தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

கலங்கமா கருப்பு?

தீபா திருமுர்த்தி
இறக்கையின்றி !
ஓயாது !
பறந்து கொண்டிருக்கும் !
ஊரின் உளை வாய்க்கு !
ஓய்வு கிடைக்கும்! !
மதுவின் போதையில் !
பிதற்றிக் கொண்டிருக்கும் !
மாமனின் !
ஊமைக் கண்களுக்கு !
இதுவே ஒத்தடம் தரும்! !
தம்பியின் !
செவிட்டு வாய்க்கும் !
பூட்டு போடும்! !
பழுத்துத் தொங்கி கொண்டிருக்கும் !
முதிர்ச்சியின் முனகளொடு !
கொல்லையின் பலா நாசி நிறைக்கும்... !
வாய்க்குவரும் !
வயிற்றுக்குப் போகும் வரை! !
தோட்டத்து வேலி தாண்டி !
வாசம் நிறைக்கும் !
அம்மாவும் அப்பாவும் !
ஆசையோடு !
வளர்த்து வந்த மல்லிகை! !
உனது வெள்ளையும் !
எனது கருப்பும் !
சேர்ந்து விட்டாலே போதும் !
புதிய !
நிறம் ஒன்று !
பிறக்கும்

பேருந்து

அஸ்மின், ஈழநிலா, இலங்கை
மாதத்தின் முதலாம்நாள் கன்னிப்பெண்ணின்!
மார்பினைப்போல் விம்மிநிற்கும் சேப்பைத்தொட்டு!
ஆதரவாய் தடவுகின்றேன் அம்மாஅப்பா!
அன்புமுகம் என்நினைவில் வந்துபோச்சு...…!
காதவழி தான்நடந்தேன் போனமாசம்!
கடன்தந்த கனகுமுகம் தோன்றலாச்சு...…!
வாதமுற்ற எண்ணமுடன் வீதியோரம்!
'வஸ்'ஸொன்றின் வருகைக்காய் காத்திருந்தேன்…!
தினம்குடித்து ஆடியாடி வீடுஏகும்!
திக்குவாயர் எலிக்குஞ்சு தியாகுபோன்று...!
சனமடுக்கி புகைகக்கி வந்த பஸ்ஸோ!
சட்டென்று 'பிரேக்'கடிக்க உலுகுவந்தேன்..!
பணம்நிறைந்த பையினிலே கையைவிட்டேன்!
பத்தெடுத்தேன் பஸ்ஸினிலே ஏறிவிட்டேன்..!
தொணதொணக்கும் கண்டக்டர் காதடைக்க!
கரகரக்கும் பீக்கராகி கடந்து போனான்..!
பத்துமிச்சம், பாவியென்னை பார்த்தும்கூட!
'ஸ்ஸரட்ட யன்டமல்லி' என்றுபோனான்!
முத்துமுத்தாய் சொட்டுகின்ற வியர்வைதன்னை!
