தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

தூக்கம் விற்ற காசுகள்

ரசிகவ் ஞானியார்
இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை !
வந்தவனுக்கோ சென்று விட ஆசை !
இதோ !
அயல்தேசத்து ஏழைகளின் .. !
கண்ணீர் அழைப்பிதழ் ! !
விசாரிப்புகளோடும் !
விசா அரிப்புகளோடும் வருகின்ற ... !
கடிதங்களை நினைத்து நினைத்து !
பரிதாபப்படத்தான் முடிகிறது ! !
நாங்கள் பூசிக்கொள்ளும் !
சென்டில் வேண்டுமானால்... !
வாசனைகள் இருக்கலாம்! !
ஆனால் !
வாழ்க்கையில்...? !
தூக்கம் விற்ற காசில்தான்... !
துக்கம் அழிக்கின்றோம்! !
ஏக்கம் என்ற நிலையிலேயே... !
இளமை கழிக்கின்றோம்! !
எங்களின் !
நிலாக்கால நினைவுகளையெல்லாம்... !
ஒரு !
விமானப்பயணத்னனூடே விற்றுவிட்டு !
கனவுகள் புதைந்துவிடுமெனத் தெரிந்தே !
கடல் தாண்டி வந்திருக்கிறோம் ! !
மரஉச்சியில் நின்று ... !
ஒரு !
தேன் கூட்டை கலைப்பவன் போல! !
வாரவிடுமுறையில்தான்.. !
பார்க்க முடிகிறது !
இயந்திரமில்லாத மனிதர்களை! !
அம்மாவின் ஸ்பரிசம் தொட்டு !
எழுந்த நாட்கள் கடந்து விட்டன! !
இங்கே !
அலாரத்தின் எரிச்சல் கேட்டு !
எழும் நாட்கள் கசந்து விட்டன! !
பழகிய வீதிகள் !
பழகிய நண்பர்கள் !
கல்லூரி நாட்கள் !
தினமும் !
ஒரு இரவு நேர !
கனவுக்குள் வந்து வந்து !
காணாமல் போய்விடுகிறது! !
நண்பர்களோடு !
ஆற்றில் விறால் பாய்ச்சல் !
மாட்டுவண்டிப் பயணம் !
நோன்புநேரத்துக் கஞ்சி !
தெல்கா பம்பரம் சீட்டு கோலி என !
சீசன் விளையாட்டுக்கள் ! !
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து... !
விளையாடி மகிழ்ந்த !
உள்ளுர் உலககோப்பை கிரிக்கெட் ! !
இவைகளை நினைத்துப்பார்க்கும்போதெல்லாம்... !
விசாவும் பாஸ்போட்டும் வந்து... !
விழிகளை நனைத்து விடுகிறது.! !
வீதிகளில் ஒன்றாய் வளர்ந்த !
நண்பர்களின் திருமணத்தில் ! !
மாப்பிள்ளை அலங்காரம் ! !
கூடிநின்று கிண்டலடித்தல் ! !
கல்யாணநேரத்து பரபரப்பு! !
பழையசடங்குகள் மறுத்து போராட்டம் ! !
பெண்வீட்டார் மதிக்கவில்லை எனகூறி !
வறட்டு பிடிவாதங்கள் ! !
சாப்பாடு பரிமாறும் நேரம்... !
எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை! !
மறுவீடு சாப்பாட்டில் !
மணமகளின் ஜன்னல் பார்வை! !
இவையெதுவுமே கிடைக்காமல் !
கண்டிப்பாய் வரவேண்டும் என்ற !
சம்பிரதாய அழைப்பிதழுக்காக... !
சங்கடத்தோடு !
ஒரு !
தொலைபேசி வாழ்த்னனூடே... !
தொலைந்துவிடுகிறது !
எங்களின் நீ..ண்ட நட்பு! !
எவ்வளவு சம்பாதித்தும் என்ன? !
நாங்கள் !
அயல்தேசத்து ஏழைகள்தான்! !
காற்றிலும் , கடிதத்திலும் வருகின்ற !
சொந்தங்களின்... !
நண்பர்களின் ... !
மரணச்செய்திக்கெல்லாம் !
அரபிக்கடல் மட்டும்தான்... !
ஆறுதல் தருகிறது! !
ஆம் !
இதயம் தாண்டி பழகியவர்களெல்லாம்... !
ஒரு !
கடலைத்தாண்டிய கண்ணீரிலையே... !
கரைந்துவிடுகிறார்கள்;! !
இறுதிநாள் நம்பிக்கையில்தான்... !
இதயம் சமாதானப்படுகிறது! !
இருப்பையும் இழப்பையும் !
கணக்கிட்டுப் பார்த்தால் !
எஞ்சி நிற்பது !
இழப்பு மட்டும்தான்... !
பெற்ற குழந்தையின் !
முதல் ஸ்பரிசம் ... !
முதல் பேச்சு... !
முதல் பார்வை... !
முதல் கழிவு... !
இவற்றின் பாக்கியத்தை !
தினாரும் , திர்ஹமும் !
தந்துவிடுமா? !
கிள்ளச்சொல்லி !
குழந்தை அழும் சப்தத்தை... !
தொலைபேசியில் கேட்கிறோம்! !
கிள்ளாமலையே !
நாங்கள் தொலைவில் அழும் சப்தம் !
யாருக்குக் கேட்குமோ ? !
!
ஒவ்வொருமுறை !
ஊருக்கு வரும்பொழுதும்... !
பெற்ற குழந்தையின் !
வித்தியாச பார்வை... !
நெருங்கியவர்களின் !
திடீர்மறைவு ... !
இப்படி புதிய முகங்களின் !
எதிர்நோக்குதலையும்... !
பழையமுகங்களின் !
மறைதலையும் கண்டு... !
மீண்டும் !
அயல்தேசம் செல்லமறுத்து !
அடம்பிடிக்கும் மனசிடம்... !
!
தங்கையின் திருமணமும்... !
தந்தையின் கடனும்... !
பொருளாதாரமும் வந்து... !
சமாதானம் சொல்லி !
அனுப்பிவிடுகிறது !
மீண்டும் அயல்தேசத்திற்கு! !
- ரசிகவ் ஞானியார் !
துபாய் !
!
Mob : 050 - 4231109

