தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

தவிப்பின் தீராத கணங்கள்

ஜதி
கடவுளிடமுமல்லாத சைத்தானிடமுமல்லாத!
முடிவிலியின் கணங்கள்!
தவிப்பின் பிசுபிசுக்கும் பிடியினில்!
சிக்கிக்கொண்டே நீள்கின்றன. !
இரவினை ருசிக்கமுடியாதபடி!
ஒரு பெரும் பசியினடியில்!
புதைந்து கிடக்கின்றேன் !
தவிப்பின் தீராக்கணங்களினால்!
நெய்யப்பட்ட இரவுகள்!
நாட்களின் சுவாதீனத்தை!
அமுக்கிக்கொண்டிருக்கின்றன !
வெறுமை கொட்டிக்கிடக்கும் படுக்கைமீது!
போர்வைக்குள் சிறைப்பட்டு!
நொடிகளெல்லாம் சிதையுண்டு போகின்றேன். !
கடிகாரத்தின் எண்ணிக்கை!
மண்டையில் சமட்டியடித்துக்கொண்டிருக்கிறது… !
அணலில் வெந்து வடியும் தேகத்திலெங்கும்!
தவிப்பின் வலிகள்!
தெரித்து வெடிக்கின்றன… !
நிரப்ப முடியாக் கோப்பையொன்றில்!
என்னை உருக்கியுருக்கி!
ஊற்றிக்கொண்டேயிருக்கிறேன் நானும்… !
!
20090527

ஆன்மாக்கள்

இராம. வயிரவன்
தொடர்ந்த !
அலைத்தேடல்களில்!
தொலைந்து போய்!
இழப்பினால்!
இருப்பில் குறைந்து!
முற்றுப்பெறாத முடிவுகளாய்!
இயலாமை ஈட்டிகளால்!
குத்திக்கிழிக்கப்பட்டு!
இரத்தக் காயங்களோடு !
கூடிய முனகலோடு!
சிறகொடிந்த !
உயிர்ப்பறவைகளாய்!
மீண்டும் உயிர்த்தெழுதலுக்காக!
கூட்டித்தள்ளப்பட்ட !
மூலைகளில்!
மறுபயனீட்டுக் !
குப்பைத்தொட்டிகளில்!
குமித்து வைக்கப்பட்ட !
குப்பைகளாய்!
ஆன்மாக்கள்!
- இராம. வயிரவன்

தொலைந்துவிட்ட சொந்தங்கள்

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்
பொட்டிழந்து பூவிழந்து!
புதுப் பட்டிழந்து!
கட்டுப் பெட்டியுடன்!
கடல்கடந்து சென்றீர்.!
அமுதம் பொழியும் வானம்!
அன்று பொழிந்ததெல்லாம் - உங்கள்!
அன்புச் செல்வங்களின் உயிரை!
அள்ளிச் செல்லும் குண்டுகள்தான்.!
மழலைச் செல்வங்கள்!
மறுசொல் உதிர்ப்பதற்குள்!
மரணமெனும் தூரிகை!
மாற்றியது வரலாறைத்தான்.!
பரிதவித்து கண்முன்னே மாண்ட!
பச்சிளம் பாலகர்தான் எத்தனையோ!!
பாடையிலே கொண்டு சென்ற!
பசும் பாவைகள்தான் எத்தனையோ!!!
விதைத்தனர் விசமிகள்!
விந்தைமிகு பயிர்களை - அவை!
விடிவதற்குள் முளைத்தனவே!
விதவைகளாய் இத்தரையினிலே.!
கண்டதுயர் கணக்கில்லை!
கண்ணிற்கூட நீரில்லை!
கண்ணாளன் மரித்தால்கூட!
கலங்குதற்கு உங்களிடம்.!
இத்தனையும் இழந்து!
இத்தரை மறந்து!
புறப்பட்டீர் புலம்பெயர்ந்து!
புதுயுகம் படைத்திடவே.!
தேன்மதுரத் தமிழோசை போதும்!
தமிழரெனத் தலை நிமிர!
இயல் இசை நாடகம் - புலம்பெயர்!
இலக்கியங்கள் படைத்திடவே.!
இத்தரையில் விட்டபிழை வேண்டாம்!
எத்தரையும் எல்லோர்க்கும் சொந்தமென!
உலகமயமாக்கலில் உங்கள் பங்கு!
உயரட்டும் இமயம் வரை.!
தொலைத்துவிட்ட சொந்தங்களை - உயர்!
தொழில்நுட்பம் பெற்றுத் தருமென்றால்!
தொடக்கி விடுங்கள் ஆய்வுகளை!
தொலைவில் இருந்து கொண்டே