முடிந்தவரை நான்துடைத்து முக்கிநின்றேன்!
செத்துவிட்ட அவள்நினைவு ஆங்கும்வந்து!
செய்கவிதை எனமீண்டும் தொல்லை செய்தும்!
கத்திக்கத்தி கத்திநெஞ்சில் வீசும் கனகர்!
கடன்தந்த ஞாபகமே தொடரலாச்சு..!
என்னருகில் ஒருகிழவி 'ஏன்டா மோனே!
ஏன்காலில் மிரிக்கின்றாய் தள்ளு 'என்றாள்...!
என்னசெய்ய? வியர்வைநாற்றம் பொறுமையோடு!
'எங்கதள்ள இடமிருக்கா பொத்து'என்றேன்!
கண்ணருகில் காந்தம்பூட்டி நின்றபெண்ணோ!
கஸ்ட்டநிலை உணர்ந்ததுபோல் இடம்கொடுத்தாள்...!
பெண்ணவளில் சுவரிலுள்ள பல்லிபோன்று !
பெருமூச்சு விட்டவாறு ஒட்டிக்கொண்டேன்..!
என்னசுகம் 'திக்கதிக்' நெஞ்சடிக்க குருதியெங்கும்!
எரிமலையின் குழம்புபொங்கி ஓடலாச்சு..!
சின்னவன்நான் சனநெரிசல் உள்ளபஸ்ஸில்!
சித்தமெங்கும் தீப்பிடிக்க சிக்கிநின்றேன்!.!
அன்னமவள் 'பெயின்டடிச்ச' கூந்தல்வாசம்!
அடிவயிற்றில் உருண்டையொன்றை உருட்டக்கண்டேன்..!
கன்னம்வீங்கும் என்றுணர்ந்து கவலையோடு!
காற்றுபோக இடம்கொடுத்து தள்ளிநின்றேன்.!
எந்தவித சலனமற்ற அந்தப் பெண்ணோ..!
ஏக்கமடன் பார்வைகளால் 'ஓகே' என்றாள்!
அந்தவேளை கொழுந்துவிட்ட ஆசைத்தீயில்!
அறிவுதன்னை போட்டெரித்து மோட்சம் கண்டேன்!!
சிந்தையெங்கும் சிறுக்கியவள் விந்தைசெய்ய!
சீர்கெட்ட எண்ணங்களே எழும்பலாச்சு!
மந்தையாகி, நானுமங்கே பெற்றெடுத்த!
தந்தைதாயை என்னைக்கூட மறந்திருந்தேன்…!
'ரோசி'யென்று பெயருரைத்தாள் மேனியெங்கும்!
'ரோஜாசென்டு' பூசிநெஞ்சை கிறங்கடித்தாள்!!
தாசியவள் என்றறியா விடலைநானோ!
தடுமாறி வீழ்ந்துவிட்டேன் நடந்ததென்ன..?!
பேசுதன்னை பறிகொடுத்தேன் வாழ்க்கை என்னும்!
பேருந்தில் வந்தபெண்ணை காணவில்லை...!!
காசுதன்னை தொலைத்துவிட்ட கவலையோடும்!
கவிதை யொன்றை வாங்கியேங்கி வீடுவந்தேன

