அன்றைய மழைக்கு நிறமிருந்த மாலைப்பொழுது - பர்ஸான்.ஏ.ஆர்

Photo by Didssph on Unsplash

என்னிடமிருந்த வண்ணாத்திகள் சிறகுகள் கொடுக்கப்பட்டு பறந்தன.!
காற்று நடந்து சென்ற மென்தடயங்களின் மேலே!
கொஞ்ஞம் கொஞ்ஞமாக கால் பதித்து!
என் வண்ணாத்திகளின் நிழலில் பிரயாணப்பட்டேன்.!
என்னிடமிருந்த வண்ணாதிகளின் ஒரு சோடியின் நிழல்!
மெல்லிய நீலமாய் அகன்று இருந்தது.!
நீண்ட தூரங்கள் கடந்துசென்று!
மிகச்சிறிய கடலின் நீண்டவெளியில்!
ஒரு கரையில் அதுவிட்ட நுரையில்!
ஒரு சோடி வண்ணாத்திகளின் நீலநிழல் அழகாய் படர்ந்தது.!
!
வண்ணாத்திகள் ஓய்விற்காய் ஒதுங்கிய பொழுதன்று!
மழைக்கு சொந்தமாய் விதிக்கப்பட்டது.!
!
வண்ணாத்திகள் கூட்டம் எல்லைகளுக்கப்பால்!
நீண்டு பயணிக்க விதிக்கப்படுகையில்!
ஒரு சோடி வண்ணாத்திகள் மட்டும்!
மிகச்சிறிய கடலின் நீண்டவெளியில்!
நீல நிழலின் அழகில் நின்றது.!
காற்றின் வேகத்தினில் நுரையில் விழுந்த நீல நிழல்!
உறுதியாய் நிலைக்குமாறு இறைவனின் விதியமைக்கப்பட்டது.!
!
நிறங்களுடன் மெய்த பெருமழையில்!
கறுப்பின் வர்ணங்களிற்கு கூடிய ஆசனங்கள்.!
!
நீல நிழல் நிலைக்க ஒரு சோடி வண்ணாத்திகளின்!
ஓய்வுப்பொழுது மழைக்கு விதிக்கப்பட்டது!
சிறிய கடலின் நீண்ட வெளியில்!
என் ஒரு சோடி வண்ணாத்திகளின் ரூஹ{ பிரியுமாறும் எழுதப்பட்டது.!
!
பர்ஸான்.ஏ.ஆர் !
20.02.2008
பர்ஸான்.ஏ.ஆர்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.