ஓர் இறைவனின் சோகம்

நண்பன்
நண்பன் !
!
இயற்கையேற்க !
மறுக்கும் விளக்கத்தில் !
சிக்கித் தவிக்கும் !
பிறப்பு !
இறையேற்க !
மறுக்கும் மனிதர்கள் !
மத்தியில் வாழ்ந்த !
வாழ்க்கை !
இரக்கமற்றவர்கள் !
மறுத்த நீதியால் !
சிதைந்த உடலுகுத்த !
உதிரத்தால் மரணம் !
வடிந்த ரத்தம் ஏந்தப்பட்டது !
ஒரு அன்பான பெண்ணினுடைய !
மற்றுமொரு !
நம்பிக்கையாளனுடைய கோப்பைகளில். !
புலம் பெயர்ந்த கோப்பைகள் !
நிழலுலகின் !
இருண்ட வீதிகளில் !
தொலைந்தே போய்விட்டது !
நம்பிக்கையாளர்களின் !
மீண்டும் !
ஒரு தேடலுக்காக. !
குறியீடுகளில் !
புதைந்து போன !
வரலாற்று மோசடிகளில் !
அனைத்தையுமிழந்துவிட்டு !
நான் மட்டுமே மிஞ்சினேன் !
இறைவனாக உயர்த்தப்பட்டு