இன்னொரு பிரிவை நோக்கி……

நிந்தவூர் ஷிப்லி
கடைசியில்!
நிகழ்ந்தே விட்டது!
உன்னோடான!
பிரிவும்……!
எதிர்பார்த்ததுதான்!
இருந்தும்!
இத்தனை!
சீக்கிரமா…?!
நீ!
அடிக்கடி சொல்லும்!
‘பிறகு சொல்கிறேன்’!
என்பதை!
சொல்லாமலே!
போய்விட்டாய்!
திருவிழாவில்!
குழந்தையைத் தொலைத்த!
தாயொருத்தியின்!
பதை பதைப்பும்!
அழுகையும்!
எனக்கு இன்னும்!
சில காலம்தான்…!
பிறகு!
இன்னொரு!
பிரிவை நோக்கிய!
உறவின் மீதான பயணம்!
இயல்பாகவே நிகழ்ந்துவிடும் !!
!
- நிந்தவூர் ஷிப்லி, !
தென்கிழக்கு பல்கலை, இலங்கை

சிவதீபனுக்கோர் சபதம் கேள்

வித்யாசாகர்
01.!
சிவதீபனுக்கோர் சபதம் கேள்!!
--------------------------------------!
வன்னித் தீவின் தளபதியே!
நெஞ்சுக் கூடெரித்து நஞ்சுண்ட தீபமே !
ஆணையிரவில் ஆணையிட்டு -!
புலிக்கொடி நாட்டிய பகிரதா - கேட்கிறதா???!
எல்லி நகைத்தவரிடம்!
சொல்லி அடித்த வீரமே!
இருபத்தைந்து ஆண்டில் !
புலிகளின் வளர்ச்சியோடு வளர்ந்த போர்புயலே - கேட்கிறதா???!
சிங்களனாயிரம் சங்கருத்து!
முல்லைத் தீவுபிடித்து!
புலித்தலைவனின் படைக்கு மீண்டுமிரண்டு!
பீரங்கி பரிசளித்த சிவதீபமே - கேட்கிறதா???!
ஈழ கனவு சுமந்து !
போராட்ட நெருப்பு குழைத்து!
வீரமறவர் குருதிகளந்த மண் அணை கட்டி!
கிளிநொச்சியை காத்த மாவீரா - கேட்கிறதா??? !
அர்ப்பணிப்பு, வீரம், உறுதிக்கு வலு கூட்ட!
வடப்போர் முனையில் நின்று!
பரிசளிப்பு விழா நடத்தி - வீரர்களின் நெஞ்சுக்கு!
பேச்சுரம் பாய்ச்சிய கட்டளை தளபதியே - கேட்கிறதா???!
அறுபதாண்டு காலம் ஈழம் சுமந்த!
விடுதலையென்னும் ஒற்றை வார்த்தையை!
இருபத்தைந்தாண்டு காலம் நீ சுமந்து!
திருப்பித் தருகையில் உயிரையும் தந்த தீபனே;!
இதயம் முழுதும் ரத்தமின்றி!
பெற்ற உற்ற உறவுகளின்றி !
ஒற்றை மரமாகவேனும் நிற்போம்,!
நினைவில் எமை மறந்தும் ஒழிப்போம் -!
உனை மறவோம் கேள்;!
ஈழமுள்ளவரை நீயிருப்பாய்!
உன் நினைவற்று போகும் முன் !
ஈழம் படைப்போம்! !
வெள்ளையப் படைக்கு சிக்குண்டு மாய்ந்த!
இந்திய மரணங்களை மறந்து !
ஈழத்தில் - அடிமை சங்கிலி பூட்ட புகுந்த !
அமைதிப் படையென்ன -!
ஆயிரம் படை வரட்டும்;!
எப்படை வரினும் எம் படை வெல்லும் தினம்!
உனக்கே உனக்கே உரித்த-தெம் சபதம் கேள்!!!!
----------------------------------------------!
குறிப்பு: கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட!
தீபனின் இயற்பெயர் 'வேலாயுதபிள்ளை பகீரதகுமார். இயக்கப்பெயர் சிவதீபன்.!
இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டுள்ளார்

புலிகளா தீவிரவாதிகள்?

சித. அருணாசலம்
தீவிரவாதிகள் என்று !
திட்டவட்டமாய்க் கூறி!
ஒட்டுமொத்தமாய்த் துடைத்தொழித்துப்!
புலிகள் இருந்த இடத்தில்!
புல்லை முளைக்கவிட்டுப்!
புளகாங்கிதம் அடைந்திருக்கும்!
புரையோடிப் போன அடக்குமுறைஇ!
இழிந்த நிலையிலும் – உள்ளம்!
கிழிந்த நிலையிலும் இருக்கும்!
எம்தமிழ் மக்களைக் காப்பாற்றுவதை!
எண்ணத்தில் எப்போதும்!
ஏற்றவில்லை என்பதுதான் உண்மை.!
உலக மேடையிலேஇ அது!
ஒத்திகை பார்த்து!
உரக்கவே உரையாடிய!
ஒரங்க நாடகத்தின் வன்மை.!
தமிழினத்தை வேரறுக்கத்!
தெற்கே இருந்தவர்களைத்!
தேடிப்பிடித்து வடக்கிற்கு!
நாகரீகமற்ற முறையில்!
நகரம் கடத்தியது.!
முகாம்களில் வைத்து!
முழுவதுமாய்க் காலிசெய்யத் தான்.!
மருத்துவமனை நெறிமுறை என்பதும்!
மனிதநேயம் என்பதும்!
மருந்த்துக்குக் கூட இல்லாத!
இலங்கையின் இனவெறி அரசிடம்தான்!
இலக்கில் வைத்து அழிக்கப் படவேண்டிய !
தீவிரவாதம் பெரிதாய்த் தெரிகிறது