மஞ்சள் பை

கி.அற்புதராஜு
கிராமங்களில் !
உறவினர்களிடையே !
பண்ட பரிமாற்றம் !
தினமும் நடைப்பெறும். !
எல்லாமே மஞ்சள் பையில்தான்! !
தேங்காய், மாங்காய், !
வத்தல், வடாம், !
காய்கள்... !
என சகலமும். !
வீட்டில் உள்ள சின்ன !
பிள்ளைகள்தான் !
எடுத்து செல்வார்கள். !
'மறக்காமல் பையை !
வாங்கி வந்து விடு' !
என சொல்லித்தான் !
அனுப்புவார்கள். !
சமயங்களில் !
அதே பையில் !
வேறு பண்டங்கள் !
அவர்கள் வீட்டிலிருந்து !
வந்து சேரும். !
பொருளின் மதிப்பு !
அதிகம்தான் என்றாலும் !
பை திரும்பவில்லையெனில் !
மன வருத்தம்தான்

பூமேலே நேசம்

ராமலக்ஷ்மி
'பூக்களுக்குஅழகு பூத்திட்டசெடியிலே!
புன்னகைத்தபடி இருப்பதுதான்.!
இதுபுரியாதவர் என்னமனிதரோ?'!
சிரித்துக்குலுங்கிய பவளமல்லிகளைப்!
பார்த்ததும்கிடைத்த பரவசத்தை!
அடுத்தநொடியே அலுப்பதில் தொலைத்தாலும்!
கண்ணுங்கருத்துமாய்த் தன்தோட்டம்!
பேணிவந்த கனகத்தின் கொள்கையிலே!
தவறேதும் தெரியவில்லை.!
அவர்நந்தவனத்தை அலங்கரித்து வந்தன!
செவ்வரளி செம்பரத்தை!
சிவந்திசம்பங்கி சிவப்புமஞ்சள்ரோஜாக்கள்!
மகிழம்பூ நந்தியாவட்டை!
வண்ணவண்ண ஜினியாக்கள்.!
இவற்றுக்குநடுவே புதிதாக உயர்ந்து!
சுற்றுச்சுவரினை விடவும்வளர்ந்து!
தெருவைஎட்டிப் பார்த்து!
இதமாய்ச் சிரித்த!
இருசூரியகாந்திகளைக் கண்டதும்!
பூந்தோட்டக் காவல்காரம்மாவின்!
கடுகடுப்பு மறந்தேதான் போனதுபாவம்!
சிறுமி செண்பகத்துக்கு.!
அச்சோலையைக் கடக்கும்போதெல்லாம்!
கம்பிக்கதவுளின் ஊடாக!
மெல்லிய ஏக்கப்பார்வையை படரவிட்டபடி!
விடுவிடுவெனப் பயந்துநடப்பவளைத்!
தயங்கித்தயங்கிக் கால்தேய்த்து!
நிற்க வைத்தன!
மலர்ந்துமயக்கிய மஞ்சள்காந்திகள்.!
ஆதவன் உதிக்கும் திசைநோக்கி!
வந்தனம் பாடி அவைநிற்க!
தன்னை எதிர்பார்த்தே!
தவமிருப்பதாய் நினைத்து!
தலையசைக்கும் தங்கமலர்களுக்குக்!
கையசைத்துச் செல்லுவாள்!
காலையிலே பள்ளிக்கு.!
மணியடிக்கக் காத்திருந்து!
மாலையில் திரும்புகையிலோ!
மறையும் கதிரவனை!
மறக்காமல் வழியனுப்பும் சூரியப்பூக்கள்!
அவளைக்காணவே மேற்கு திரும்பி!
வட்டக்கருவிழி பூரிக்க!
ஆவலாய்ப் பார்த்துநிற்பதாய்!
எண்ணந்தனை வேறு!
வளர்த்து விட்டிருந்தாள்!!
உடைத்து ஊற்றெடுத்த பாசத்தினை!
அடைத்து வைக்கும் வித்தை!
அறியாத பருவத்தினள்!
கருணைகொள்வாள் கனகமெனக்!
கனன்றெழுந்த கணநேரச்சிந்தனையில்!
துணிந்துகை காட்டியேதான்விட்டாள்!
ஒருமலரேனும் வேண்டுமென.!
செடியோடு அவையிருந்தால்!
இன்னும் சிலகாலம் வாழ்ந்திடும்!
உனக்காக நான்பறித்தால்!
ஒரேநாளில் வாடிவிடும்!
மூடிக்கொண்ட வாயிற்கதவுகளுக்கு!
இந்தப்பக்கம்!
வாடிப்போய்நின்றிருந்தாள் செண்பகம்

