சூர்யா கண்ணன் கவிதைகள் 11-11-07 - சூர்யா கண்ணன்

Photo by FLY:D on Unsplash

பூ!
பாடைக்கு வைத்தாலும் !
பரமனுக்கு வைத்தாலும்!
வாடத்தானே செய்யும் ...பூ!!
சாலை!
இந்த சாலைக்கு தெரியுமா ?!
மேலே கடக்கிற வாகனம்!
எந்த ஊருக்கென்று..?!
நாணயம்!
பூ விழுந்தால்!
வெற்றி எனக்குத்தான்!
சுண்டிக்கொண்டேயிருக்கிறேன்!
பூ விழும் வரையில் !
நாணயத்தை..!
-சூர்யா கண்ணன்!
குன்னூர்
சூர்யா கண்ணன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.