சாபங்களைச் சுமப்பவன் .. சூறாவளி

எம்.ரிஷான் ஷெரீப்
யின் பாடல் !
01.!
சாபங்களைச் சுமப்பவன் !
-----------------------------------!
நேர் பார்வைக்குக் குறுக்கீடென!
ஒரு வலிய திரை!
ஏமாற்றுபவனுக்கு இலகுவாயிற்று !
பசப்பு வரிகளைக் கொண்ட!
பாடல்களை இசைத்தபோதும்!
வெறித்த பார்வையோடு தான்!
துயருறுவதாகச் சொன்ன போதும்!
பொய்யெனத் தோன்றவில்லை!
ஏமாறியவளுக்கு!
இருள் வனத்திலொரு ஒளியென!
அவனைக் கண்டாள் !
புகைப்படச் சட்டங்களுக்குள்ளிருந்து நீண்டன!
வாழ்வு கொடுப்பதாகச் சொன்ன!
அவனது கைகள்!
ஒலிக் கோப்புகளிலிருந்து வழிந்தன!
தூரத்திலிருந்து அவனளித்த உத்தரவாதங்கள் !
அவளது கைகளைப் பிணைத்திருந்தது!
அவனிட்ட மாயச் சங்கிலி!
விலங்கிடப்பட்ட பறவையென!
காலடியில் வீழ்ந்துகிடந்தாள்!
சிறகுகளை ஒவ்வொன்றாகப் பிய்த்தெறிந்தன!
கூரிய நகங்களைக் கொண்ட!
அவனது விரல்கள்!
பின்னர் உச்சியில் ஏற்றிவிட்டு!
விரைத்த ஒரு பொம்மையென விழச் செய்தான் !
நேர்கோடென நட்சத்திரமொன்று வீழ்ந்த இரவில்!
இருவரையும் நனைத்தது மழை!
அவளது குருதியும் வேதனையின் ஓலமும்!
தடயமழிந்து போயிற்று!
என்றென்றைக்குமவளது!
சாபங்களைச் சுமப்பவனானான் அவன் !
!
02.!
சூறாவளியின் பாடல் !
---------------------------!
பலம் பொருந்திய!
பாடலொன்றைச் சுமந்த காற்று!
அங்குமிங்குமாக அலைகிறது !
இறக்கி வைக்கச் சாத்தியமான!
எதையும் காணவியலாமல்!
மலைகளின் முதுகுகளிலும்!
மேகங்களினிடையிலும்!
வனங்களின் கூரைகளிலும்!
நின்று நின்று தேடுகிறது !
சமுத்திரவெளிகளிலும்!
சந்தைத் தெருக்களிலும்!
சுற்றித்திரிய நேரிடும்போது!
இரைச்சல்கள் எதுவும் தாக்கிடாமல்!
பொத்திக்கொள்கிறது பாடலை !
பறவைகள் தாண்டிப் பறக்கையிலும்!
காத்துக்கொள்ளப்படும்!
இசை செறிந்த பாடல்!
சலித்துக் கொள்கிறது!
ஓய்வின்றிய அலைச்சலின்!
எல்லை எதுவென்றறியாது !
தனிமைப்பட்டதை!
இறுதியிலுணர்ந்தது!
தெளிந்த நீர் சலசலக்கும்!
ஓரெழில் ஆற்றங்கரை!
மரமொன்றின் துளைகளுக்குள்ளிருந்து!
வெளிக்கசிந்து பிறந்த நாதம் !
இருளுக்குள் விசித்தழும்!
பாடலின் கண்கள் துடைக்கும் காற்று!
அதைச் சில கணங்கள்!
அந்தரத்தில் நின்று!
பத்திரமாகப் பார்த்திருக்கச் சொல்லி!
ஆவேசத்தோடு கீழிறங்கும் !
பின்னர் பாடலை அழ வைத்த!
காரணம் வினவி!
தான் காணும்!
வெளி, தெரு, சமுத்திரம், நதி, வனமென!
அத்தனையிலும் தன் சினத்தினைக் காட்டி!
அடித்துச் சாய்க்கும் !
இயலாமையோடு எல்லாம்!
பார்த்திருக்கும் பாடல்!
இறுதியில் கீழிறங்கி!
எஞ்சிய உயிர்களின்!
உதடுகளில் ஒப்பாரியாகி!
கோபக் காற்றெதிரில் செத்துப்போகும் !
காலம்!
இன்னுமோர் பாடலை!
காற்றுக்குக் கொடுக்கக் கூடும்

