப் பார்!!
கொஞ்சம் இழைபாரட்டும்!
என் சுவாசக்கூடு!!
ஆயிரம் யானைகள்கொண்டு!
இந்திரலோகம்!
கொண்டுச்செல்வேன்!!
ஒரு நிபந்தனை மட்டும்.!
கொஞ்சம் உன் சுவாசத்தை!
கொடு, நுகர்ந்துபார்கவேண்டும்.!
சுவாசத்தின் வாசம் என்னவென்று!!
!
இரண்டு வரிகள்!
எனக்கா எழுத மாட்டாயா?!
வினவி விட்டு!
சென்றுவிட்டாய் நீ!!
மொத்த தமிழெழுத்துக்களும்!
என்னுடன் யுத்தத்திற்கு!
தயாராகிவிட்டது!!
சமாதன உடன்படிக்கைக்கு!
பின்- இருபது வார்த்தைகளுடன்!
எழுதத் தொடங்கினேன்!!
கைக்கலப்பு மேலோங்கிவிட்டது!
அந்த எழுத்துகளுக்கிடையே.!
முதழெழுத்தாய் யார் நிற்பதென்று!!
பின் என்னதான் செய்ய?!
இதையே வைத்துக்கொள்!
என் அடிமை சாசனமாக!!
இதற்காக நீ மற்றொரு!
உலக யுத்தத்தை!
என்னிடம் தொடங்கிவிடாதே!!
!
உன் இதழில் நனைந்தே!
உருகிப்போன!
பொன் சங்கிலியின்!
புலம்பலை கேட்டதுமுதல்!
புலம்பித் தவிக்கின்றது!
என் இதழ்கள் - உன்னிடம்!
உருகிப்போக!!
முத்தமிட்டு..!
முத்தமிட்டு…!
!
-தொட்டராயசுவாமி.அ, கோவை

தொட்டராயசுவாமி.அ, கோவை