தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

மண்ணைவிட்டே ஒழித்திடுவோம்

எம் . ஜெயராமசர்மா, அவுஸ்திரேலியா
மங்கையவள் இல்லை எனில்!
மாநிலமே இல்லை என்பார்!
சங்கெடுத்து முழங்கி நிற்பார்!
சகலதுமே மங்கை என்பார்!
எங்களது வாழ்க்கை எலாம்!
மங்கலமே மங்கை என்பார்!
பொங்கி வரும் புத்துணர்வே!
மங்கை அவள் தானென்பார்!
கங்கை முதல் காவிரியை!
மங்கை என விழித்திடுவார்!
எங்கள் குலம் விளங்குதற்கு!
வந்தவளே மங்கை என்பார்!
பூமிதனை மங்கை என்பார்!
பொறுமையையும் மங்கை என்பார்!
சாமிகூட மங்கை என்று!
சபையேறி முழங்கி நிற்பார்!
என்றெல்லாம் சொல்லும் மங்கை!
எங்கு சென்று நின்றாலும்!
அங்கெல்லாம் அவள் நிலையை!
ஆருக்கு சொல்லி நிற்போம்!
தேசபிதா காந்தி மகான்!
சிலை எங்கும் இருக்கிறது!
சீலநிறை மங்கை அவள்!
தெருவில் வர அஞ்சுகின்றாள்!
சீதை கதை படிக்கின்றார்!
கீதை தனைக் கேட்கின்றார்!
பாதை மட்டும் மாறாமல்!
படு குழியை வெட்டுகின்றார்!
பாதகங்கள் செய்து நிற்பார்!
பல்கி எங்கும் பரவுகிறார்!
கோவில் என்றும் பாராமல்!
கோரத் தனம் செய்கின்றார்!
வீதி தனில் போவோரும்!
விலத்தியே நிற்கும் நிலை!
சாதகமே எனக் கருதி!
சமூக நீதி குலைக்கின்றார்!
சமயங்கள் பல இருந்தும்!
சாத்திரங்கள் பல இருந்தும்!
சன்மார்க்கம் ஏன் தானோ!
தலை குனியப் பார்க்கிறது!
மங்கை அவள் எங்களது!
மாநிலத்தில் தெய்வம் என!
மனம் எல்லாம் எண்ணுதற்கு!
வழி சமைப்போம் வாருங்கள்!
மங்கை அவள் தனைக்காக்க!
மா எழுச்சி வரவேண்டும்!
மங்கை நலம் கெடுப்பாரை!
மண்ணை விட்டே ஒழித்திடுவோம்

ஏனிந்த மாற்றம்

சித. அருணாசலம்
இருளைத் தூங்க வைத்து!
பொழுதைத் துவங்கும் கதிரவன்.!
புல்லின் மேல் பனித்துளி!
கிரீடமாய் இருக்க!
புள்ளினங்கள் விழித்துப் !
புத்துணர்வுப் பயணம் துவக்க!
மெத்தையான வைக்கோலில் !
மேனிகிடத்திய கால்நடை எழ!
இவையெல்லாம் மாற்றமின்றி!
எப்போதும் போல் தான். !
ஊரைக் கைக்குள் போட!
யாரைக் கவிழ்க்கலாம்.!
பிழைக்கும் வழிதேடப்!
பொய்கள் என்ன கூறலாம்.!
உள்ளம் வெறுக்க !
உதட்டில் சிரிப்பை!
எப்படிக் காட்டலாம் - என்று!
மனிதனின் சிந்தனைகள் மட்டும்!
மாற்றம் கண்டு!
மக்கிப் போனது எதனால்?