இலக்கணம்.. விடியல் காணாத விழிகள்

மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
இலக்கணம் சமைக்கலாம்.. விடியல் காணாத விழிகள்!
01.!
இலக்கணம் சமைக்கலாம்!
--------------------------------!
முதலில்!
எச்சில் கையால்!
காக்காய் விரட்டும் !
பழக்கத்தை நிறுத்திவிடு.!
கஞ்சத்தனம் பற்றிய!
பாடத்தை பொருள் !
செலவில்லாமல் !
படித்துவிடு!
கடன் வாங்கி!
காலம் நீட்டி!
தவணை முறையில்!
கொடுக்கும் பழக்கம் !
வளர்த்துக்கொள்!
கடன் கேட்பவனுக்கு!
இருந்தாலும் இல்லை !
என்று கூற !
மனசாட்சியை மூடி வை!
உனது வேலைக்காரர்களை!
நாய்போல் நடத்த !
பயிற்சி எடு.!
அவர்களுக்கும் குடும்பம் !
இருக்கும் என்பதை!
அடியோடு மறந்து விடு!
எத்தனைக்கு !
குறைக்க முடியுமோ!
அத்தனைக்கு !
அவர்களுக்கான !
சலுகைகளை குறை.!
சம்பள பாக்கி வை!
விடுமுறை நாட்கள் !
என்பதும் வேலைக்காரர்களின்!
வேலை நாட்கள் என்று !
சட்டம் செய்!
சுதந்திரமாய் நடக்கும்!
நவீன அடிமைகள்!
என்று அவர்களுக்கு!
ஒரு முத்திரை குத்து.!
என்னதான் லாபம் !
வந்தாலும் நிறுவனம்!
நஷ்டத்தில் இயங்குவதாய் !
புலம்பிக்கொண்டிரு .!
வாடிக்கையாளர்கள் !
திருப்தியுறும் வகையில் !
ஏமாற்று.!
நண்பர்கள் குறை!
நா கூசாமல் பொய் பேசு.!
கள்ளக் கணக்கு எழுது !
பிச்சைக்காரர்களை !
வெள்ளிகிழமை மட்டும் !
வரச்சொல் !
பேருக்காக!
அவ்வப்போது கொஞ்சம் !
பொதுப் பணிகளில்!
தலை காட்டு.!
சொற்ப நிதியுதவி !
செய்துவிட்டு அதிகம்!
விளம்பரம் தேடிக்கொள்!
வரவில் மட்டும் கண்ணாயிரு !
செலவை கண்டு !
எரிச்சல் படு.!
மொத்தத்தில்!
ஒரு நல்ல!
சுயநலவாதியாயிறு!
அப்போதுதான் நீ ஒரு !
நல்ல முதலாளி !
என்பதற்கான !
இலக்கணம் சமைக்கலாம்!
02.!
விடியல் காணாத விழிகள்!
------------------------------------!
எங்கள் நிலவின் !
வண்ணம் கறுப்பு!
எங்களுக்கான வானவில் !
தோன்றும் காலம்!
அமாவாசை இருட்டு !
சாணக்குழியில்!
வீழ்ந்ததனால் கண்களை!
மூடிக்கொண்டன !
எங்கள் நட்சத்திரங்கள்!
அடை மழையிலும் !
கொடும புயலிலும் !
அகதியாய் போனது !
எங்கள் வசந்த காலம்.!
சூரியனை தேடித்தேடி!
காணாமல் போனது !
எங்கள் கிழக்கு!
பசி புசித்து கைகளால்!
மானம் மறைத்து !
உயிரைப் பிடித்துக்!
கொண்டிருக்கின்றோம் !
கோடைகளில் உலர்ந்து!
சருகாக முன் ஓர் மண்!
வீடு கட்டி குடிபுகுந்தோம்!
கிரகபிரவேசத்துக்கு !
வந்தெங்கள் சின்ன!
சந்தோசங்களில் பங்கெடுத்து !
ஆனந்த தாண்டவம்!
ஆடிப்போனது பூகம்பம்!
என்றாலும் துயரங்களின் !
கரையை தாண்டிவிட !
படகொன்று செய்தோம்!
அதற்குள் நதியே !
வற்றிப்போக !
திசைகள் இழந்த !
அடர்ந்த காட்டில்!
தொடங்கப்படாமலேயே !
முடிந்து போனது !
எண்களின் பயணம் !
ஆனாலும் ஆந்தைகளிடம்!
கண்கள் வாங்கி!
அயராது விடியலை !
உற்று நோக்கினோம்!
ஒரு நாள் விடியலும் வந்தது!
என்னசெய்ய ..!
ஆந்தையின் கண்கலாதலால்!
விடியலை தரிசிக்கும் !
யோகம பகலில்!
எங்களுக்குத்தான் !
இல்லாமல் போனது