குமுறல்

பிரான்சிஸ் சைமன்
ஐயோ! என் மனம் குமுறுதே!!!!
ரத்தக் காட்டேரி எம்மக்களின்!
குருதியை ருசி பார்க்க கிளம்பிட்டதே!
குழந்தைகளின் அழுகுரல்!
என் தூக்கத்தை பறித்து பல நாட்கள் ஆயின!
ஐயோ! என் மனம் குமுறுதே!!!!
அதோ ஒரு தலை ராவணண் !
அதிகாரத்தின் உச்சியில் உட்கார்ந்துக்கொண்டு!
என் சகோதரர்களை கொன்று குவிக்கிறான்!
இந்த கொடுமையைக் கேட்க நாதியில்லாமல்!
போய் விட்டது என் சமுகம்!
ஐயோ! என் மனம் குமுறுதே!!!!
இட்லர் மறுபிறவி எடுத்து விட்டான்!
என்று நீ கூறியபோது நான் நம்பவில்லை!
இதோ அந்த கொடும்பாவியின்!
இன அழிப்பு வேட்டை நன்றே நடக்கின்றது!
தட்டிக்கேட்க என் முத்தமிழ் நாயகன் வருவான்!
என்று எதிர்பார்த்த எனக்கு…..முகத்தில் கரி!
ஐயோ! என் மனம் குமுறுதே!!!!
எம்மதமும் சம்மதம் என்ற !
என் மக்களுக்கு போர்க்கொடி!
தூக்கி புறப்பட்ட அமைதி புறாக்கள்!
“கச்சாமி” மந்திரத்தை உச்சரித்த குள்ளநரிகள்!
“நிர்வான” சுரபியை கூப்பிட்டேன்!
அவன் தூக்குப் போட்டுக்கொண்டனாம்….செய்தி வந்தது!!
ஐயோ! என் மனம் குமுறுதே!!!!
கண்ணகி வேஷத்தில் மறைந்திருக்கும்!
“பிஷா” கோபுரக் நாடகக்காரி!
தன் வஞ்சத்தை தீர்க்க!
இன்று என் மக்களின் இன அழிப்பு வேட்டைக்கு உடந்தை!
இவள் ராஜ அசுரனின் கைபொம்மையா?!
என் தமிழ் மக்களே!
பொங்கி எழுங்கள்!
இவர்கள் சந்ததியை ஒழித்திடுவோம்!
அப்பொழுதாவது என் மக்களின் !
ஆத்துமா சாந்தி அடையட்டும்!
அரசியல் நரிகளுக்கும் புத்தி வரட்டும்!
!
-பிரான்சிஸ் சைமன்!
பினாங்கு, மலேசியா