ஆள்களற்ற தொலைபேசி

தீபச்செல்வன்
ஆள்களற்ற தொலைபேசி!
நமது மொழியில் ஏதோ!
பேசுகின்றன!
நீயும் நானும் பேசுவது!
கம்பிகளின் வழியாய்!
பாடலாக வழிகிறது!
நேற்று நீ பேசிவிட்டுப்போக!
நாள் முழுக்க!
கொட்டிக்கொண்டிருந்தது!
உனது சொற்கள்!
உனது கண்களும்கூட!
கம்பிகளின் ஊடே!
பேசிக்கொண்டிருந்தது!
தொலைபேசியின் ஊடாக!
நமது குரல்கள்!
இணைந்துகிடக்கிற!
காற்றின் வெளியில்!
நீயும் நானும்!
எங்கிருக்கிறோம்!
எனது கண்கள் கரைந்து விட!
உனது முகம்!
நிரம்பிவிடுகிறது!
நமது இருதயங்களை சிலுவையில்!
அறைகிறது!
நீ இல்லாத நிமிடத்தின் ஒரு துளி!
நேற்று!
நமது உரையாடலை!
அறுத்த வேகமான காற்று!
இன்று!
என் தனிமைமீது!
உன் சொற்களால்!
பேசிக்கொண்டிருக்கிறது!
காற்றில்!
கலந்திருந்தன நமது சொற்கள்!
நாம்!
இன்னும் பேசியபடியிருப்போம்!
காற்று நமதருகில் வீசுகிறது!
நீ பேசாத!
தொலைபேசி!
கையிலிருந்து தவறி வீழ்கிறது.!
-தீபச்செல்வன்

முட்டையின் கோதுகளிலான வாழ்க்கை

ரோஷான் ஏ.ஜிப்ரி
முட்டையின் கோதுகளிலான வாழ்க்கை!
----------------------------------------------------!
இது இக்கணமே!
உடைந்துநொறுங்கும் சாத்தியங்களால்!
நிரப்பப்பட்டிருப்பது தெளிவாகிற்று !
இன்றைக்கும் கனவுகள்!
எழுந்து விழிப்பதற்கு ஏதுவாக!
அழகும்,பதுமையும் நிறைந்த!
பெரும் தரித்திரங்களை அழைத்துவந்து!
நிறுத்திவிடுகிறது வாசலில்!
இதிலிருந்தே அறியமுடிகிறது!
இவை பாதுகாப்பற்ற மேற்பூச்சுநிறைந்த!
படாடோபமென்று!
ஒழுங்கு படுத்தல்களோ,உறுதிப்பாடோஇன்றி!
சிக்கல்களை தோற்றுவிக்கிறபடி!
தயாரிக்கப்பட்டிருக்கிறது இந்த நொடிவரை!
எவரையும் பயமுறுத்தி வீழ்த்த பயிற்றப்பட்ட!
மிருகத்தைப்போல்!
உறுமியபடி துரத்திக்கொண்டிருக்கிறது காலம்

பயமாகவேயிருக்கிறது எனக்கு

கோகுலன்
நீயின்றி என்னால் வாழமுடியுமாவென !
பயமாகவேயிருக்கிறது!
நமது சமீபத்திய நெருக்கத்தில்...!
துருவங்களின் கடைசி அணு வரையிலுமான!
உலகின் அனைத்தையும் ஒளிபொருந்திய !
உன் முகத்தில் காண்கிறேன் நான்!!
என் மகிழ்ச்சிக்கும் ஊக்கத்திற்குமான!
விமர்சனங்களை உன் முகவரிகள்!
தினமும் தாங்கியபடியிருக்க, !
தூங்கும் நேரத்தினும் அதிகப்படியாய் !
உன் முகத்தையே மொய்த்துக்கிடக்கின்றன !
என் கண்கள்!!
உன் மடியிலும் மார்பிலும் !
ஊர்ந்துகொண்டிருப்பதிலேயே சுகம்கண்ட !
என் விரல்நுனிகளுக்கு நீ ரேகைகளின் வழியே!
புத்துயிர் பாய்ச்சுவதையும் என்னால்!
மறுக்கமுடியாதுதான் !
விரல்களின் இயக்கத்தினூடே !
தூக்கம் வென்றுவிடும் நள்ளிரவிலும் !
நான் தூங்கியபின் சற்றுநேரம் விழித்திருந்தே !
நீ தூங்கிப்போவாய் என்பதையும் அறியும் நான் !
அதே எண்ணங்களின் மிச்சங்களோடே!
அதிகாலை முகம் கழுவும் முன்னரே!
உன்னை உசுப்பவும் தயாராகிறேன்!
என் படுக்கையின் மேல் !
தலையணையின் இருப்பைவிடவும்!
என் படுக்கையிலும் உனது இருப்புதான் !
முக்கியமாய்ப்போகிறது !
இப்போதைய இரவுகளில்!!
மார்பின்மீதும் மடியின்மீதும் !
உன் வெப்பம் இதமாகவே இருந்தாலும்!
உன் சமீபத்திய நெருக்கம் குறித்து !
கொஞ்சம் பயமாகத்தானிருக்கிறது,!
என் மடிக்கணினியே! !

