கடவுள் தந்த பரிசு.. தியாகத்தின்
ப.மதியழகன்
திருவுருவம்!
01.!
கடவுள் தந்த பரிசு!
----------------------------!
இரைச்சல்,இடெநருக்கடி!
எல்லாவற்றையும் மாசுபடுத்தி!
இடுகாட்டில் கிடக்கும் !
சடலம் போல!
கொள்ளி வாங்கிக் கொண்டுவிட்டார்கள்!
சூரியனிடமிருந்து...!
அவர்களின் சரீரம் பொசுங்குவதனால் !
உண்டான சாம்பல் நெடி!
காற்று வெளியெங்கும்!
பரவிக்கிடக்கிறது!
இவர்களின் கண்ணோட்டத்தில்!
ஒவ்வொரு நாடும்!
தனது தயாரிப்புகளை விற்கும்!
வியாபாரச் சந்தைகளே !
வரும்காலத்தில் !
மக்கள் உயிர் வாழ்ந்தால்தானே!
நிறுவன பொருட்களை வாங்க!
நுகர்வோர் இருப்பார்கள்!
கடவுளால் மனித இனத்துக்கு!
பரிசளிக்கப்பட்ட பூமியை!
சிதைத்து விளையாடுகிறார்கள்!
கட்டற்ற சிந்தனாசக்தி!
என்றபெயரில்...!
பரிசளிக்கப்பட்ட எதையும்!
தரம் தாழ்த்திவிடும்!
மனித மனங்கள்!
மலிந்து போய் கிடக்கிறது!
இப்புவியெங்கும்...!
02.!
தியாகத்தின் திருவுருவம்!
------------------------------------!
தூத்துக்குடி முத்துக்குமார்!
தீக்குளித்தார்!
தன்னை நற்தமிழ்முத்தென்று நிரூபிக்க!
ஈழத் தமிழர் படும் துயரங்களை!
இந்தியப் பேரரசுக்கு வெளிச்சமிட்டுக் காட்டிட!
தமதுடலை தீப்பந்தமாக்கினார்!
தன்னை அக்னிக்கு இரையாக்கி!
தமிழக இளைஞர்களின் தோள்களைத்!
தட்டி எழுப்பியுள்ளார்!
தமிழ்நாட்டுக்கு தனது தியாகத்தின் மூலம்!
பெரும் விழிப்புணர்வை ஊட்டியுள்ளார்!
காஸாவில் உயிர்கள் பலியாவதை கண்டித்து!
ஆங்காங்கே கண்டனக் குரல் எழுகிறது!
வன்னிக் காடுகளில் பலியாகும்!
அப்பாவி மக்களெல்லாம்!
வாழும் உரிமையற்றவர்களோ?!
உண்மையை வெளியிடும்!
பத்திரிகையாளர்கள் பந்தாடப்படுகிறார்கள்!
இலங்கையில் தமிழினத்தோடு!
ஜனநாயகமும் கொஞ்சம் கொஞ்சமாக!
செத்துக் கொண்டிருக்கிறது!
தமிழன் என்கிற காரணத்தால்!
உயிரிழந்த பின்னரும் அவனுடலை!
சிங்கள சிப்பாய்களின்!
தோட்டாக்கள் துளைக்கின்றன!
இலங்கையின் வான்பரப்பில்!
பிணந்தின்னிக் கழுகுகள்!
இரைதேடிக் திரிகின்றன!
தமிழர்களின் நியாயமான!
கோரிக்கை முழக்கங்களுக்கு!
ஆயுதம் மூலம் மரணம்!
பரிசாகத் தரப்படுகிறது!
தீவைச் சுற்றிலும் நீர் இருந்தும்!
சுதந்திரத் தீ !
இன்னும் அணையவில்லை!
புத்த விஹாரங்கள் எங்கும் நிறைந்திருந்தும்!
வெடிகுண்டிச் சத்தம் சிறிதும் ஓயவில்லை!
தமிழர்கள் சிந்திய கண்ணீர் மழையால்!
சமுத்திர ஜலம் உப்புக் கரிப்பானது!
மிகச்சிறிய விதையில் தான்!
மிகப்பெரிய விருட்சம் மறைந்துள்ளது!
விடியலுக்குச் சற்று முன்பு தான்!
கொடிய காரிருள் புவிமீது கவிந்துள்ளது!
மீண்டும் பல இன்னுயிர்கள்!
இதுபோல் பலியாகாமல் தடுத்து!
ஈழத்தில் தமிழ்ச் சகோதரர்கள்!
தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க!
நாமனைவரும் உறுதுணை புரிந்து!
சுதந்திர காற்றை!
அவர்கள் சுவாசிக்கச் செய்வதொன்றே!
முத்துக்குமாரின் தியாகத்திற்கு!
நாம் செய்யும் நல் அஞ்சலி