தீவிரவாதிகள் என்று !
திட்டவட்டமாய்க் கூறி!
ஒட்டுமொத்தமாய்த் துடைத்தொழித்துப்!
புலிகள் இருந்த இடத்தில்!
புல்லை முளைக்கவிட்டுப்!
புளகாங்கிதம் அடைந்திருக்கும்!
புரையோடிப் போன அடக்குமுறைஇ!
இழிந்த நிலையிலும் – உள்ளம்!
கிழிந்த நிலையிலும் இருக்கும்!
எம்தமிழ் மக்களைக் காப்பாற்றுவதை!
எண்ணத்தில் எப்போதும்!
ஏற்றவில்லை என்பதுதான் உண்மை.!
உலக மேடையிலேஇ அது!
ஒத்திகை பார்த்து!
உரக்கவே உரையாடிய!
ஒரங்க நாடகத்தின் வன்மை.!
தமிழினத்தை வேரறுக்கத்!
தெற்கே இருந்தவர்களைத்!
தேடிப்பிடித்து வடக்கிற்கு!
நாகரீகமற்ற முறையில்!
நகரம் கடத்தியது.!
முகாம்களில் வைத்து!
முழுவதுமாய்க் காலிசெய்யத் தான்.!
மருத்துவமனை நெறிமுறை என்பதும்!
மனிதநேயம் என்பதும்!
மருந்த்துக்குக் கூட இல்லாத!
இலங்கையின் இனவெறி அரசிடம்தான்!
இலக்கில் வைத்து அழிக்கப் படவேண்டிய !
தீவிரவாதம் பெரிதாய்த் தெரிகிறது

சித. அருணாசலம்