காவியம் பலப்பல சொல்லி நம்மைக்காலி செய்து விட்டார்கள்.!
பாவியம் பாடிப் பாடியே பழமைப்!
போலி நட்டு வைத்தார்கள்.!
நீயிதை ஏனோ ஆதரித்தாய்?!
மீளுதற்கு இனியும் வழியுமில்லை!
சத்தியம் மறந்த வாழ்க்கையினை!
நித்தமும் வாழ இலக்கியம் ஏன்?!
புத்தனும் ஏசுவும் வாழ்ந்ததினும்!
புதிய இலக்கியம் ஏதுமுண்டோ?!
எழுதுதல் மட்டும் போதுமென்றால்!
எவர்தான் அதனை வாழ்வது?!
பழுதுகள் கலையா வாழ்க்கையிலே!
பயனேதும் உண்டோ நீ கூறு!
பிறர்க்கென வாழா உன்வாழ்க்கை!
குறைப்பிறப்பென்று நீ உணராய்!
தரக்குறைவான இலக்கியத்தால்!
தாழ்வது என்னவோ மொழிதானே!
தமிழுக்கென்று சிறப்புண்டு!
தமிழால் யாவர்க்கும் சிறப்புண்டு.!
புதுமையும் பழமையும் இருகண்கள்!
பொதுமையும் கடவுளும் உயிர்த்தளங்கள்!
வெறுமையே பேசி வீணாக்கும்!
பொறுமை இல்லா மானிடரே!
வறுமை தாழ்ந்த இலக்கியங்கள்!
குறுமை உள்ளக் குனிவாகும்!
தமிழ் மகன் உலகில் நீயென்றால்!
உலகியல் முதலில் நீயறிக!
அமிழ்தென விளங்கும் நம் தமிழால்!
அகிலம் காக்கும் தொழில் செய்வோம்
அருணன்