இடைத் தேர்தல்

மு.கந்தசாமி நாகராஜன்
பளபளன்னு ரோடு போட்டாவ....!!
படபடன்னு அமைச்சருவ வந்தாவ...!!
எல்லா எம்.எல்.ஏக்களும்!
எங்கூருக்கு வந்துட்டாவ..!.!
அமைச்சரைப் பாக்கையிலே மக்க!
அழகழகா சிரிச்சாவ...!!
அவிய போன பின்னாடி!
அடங்கொப்புரானேன்னு மலைச்சாவ...!!
ஆனாலும் செஞ்சாவய்யா..!
அஞ்சு லெட்சம் எங்க கோயிலுக்கு...!!
பெருமையாத்தான் இருக்கு!
பக்கத்து தொகுதிக்காரன்!
பாவிப்பய சாவலியேன்னும் போது...!!
!
-மு.கந்தசாமி நாகராஜன்,!
சுப்பிரமணியபுரம்.!
------------------------------!
பொன்னால்பிர யோசனம் பொன்படைத்!
தார்க்குஉண்டு பொன்படைத்தோன்!
தன்னால்பிர யோசனம் பொன்னுக்கங்கு!
ஏதுஉண்டுஅத் தன்மையைப் போல்!
உன்னால்பிர யோசனம் வேணதுஎல்!
லாம்உண் டுஉனைப்பணியும்!
என்னால்பிர யோசனம் ஏதுஉண்டு!
காளத்தி ஈச்சுரனே

நான் ஒரு காமுகன்

நிந்தவூர் ஷிப்லி
நான் ஒரு காமுகன்!
சுருக்கமாகச்சொன்னால்!
பெண் பித்தன்....!
அழகான என்றில்லை!
எல்லாப்பெண்களையும்!
தொட்டுப்பார்க்கும் வெறி!
எப்படியோ எனக்குள்!
வேரூன்றிக்கொண்டது.!
சிற்றின்பம் பற்றியே!
தொடர்ந்து!
சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்...!
கனவுகளில் நிர்வாணப்பெண்கள்!
அவர்களின் முகம் மட்டும்!
சரியாகத்தெரிவதில்லை!
விரசம்!
முத்தம்!
ஸ்பரிசம்!
மோகம்!
இவைகள்தான்!
எனக்குப்பிடித்த வார்தைகள்...!
யாரும் என்னை!
முறைத்துப்பார்க்க வேண்டாம்!
ஏன்!
மகா கெட்டவன்!
என்று முத்திரையும்!
குத்த வேண்டாம்!
ஏனெனில்!
இங்கே பலபேர்!
என்னை விட படுமோசம்!
அதை வெளிச்சொல்லும்!
தைரியம் எனக்கு மட்டுமே!
வாய்த்திருக்கிறது...!
நான் ஒரு காமுகன்!
சுருக்கமாகச்சொன்னால்!
பெண் பித்தன்....!
!
-நிந்தவூர் ஷிப்லி!
தென்கிழக்குப்பல்கலை!
இலங்கை!
!
பின்குறிப்பு :-!
இது பாலியல் சார் கவிதை அல்ல. சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் பாலியல் வன்முறைகள்!
துஷ்பிரயோகங்கள் காதல் என்ற பெயரில் காம வெறியாட்டம் இவைகளை எதிர்ப்பதற்காக என்னை நானே அடகு!
வைத்து சிலரது மனச்சாட்சியை உலுக்கிப்பார்க்கும் சிறு முயற்சியே இது

பொறாமை சுமந்த பூக்கள்

ரசிகவ் ஞானியார்
உனக்கு ப்ரியமானவர்கள்!
உன்னை சந்திக்க வரும்பொழுதெல்லாம்!
எனது பூக்களில்!
பொறாமை முளைத்து விடுகின்றது!
விடைபெற்று செல்லும்பொழுது!
மீண்டும்!
பொறாமை பூக்களாகிறது!
உன்!
பூக்களையெல்லாம்!
எனக்கே தந்துவிடு!
நீ பொறாமையை வைத்துக்கொள்!
!
- ரசிகவ் ஞானியார்

நம்பிக்கை

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்
என் பெற்றோரை மட்டும்!
என் கண்களுக்குக் காட்டிவிடாதே!!
சுனாமிச் சுருள் அலைகளுக்குள்!
சிக்குண்டு சிறையுண்டு மாண்ட!
என் பெற்றோரை மட்டும்!
என் கண்களுக்குக் காட்டிவிடாதே!!!
டெனிம் காற் சட்டையும்!
ரீசேட்டும் இன்று எனக்கில்லை!
என் பிய்ந்த சட்டையையும்!
என் கிழிந்த சாறனையும்!
என் வாப்பா கண்டால்!
உயிர் நீத்திடுவார் என்முன்னே.!
என் ஒட்டிய வயிற்றையும்!
என் உப்பிய வதனத்தையும்!
என் உம்மா கண்டால்!
கண்முன்னே கதறி அழுதிடுவாள்!
நானும் சேர்ந் தழுவதற்கு!
என்விழிகளுக்குச் சொந்த நீருமில்லை.!
கட்டிய வீடும் காரும்!
பெட்டியில் துண்டுதுண்டாய்!
ஏற்றிச் சென்று கொட்டிய காட்சிகள்!
என் மனதில் மட்டும்!
மாறாப் பதிவுகளாய் இருக்கட்டும்.!
நாளை ஒரு காலம்வரும்!
நானும் வீடுகட்டிக்!
குடியிருப்பேன் இன்று என் வீடு!
வீதியாய் விரிந்து கிடந்தாலும்.!
-மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்