நினைவுகளின் பாரம்

ரசிகவ் ஞானியார்
இந்தக் கால்சட்டை!
உனக்கு பொருத்தமாக இருக்கின்றது!
சுற்றுப்புரத்தின்!
ஓ... ஓ...!
சப்தங்களுக்கிடையே!
சிரித்துக்கொண்டே சொன்ன...!
சீனியர் அக்காவும்,!
!
நீ அணிகின்ற!
எல்லா ஆடையிலும்!
இது மட்டும்!
ரொம்ப அழகாய் இருக்குதுடா!
சொல்லிவிட்டு!
நன்றியும் நட்பும் ...!
வாங்கிவிட்டுச் சென்ற!
வகுப்பறைத் தோழியும்,!
அந்த சட்டைக்கு!
இந்த கால்சட்டைதான்!
அழகாய் இருக்கும்* என்று!
தனது தோழிகளுடன் அவள்!
சாதாரணமாய் பேசியதை!
நான் நிஜமாக்கி வந்தபொழுது!
சிரித்து வெட்கப்பட்டு என்னிடம்!
காதல் வாங்க முயற்சித்த!
அவளும்,!
ஏதோ ஒரு பெண்ணின்!
புகைப்படம்!
பாக்கெட்டில் இருப்பதாக!
அம்மாவுக்குத் தெரியாமல்!
என்னிடம் தந்துவிட்டு!
எதையும் வாங்க முயற்சிக்காமல் சென்ற!
வண்ணாணும்,!
!
பேருந்தில் தொங்கிக்கொண்டே!
வரும்பொழுது!
காதல் கோட்டைகளை உருவாக்குகின்ற ...!
பாளையங்கோட்டை அருகே!
ஏறுடா..உள்ள ஏறுடா!
என்று பலமாய் அடித்து!
தூசி துடைத்த காவலரும்!
ஞாபகத்தில் வருவதை ...!
தவிர்க்க முடியவில்லை!!
அளவு குறைந்துவிட்டதென்று!
பழைய பாத்திரக்காரனிடம்!
அந்தக் கால்சட்டையை!
அம்மா கொடுக்கும்பொழுது..!
அளவு குறைந்தது!
கால்சட்டை மட்டும்தான்!
நினைவுகள் அல்ல என்று!
அம்மாவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..!
!
பழைய பாத்திரக்காரன்!
புறப்பட்டுவிட்டான்!
கனமான பாரங்களோடு..!
-ரசிகவ் ஞானியார்