பெண் பார்க்கும் படலம்

சின்னு (சிவப்பிரகாசம்)
சொல்ல முடியவில்லை!
----------------------------------------------------------!
சொல்லமுடியவில்லை!
பெண் பார்க்க என் வீட்டார்!
எனை அழைத்த போது!!
அவள் என்னவள் என்று!
சொல்ல முடியவில்லை!
அந்த பெண்ணை பற்றி!
அவர்களிடம் சொன்னதே!
என் நண்பன் தான் என்று!
அழைத்த குரலுக்கு ஓடீணேண்!
ஒன்றும் அறியாத பிள்ளையாய்!
சிரிக்க முடியவில்லை!
அவள் இல்லம்வரை!
அவளைப்பற்றி நான்!
என் நண்பணிடம் சொன்னதை!
என்னிடம் சொன்ன!
என் அம்மாவை எண்ணி!
வீட்டு முற்றத்தில் வரவேற்கும்!
அவள் தந்தை!
அவரிடம் சொல்லமுடியவில்லை!
இந்த வீட்டின் தொலைபேசிகள்!
எனை அழைக்கும்அழைத்தபின்!
பெரும் தொல்லை என சிரிக்கும் என்று!
அமர்ந்தவுடன் ஏதோ பேசினார்கள்!
குலம் கோத்திரம் என்று!
அவள் தந்தை கேட்டார்!
என்ன வேலை என்று!!
அவரிடம் சொல்ல முடியவில்லை!
உங்கள் பெண் பின்னால் சுற்றுவது!!
என்று!!
தேநீர் எடுத்து!
வந்தால் தேவதை போல்!
தேநீரும் சுவைத்தது!
அவள் கரம் போல்!!
உங்களுக்கு என்ன பிடிக்கும் !!
அவள் தந்தை!
சொல்லமுடியவில்லை!
இவள் தான் என்று!!
சமைக்க தெரியுமா!!
என் அம்மா!
காற்றுக்கொள்வேன் அவள்!!
சொல்ல!
முடியவில்லை அவள் சமைத்தாலும் இல்லை!
அரிசியை உண்ண கொடுத்தாலும்!!
அவள் என்னவள் என்று

ஈழத்தின் போர்க்கோலம்

வசீகரன்
வண்டியில் பூட்டிய!
மாடுகள் முதுகு நிமிர்த்தி!
நம்பிக்கையோடுதான் நடக்கிறது!
அகப்பட்டதை ஏற்றிய!
கைகளும் கால்களும்!
வலிகளோடுதான் மிதக்கிறது!
குண்டு சுமந்து வரும் வானூர்தி!
நெஞ்சைக் கிழிக்கிறது!
நெடுநாள் எரியும் நெருப்பில்!
பிஞ்சைப் புதைக்கிறது!
பதினைந்தைக் கடக்காத பருவத்தின்!
கனவுகள் பறித்து!
வன்னிக் காட்டின் நடுவிலே!
வான் குண்டு!
குருதிக் கோலம் போடும்!
ஆசை ஆசையாய்க்!
கட்டிய வீடுகள் எல்லாம்!
முகமிழந்து... முகவரியிழந்து...!
அழிந்து போய்க் கிடக்க!
ஆச்சியின் புலம்பல் கேட்கும்!
பாடசாலைக்குப் போன பிள்ளை!
பாதி வழியிலே...!
தாய்மண்ணை அணைத்தபடி!
இரத்தச் சகதிக்குள்!
விழிகள் திறந்தபடி!
இழவு வீட்டின்!
குரல்கள்கூட இல்லாமல்!
நடுத் தெருவில்!
இறந்து கிடக்கின்றான்!
பரந்தன் பாடசாலையில்!
பரீட்சை எழுதமுடியவில்லை!
கதறி அழுது கொண்டு!
சிதறி ஓடுது குஞ்சுகள்!
பட்டினியால் மரணங்கள்!
பார்த்துப் பழகிவிட்டது!
மனவதையால் மரணங்கள்!
புதிதாக பிறக்கிறது!
எங்களோடு வாழ்ந்த!
குற்றத்திற்காகவே!
ஆறறிவு படைத்த!
மனித மிருகங்களால்!
ஐந்தறிவு படைத்த!
மிருக மனிதர்கள்கூட!
சிதைந்து கிடக்கிறார்கள்!!
இறைச்சிக் கடைகளில்!
ஆடு மாடு அறுப்பவன்கூட!
இன்று திரும்பி நின்று!
அழுகிறான்!
அவனுக்கும் வலிக்கிறது!
பச்சைப் புல்வெளிகள்!
எறிகணை வீச்சில் கருகிட!
மாமரத்தின் குயில்களும்!
எங்கோ பறந்து போனது!
குரைக்கும் நாய்கள் கூட!
இப்போது எமக்காக!
கண்ணீர் விட்டழுகிறது!
ஏக்கத்தோடு பெருமூச்சும்!
விடுதலை நெருப்பின்!
விழிகள் பார்த்தபடி!
காத்துக் கிடக்க!
உயிர்ப்பலிகள் தொடர்கிறது!
உங்களுக்கு இரவிலாவது!
விடிந்தது!!
எங்களுக்கு பகலிலாவது!
விடியுதா பார்ப்போம்!!
-வசீகரன்!
நோர்வே