உன் சம்மதம்.. சலனச்சுமை

அறிவுநிதி
உன் சம்மதம் பூக்களாலானது .. சலனச்சுமை!
!
01.!
உன் சம்மதம் பூக்களாலானது !
------------------------------------!
ஓராயிரம்!
வண்ணத்துப்பூச்சிகளை !
உன் திசையில்!
பறக்கவிடுகிறேன்!
மழைவரும்!
போதெல்லாம் !
உன் !
நினைவுகளை!
பெறுகிறேன் !
இருந்தும்!
உன் நினைவுகளை விட!
மழை அழகானது!
!
உனக்கும்!
எனக்கும் இடையில்!
பெரும் நதி!
ஓடிக்கொண்டிருக்கிறது !
நான் சாகவரம்!
பெரும்வரை!
காத்திரு!
விரிந்துகொண்டிருக்கும் !
புத்தகத்தின்!
நடுவே !
சொற்பமாய் வந்து!
செல்கிறாய்!
மீண்டும்!
வாசிக்கத்!
துவங்குகிறேன்!
தொலைந்த!
பக்கங்களிலிருந்து !
02. !
சலனச்சுமை!
------------------!
மெதுவாக!
நகர்ந்துகொண்டிருக்கிறது !
உனக்கும்!
எனக்கும்!
தனித்தனி !
வாழ்க்கை!
பிறப்பதும் !
இறப்பதுமாய்!
இருந்த !
கணங்கள்!
இனி!
எதன்!
யதார்த்தத்தில் !
பிரிவோமென!
சொல்லாமல்!
சென்றிருந்தாலும்!
பிரிவு!
துவங்கிவிட்டது!
உன்னோடு பேசாத!
வார்த்தைகள்!
உருவமாhகி!
என்னை உன்னிடம்!
அழைத்துக்கொண்டேயிருக்கிறது !
நானோ!
மௌனம்கொண்டு!
தகர்க்கிறேன்!
நமக்கான!
வார்த்தைகளை!
!
-அறிவுநிதி

பெண் விடுதலை.. உறவுகளின் சிகரம்

இரா.இரவி
பெண் விடுதலை .. உறவுகளின் சிகரம் தாய் !
!
01.!
பெண் விடுதலை !
-----------------------!
எலிகளுக்கு விடுதலை பூனைகளால் கிடைக்காது!
பெண்களுக்கு விடுதலை ஆண்களால் கிடைக்காது!
மண் புழவாய்ப் நெளிந்தது போதும்!
பெண் புலியாய்ப் புறப்படு நாளும்!
புழுவைக்கூட சீண்டினால் சீற்றம் வரும்!
பெண்ணே! உனக்கு சீற்றம் எப்போது வரும்!
கொட்டக் கொட்ட குனிந்தது போதும்!
புராணப்புளுகை நம்பியது போதும்!
புதுமைக்கருத்தை ஏற்றிட வேண்டும்!
ஆண்கள் என்பதால் ஆணவம் கொள்வதும் ஏன்?!
பெண்கள் என்பதால் அடிமைப்படுத்துவதும் ஏன்?!
அடிமை விலங்கைத் தகர்த்திடல் வேண்டும்!
அற்புதச்சிறகை விரித்திடல் வேண்டும்!
ஆணுக்குள்ள சுதந்திரம் பெண்ணுக்கும் வேண்டும்!
அர்த்தமற்ற சுதந்திரம் யாருக்கு வேண்டும்!
புதியதோர் உலகம் செய்திடல் வேண்டும்!
புதுமைப் பெண்கள் அதனை ஆள வேண்டும்!
02.!
உறவுகளின் சிகரம் தாய் !
-----------------------------!
உயிரினங்களின் முதல் மொழியே!
ஒப்பற்ற அம்மா நீயே!
உலகிற்கு அறிமுகம் செய்தாய்!
உலகம் போற்றும் உறவு தாய்!
உறவுகள் ஆயிரம் உண்டு!
உயர்ந்த அன்னைக்கு இணை ஏது?!
பத்துத்திங்கள் என்னுயிர் வளர்த்தாய்!
எட்டி உதைத்தாலும் சிரித்தாய்!
எண்ணி எண்ணிப் பூரித்தாய்!
பால் நிலவைப் பார்த்திட வைத்தாய்!
பால் சோறோடு பண்பையும் ஊட்டிய தாய்!
தாலாட்டித் தூங்கிட வைத்தாய்!
தன் தூக்கத்தை மறந்தாய்!
நோயுற்ற போது துடித்தாய்!
நோய் நீங்கிட மருந்தளித்தாய்!
தாய்மொழியோடு தன்மானமும் பயிற்றுவித்தாய்!
தன்னிகரில்லாப் பாசமும் பொழிந்தாய்!
பசியோடு பசியாற வைத்தாய்!
புசிப்பதை ரசித்துப்பசியாறிய தாய்!
தியாகத்தின் திரு உருவம் தாய்!
தரணியில் பேசும் தெய்வம் தாய்

