தோழி காண்கிறாள்!
இவன் தன் தங்கையிடம்!
காட்டாத பரிவை...!
மனைவி காண்கிறாள்!
இவன் தன் தாயிடம்!
காட்டாத பாசத்தை...!
தந்தையானவன் தேடுகிறான்!
பணி ஓய்வு வரைதனில்!
இவன் காட்டிய!
மரியாதையை...!
இல்லாள் காண்கிறாள்!
தன் தங்கையிடத்தே,!
தன்னிடத்தே சேரவேண்டிய!
காதலை...!
உதாசீனத்திற்க்கித்தனை!
முகமூடிகள்.!
அற்ப ஆண்மகனுமிந்த!
முரணும் இணைபிரியா!
கோடுகள்.!
அவர் சிந்தனையில்!
இந்த இளமை,!
மழைக்குத்தாங்கா ஓடுகள்...!
எவ்விடத்தும் நிறைந்திருப்பது!
இறையென்றால்,!
அற்ப மனிதரிடத்தெல்லாம்!
நிறைந்திருப்பது நீயன்றோ!!!!
ராம்ப்ரசாத்