உறுத்தல்

செல்வராஜ் ஜெகதீசன் - அபுதாபி
இருந்தபடியேதான் இருந்தாள்!
அந்த எழுபது வயதுக் கிழவி.!
வருவோர் போவோர் தரும்!
இரண்டிரண்டு பிஸ்கட்கள்!
அவ்வப்போது யாராவது தரும் - ஒரு!
அரை டம்ளர் தேநீர் சகிதம்!
இருந்தபடியேதான் இருந்தாள்!
அந்த எழுபது வயதுக் கிழவி.!
அந்த வங்கி வாசல் தேநீர் கடை!
அவளின் வாடிக்கை வாழ்க்கை போல.!
இடது கையில் இரண்டாயிரம்!
சொச்ச விலை ஷூவுடன்!
இருந்தேன் நானும் அந்த!
இடத்தில் ஒரு தேநீருடன்.!
ஒன்றிரண்டு நிமிடங்கள்!
ஒருவாறாய் சிந்தித்தவன்!
பர்சில் பளபளத்த!
பல வண்ண நோட்டுக்களில்!
ஒரு நூறைக் கொடுத்துவிட்டு வந்து!
ஒரு வாரம் ஆன பின்னும்!
குனிந்து அணியும்போதெல்லாம்!
இன்னமும் உறுத்திக்கொண்டுதான் இருக்கிறது!
இந்த இரண்டாயிரத்து சொச்ச விலை ஷூ.!
!
-செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

கிராமம் தேடி

ராஜா கமல்
சுங்கிடி சேலைகள் போய்!
எங்கும் சுடிதார் மயம்;!
பாவாடைப் பெண்கள்!
எல்லாம் பர்முடாஸில்!
பூ வாடை வீசிய!
கூந்தலில் எல்லாம்!
பூவெண்ணை வாசம்!
சட்டி ஒலிக்க!
சமைத்த பெண்கள்!
எல்லாம் TV பெட்டி!
முன்னே முடக்கம்!
பாண்டி விளையாடிய!
சிறுமிகள் இன்று!
சீடி யில் சித்திரம்!
பார்கின்றனர்!
ஓடி ஆடிய பிள்ளைகள்!
எல்லாம் இப்போது!
வீடியோ கேமில்!
ஒடுங்கி விட்டனர்!
மயிலிறகை!
புத்தகத்தில் வைத்து!
குஞ்சு தேடும்!
குழந்தைகள்!
இன்று இல்லை!
அம்மா என்று!
அழைத்த மழழைகள்!
இன்று மம்மி!
என்றழைக்கிறது!
சந்திப்பு முனை!
வைத்து சந்தித்த!
இளைஞர்கள் எல்லாம்!
இன்று சாடிலைட்!
வலைக்குள்!
எங்கள் ஊர்!
ஆற்று மணலை!
அலங்கரித்த ஜனங்கள்!
எல்லாம் போய்!
வெற்று மணலாய்!
காட்சி தர!
நான் மட்டும்!
பட்டினத்திலிருந்து!
பழைய கிராமம் தேடி . . .!
ஆம் என் கிராமம்!
இன்று நகர உடை உடுத்திய!
கிராமத்தானாய் . . .!
பம்பரம் விட்ட!
பாவையர் எங்கே!
கும்மியடித்த!
குமரிகள் எங்கே!
கோலி ஆடிய!
சிறுவர்கள் எங்கே!
நெல்லிகாய் விற்ற!
ஆயா எங்கே!
ஏக்கமாய் நான்!
தொலைத்து விட்ட!
என் கிராமத்தை!
தேடுகிறேன்.!
!
-ராஜா கமல்