இதுதான் நீ

பிரான்சிஸ் சைமன்
நான் சிறு குழந்தயையாய் இருந்தபோது!
என்னைப்போல் உன்னையும் கடவுள் என்றே கருதினேன்!
விளையாட்டு வயதில் உன்னை நண்பனாக நேசித்தேன்!
பருவ வயதில் கொஞ்சம் புலப்பட ஆரம்பித்தது!
நட்பை நீ நாசமாக்கினாய் என்று!
அனுபவம் போதிக்கும் வயதில்!
அன்புப் பரிமாற்றத்தின்!
அமுதம் அறியாதவன் என உணர்ந்தேன்!
காதோரம் நரை விழுந்த காலத்தில் !
நீ ஒற்றுமையை விலை பேசுபவன் என்று!
மனம் நொந்தேன்!
கொஞ்சம் முதிர்ந்த வயதில்!
பொறாமைமை உள்ளடக்கி!
புறமுதுகில் குத்துபவன் !
எனப் புரிந்துகொண்டேன்!
எத்தனை வயதானாலும்!
மற்றவனுக்கு கைகட்டி!
கூலி செய்பவன் என மூர்க்கமானேன்!
இப்போது நான் அந்திமத்தில் விளிம்பில்!
உன்னை உன்னையாக்க!
முயற்சியில் என்னால் எதுவும் முடியாது போலும்.!
!
- பிரான்சிஸ் சைமன்

தலைவி

சின்னு (சிவப்பிரகாசம்)
தலைவி!
--------------!
தொள்ளுறு புலன்கள் போற்றும்!
தோகையர் உருவில் உழன்று!
பாவையர் பார்வை கேட்டு!
பதறும் இமைகளை கொண்டோன்!
செப்பிய பணிகள் முடித்து!
காப்பியக் கோவை பாடி!
கயல்விழி கண்டு நின்றான்!
செவ்விதழ் சிலம்பமாட!
சிற்றிடை சினந்து ஆட!
பெருநடை பொரு புலியை ஒப்ப!
வெறுப்புடன் விரைந்து வந்து!
செருக்குடன் கொங்கை சிலிர்க்க!
சினத்துடன் சொல்லி நின்றாள்!
ஒவ்வாது ஒவ்வாது காண்பாய்!
உனக்கென ஒரு செயல் புரிந்திலை காண்பாய்!
செப்பிய பணிகள் முடிக்க!
செக்கிழு மாடு போதும் !!
இச்சைக்கு கவி பாடி!
இளமைக்கு துதி பாட!
முகத்தொரு மீசை கொண்ட!
செம்மீன் போதும் போதும்!
உனக்கென்று எண்ணம் விளைந்து!
உனக்கான வழியை தேடி!
உன்மனம் விளையும் பொது!
நிழல் கண்டு நானும் வருவேன்!
நாணாமல் போய்வா என்றாள்!
தன் காலில் நிற்கும் தலைவனாய்!
தலைவனை காண நினைக்கும் தலைவி