ஒரு காகம் பல.. கனவுகளின்

முஹம்மட் மஜிஸ்
ஒரு காகம் பல நம்பிக்கை.. கனவுகளின் தொடர்ச்சி!
!
01.!
ஒரு காகம் பல நம்பிக்கை!
---------------------------------!
இரவு கழித்து!
தூங்கிய ஒர் பொழுதில்!
நிர்வாணக்கனவுகளுக்கு!
இடைஞ்சலாய்!
கிணற்றடி வேலியில்தனித்திருந்த!
நரை கலந்த ஓர் கிழட்டு!
காக்கை கத்தி ஆடை!
களையாமலே கனவு!
முடிந்தாயிற்று!
காக்கைகளின் தொன்மையான!
ஜீவியத்தில் இது வரவுச்செய்தியென்று!
அதன் அழுகை வந்த திசை பார்த்து!
பழய கதையை!
புதுமையாக சொல்லி முடித்தாள்!
அம்மா!
இனந்தெரியாதோரால்!
இணங்காணப்பட்ட என்!
அப்பனும் வெற்றிடம் நிரப்பிய!
விஸயம் தெரியாமல் எழுதிப்போட்ட!
வேலையும் வரப்போவதாக!
ஆரூடம் சொன்னால்!
அம்மா!
பகல் கடத்தி!
பவுடர்பூசிய சாயங்காலப்பொழுது!
நிறத்தால் தனித்துவம் காடடிய!
அந்த காகம்!
சொண்டு;சொரியத்தான்!
போயிருக்கனும் போல!
மின்சாரக்கம்பியில்!
அதன் இறுதி அத்தியாயம்!
எழுதப்பட்டிருந்தது!
கிணற்றடி வேலியில்!
அதன் சாவை அது முன்னறிவிப்பு!
செய்திருந்தது!
பாவம் அம்மா!
நாளையும் எனக்கு விரசமாய்!
கனவுகள் வரலாம்!
ஒன்றல்ல பல நூரு காக்கைகள்!
கிணற்றடி வேலியில்!
ஒன்று சேர்ந்து கத்தலாம்!
இப்போதெல்லாம் அம்மாவின்!
நாட்கள் நம்பிக்கையோடு!
மட்டுமே நகர்கிறது!
!
02.!
கனவுகளின் தொடர்ச்சி!
----------------------------!
நீண்டதொரு பயணத்தின்!
இடைவெளியில் சுயம் பற்றிய!
கனவுகளோடு விழிக்கிறேன்!
இருள் சூழ்ந்து மரணத்தின்!
காலடிச்சத்தம்இடைவிடாது கேட்கும்ம பிரம்மைக்குள்!
மனது மூழ்கிப்போனது!
பத்திரப்படுத்த முடியாத கனவுகளின் எண்ணிக்கை!
அதிகரிக்கிறது கோரிக்கையும் விண்ணப்பமும்!
நீளுகிறது இந்த இரயிலை போல!
போகுமிடமோ வந்து விட்டது!
கனவுகள் மடடுமே தொடர்கிறது!
இந்த உலகமும் ரயில்!
பயணமும் ஒன்றுதான்!
இறுதியில் பயணச்சீட்டுக்கூட!
மிஞ்சுவதில்லை