காதலுடன்

நீதீ
என்னவனின்!
கைபட்டு!
எனக்கான!
தாலாட்டு!
காற்றலையில்!
தவழ்ந்து வந்து!
கைப்பேசிவழி!
கசிந்து விழுந்தது!
கவலைபடாதே!
செல்லம்!!
கால் டாக்ஸி எடுத்து!
ஆஸ்பத்ரி போய்வா!
காய்சல்!
சரிஆகிவிடும்!
நன்றாக தூங்கு-நான்வர!
நள்ளிரவு ஆகும்!
காதலுடன்!
கவிஆக்கம்:!
நீ தீ

என் அம்மா

A. தியாகராஜன்
அவளுக்கு நன்றகவே தெரியும்!
மகாபாரதமும் இராமாயணமும்-!
தினமும் எங்களுக்கு ஏதாவது ஒரு கதை!
சொல்லுவாள் அவற்றிலிருந்து!
தினமும் ஒரு புதிய கதை உண்டு-!
அவற்றில் ஆயிரக்கணக்கில்!
கதைகள் உண்டல்லவா?!
எப்போதும் அவளுக்கு அவைதான்...!
படித்துக்கொண்டிருப்பாள்-!
பிரார்த்தனையின் போதும் அவைதான்!
சில பகுதிகள சில காண்டங்களிலிருந்து நிதமும்-!
ஒரு மண்டலம் ஒரு குறிப்பிட்ட பலனைத்தருமென்று..!
நாங்களெல்லாம் பிரஸாதத்திற்கெனவே காத்திருப்போம்!
அதுவுமல்லவா என்ன எப்படிச் செய்ய!
என்று சொல்லப்பட்டுள்ளது...!
!
சீதை மற்றும் இலவகுசர்களின் கட்டங்கள்!
அவளுக்குத் தெரிந்திருந்தும்,!
அவற்றைச் சொல்லும் போது!
கண்ணில் நீர் வந்தபோதும்-!
இராமனின் மேல்,!
சீதையின் மேல் சந்தேகித்து!
அக்னிப்பிரவேசம் செய்யவைத்த!
இராமனின் மேல்!
அவளுக்கு கோபம் வந்ததாக!
எங்களுக்குத் தெரிந்ததில்லை-!
அந்த வயதில்!
நாங்கள் கேட்டதுமில்லை!
அது அவளுக்கும் பிடித்திருக்குமாவென்றும்!
எங்களுக்குத தெரியாது..!
எங்களுக்குத தெரிந்ததெல்லாம்!
அது பற்றிப் பெரியதாக விவாதித்தவர்களை!
அவளுக்குப் பிடித்ததில்லை என்பதே-!
அது,!
ஒருமாதிரியான,!
பிணம்தின்னிக்கொள்ளிகளைப் பற்றி!
நினைக்கையில் வருமே!
அதுபோன்றவொரு!
அருவருப்பு....!
நான் வயதுக்கு வந்தபின்னர்!
ஒரு நாள்!
அம்மா சொன்னாள்..!
ஏ அது அப்படித்தான்!
பாஞ்ஞாலியை வைத்து!
விளையாடியது!
இதே கணக்கு தானே?!
மற்றதெல்லாம் வெறும் கண்ணாமூச்சி!
குழந்தைக்கு நிலா காட்டுவது-!
ஒவ்வொரு அம்மாவும்!
ஆங்கிலத்தில் சொல்வது போல!
சர்ரகேட் மதர் ஒன்லி!
(surrogate mother only)!
அவளது கர்ப்பப்பை வாடகை ஊர்தி மட்டுமே!
வரும் கிராக்கி!
அவளது கணவனேயானாலும்-ஏ!
சரி,!
புரியவேயில்லை....!
ஆனாலும்!
மகாபாரதமும் இராமாயணமும்!
ஏன் கடைசிவரை!
படித்துக்கொண்டேயிருந்தாளென்று!
!
- A. தியாகராஜன்.!
-------------------------------!
!
A.Thiagarajan!
A-504 Dosti Aster!
Wadala East!
Mumbai 400 037