முதுமை காலத்தின் தூது - இது!
பொதுமைப் பருவம் உயிர்களுக்கு!
உடற்பயிற்சியுடன் கொழுப்பற்ற!
உணவு நலம் பேணுவோருக்கு!
முதுமையும் இளமையான மகிமை.!
சுமையற்ற பெருமை, அருமை.!
முதுமையெனும் கொடும் விலங்கிட்டு!
கைது செய்கிறது காலம் உயிர்களை.!
பதுமையாகி சிலர் அசைவில்!
புதுமையற்று வாழும் காலம்.!
இது பூ தூவி வரவேற்கும்!
தோதுடை மைதானமல்ல.!
முதுமை மனச்சாட்சி பரிசுத்தமானது.!
இளமை மிடுக்குத் தவறுகளை!
முதுமையில் எண்ணி வருந்துவார்.!
அருமை நாயன்மார், சித்தர்!
ஆழ்வார் பாடல்கள், உரைகளை!
ஆழ்ந்து மீண்டும் மீண்டும் படிப்பார்.!
அனுபவக் கிரீடமிடும் நரையாக.!
அன்பு பொதுவுடைமைச் சிந்தனை!
ஒதுங்கும் சாது மனமாக, ஆரோக்கிய!
முதுமை பேரறிவுப் பசுமை.!
முதுமை வாழ்க்கையின் பத்மாசனம்!
ஆதரவாய் அணையுங்கள் முதுமையை!
09-10-09

வேதா. இலங்காதிலகம்