திருமணம்.. காதல்

மணிசரவணன், சிங்கப்பூர்
01.!
திருமணம்!
-----------------!
அவள் அவனையும்!
அவன் அவளையும்!
நேசித்து செய்து கொண்டது!
காதல் திருமணம்!
அவள் அவனையும்!
அவன் அவளையும்!
நேசிக்க தவறியதால்!
கட்டாயத் திருமணம் !
!
02.!
காதல்!
------------!
காதல்!
கடைசி வரை!
புரியாம போனதால் மோதல்!
காதல்!
கண்டதும்!
வந்தால் கடத்தும் ,!
காதல்!
நான் அவளையும்!
அவள் என்னையும்!
மகிழ்ச்சி படுத்துகிறது!
காதல்!
கண்ணைமூடிக்கொண்டால்!
கண்ணா மூச்சி!
திறந்தால் விளையாட்டு!
காதல் அவள் அப்பாவும்!
என் அப்பாவும் நண்பன் ஆக்கியது

இரவுவகளில் தொலைந்து போன

சஹ்பி எச். இஸ்மாயில்
என் வர்ணம்!
----------------------------------------------------!
இரவு,இருள்!
மயான அமைதி!
திடீர் திடீரென மின்னும் சென்நிற மின்னல்!
பேர் இரைச்சல்!
இவைகளுக்குள் உரைத்து போனது என் வாழ்வின் வர்ணங்கள்!
!
எனக்காக பிறர் நடந்த பொழுதுகளில்!
எனக்காக பிறர் பேசிய தருணங்களில்!
என் தாயின் கைகளில் தவழ்ந்த போது!
எனக்காக நான் நடக்க வேண்டும்!
எனக்காக நான் பேச வேண்டும்!
என்ற என் கனவுகள் இவ் இரவுகளில்!
நிறம் இழந்து போனது.!
!
பல்கலை நுழைவதாய்!
காதலியின் மடியில் மெய் மறந்து இருப்பதாய்!
தாயின் பெருமூச்சில் பங்கெடுப்பதாய்!
நான் கண்ட கனவுகளை காவு கொண்டது இந்த இரவுகள்.!
!
எம் வன்னியில்!
இரை தேட !
விடியலை காத்திருந்தது பறவைகள்!
நாம் இரையாகி போன சாடல்களை தேட காத்திருந்தோம்.!
!
அந்தோ சமாதான புறா விண் எழுகிறது!
இரவின் பயங்கரம் அதையும் கொன்று தீர்த்து.!
--------------------------------!
வன்னி மக்களின் நினைவாக

ஊமையானேன் நான்

தமிழ் ராஜா
நீ வருவதற்கு முன்னால்!
இங்கு புறாக்கள் சுற்றிக்!
கொண்டிருந்தது என்றேன்!
எப்பொழுதுமே என்னால்!
புறாக்களை காண முடிவதிலலை!
என்று லேசாக சிணுங்கினாய்!
இல்லை! இல்லை! பறவைகளையே!
என்னால் காண முடிவதில்லை ஏன்?!
என்று வருத்தப்பட்டாய் என்னிடம்!
நீ வெளியே வந்ததும்!
உன் கூந்தலைப் பார்த்துக்!
கார் மேகம் சூழ்ந்து கொண்டதாக!
நினைத்துக் கொண்டது பறவைகள்.......!
அதனாலேயே உன்னைப் பார்த்ததும்!
எல்லாப் பறவைகளும் கூண்டுக்குள்!
சென்று விடுகிறது என்றேன்....!
அமைதியாக இருந்த உன் முகம்!
லேசாக சிவந்தது கோபத்தால்!
சே! இதை மட்டும் பறவைகள்!
பார்த்திருந்தால் உன் பின்னாலேயே!
விடாமல் சுற்றி வருமென்றேன்!
என்ன செய்வது?!
அதை உன் கருங்கூந்தல்!
மறைப்பதால் பறவைகளால்!
காண முடிவதில்லை என்றதும்!
உன் சிவந்த முகத்தில்!
பளிச்சென்ற வெண்மைப் புன்னகை...!
என் காதுகளில் லேசாகப் பாய்ந்தது!
உன் சிரிப்பின் இசை..............!
அய்யோ! நான் குடை கொண்டு வரவில்லையே!
மின்னலும் இடியும் சேர்ந்து!
வருகிறதே என்றதும்...........!
மேலும் என் வார்த்தைகளை!
பொறுக்க முடியாமல்!
உன் விரல்களால் என்னிதழை!
மூடினாய் மெதுவாக!
அந்நொடி ஊமையானேன் நான்..!
-தமிழ் ராஜா

இமையிரண்டு காதல்.. அவளாய் போன

காவிரிக்கரையோன்
இமையிரண்டு காதல் ஒன்று!.. அவளாய் போன அவன்!
!
01.!
இமையிரண்டு காதல் ஒன்று!!
-------------------------------------!
வார்த்தைகளை தேக்கி வைத்ததில் !
உள்ளத்து அணை உடைந்திடுமென்ற !
பயம் லேசாக பற்றிக் கொண்டது,!
உயிர் நிறைக்கும் துயில் களைந்து !
இன்னும் பிரியாமல் இருக்கும் இருளையும்!
நிலவையும் பார்த்துக் கொண்டே சாளரம்!
வழி கண்கள் பயணித்தது,!
சூரியன் வர வர மரியாதை நிமித்தம் !
அதிகம் காட்டி தன் முழு உருவத்தையும்!
வீட்டுக்குள் இழுத்து கொண்டது நிலா,!
எழுந்திருந்த சிலருக்கும், உறக்கக் காதல்!
கொண்ட சிலருக்கும் சூரிய வரவின் அறிவிப்பு !
செய்து கொண்டே இரை தேடி கடந்து செல்கிறது!
முருகனின் கொடிச் சின்னத்து பறவை,!
உறக்கம் கலையாத கண்களும் உறக்கம் !
கலைத்து விடும் கால்களுமாய் அம்மா பால்!
என்று இயந்திரமாய் மிதிவண்டி அழுத்திச்!
சென்றார் ஒரு பால்காரர்,!
இத்தனை வித்தியாசங்களையும் சுவாசித்தாலும்!
என்னால் வித்தியாசப்பட்டு நிற்க முடியாமல் தான்!
போனது, என் கண்ணிமைகள் இரண்டுக்கும் அப்படி ஒரு!
காதல், இறுகப் பற்றிக் கொள்ளத் துடித்தன,!
சரி காதலை பிரித்தப் பாவம் நமக்கெதற்கு என்று!
இமைகளின் தழுவலுக்கு வழி விட்டு கனவு பயணத்துக்கு!
மீண்டும் ஒரு பயணச்சீட்டு பற்றி பறக்க ஆரம்பித்தேன்!!
!
02.!
அவளாய் போன அவன்...!
------------------------------!
முள்ளிருக்கும் ரோஜா எனினும் உன்னைத் !
தள்ளி வைக்கப் போவதில்லை என்ற !
கர்வமுனக்கு,!
செருப்பாயிருந்தாலும் ஒரு முறை பெட்டியினுள் !
அமர்ந்து விட்டதால் எத்தனை முறை !
அழுக்குகளை மிதித்தாலும்!
தேய்மானம் ஆகா தன்மானமுண்டுனக்கு,!
உள்ளுணர்வு அதட்டி சொன்னாலும் பெண்மையின் !
காதலை துணிந்து கேட்கும் தன்னம்பிக்கை!
உண்டு எல்லா ஆணுக்கும்,!
விழுக்காடுகளில் தான் இருக்கிறது வாழ்க்கை!
முறை என்றாலும் பெண்ணியம் உண்டு அதில்!
தெய்வீக அன்புண்டு எல்லா பெண்ணிற்கும்,!
கழிப்பறையில் கூட அவதிப்பட்டு!
நிற்கும் இந்த இனத்திற்கு இந்த உலகத்தில்!
ஏதெனும் அடையாளம் விற்கப்படுகிறதா?