சாபங்களைச் சுமப்பவன் .. சூறாவளி - எம்.ரிஷான் ஷெரீப்

Photo by Maria Lupan on Unsplash

யின் பாடல் !
01.!
சாபங்களைச் சுமப்பவன் !
-----------------------------------!
நேர் பார்வைக்குக் குறுக்கீடென!
ஒரு வலிய திரை!
ஏமாற்றுபவனுக்கு இலகுவாயிற்று !
பசப்பு வரிகளைக் கொண்ட!
பாடல்களை இசைத்தபோதும்!
வெறித்த பார்வையோடு தான்!
துயருறுவதாகச் சொன்ன போதும்!
பொய்யெனத் தோன்றவில்லை!
ஏமாறியவளுக்கு!
இருள் வனத்திலொரு ஒளியென!
அவனைக் கண்டாள் !
புகைப்படச் சட்டங்களுக்குள்ளிருந்து நீண்டன!
வாழ்வு கொடுப்பதாகச் சொன்ன!
அவனது கைகள்!
ஒலிக் கோப்புகளிலிருந்து வழிந்தன!
தூரத்திலிருந்து அவனளித்த உத்தரவாதங்கள் !
அவளது கைகளைப் பிணைத்திருந்தது!
அவனிட்ட மாயச் சங்கிலி!
விலங்கிடப்பட்ட பறவையென!
காலடியில் வீழ்ந்துகிடந்தாள்!
சிறகுகளை ஒவ்வொன்றாகப் பிய்த்தெறிந்தன!
கூரிய நகங்களைக் கொண்ட!
அவனது விரல்கள்!
பின்னர் உச்சியில் ஏற்றிவிட்டு!
விரைத்த ஒரு பொம்மையென விழச் செய்தான் !
நேர்கோடென நட்சத்திரமொன்று வீழ்ந்த இரவில்!
இருவரையும் நனைத்தது மழை!
அவளது குருதியும் வேதனையின் ஓலமும்!
தடயமழிந்து போயிற்று!
என்றென்றைக்குமவளது!
சாபங்களைச் சுமப்பவனானான் அவன் !
!
02.!
சூறாவளியின் பாடல் !
---------------------------!
பலம் பொருந்திய!
பாடலொன்றைச் சுமந்த காற்று!
அங்குமிங்குமாக அலைகிறது !
இறக்கி வைக்கச் சாத்தியமான!
எதையும் காணவியலாமல்!
மலைகளின் முதுகுகளிலும்!
மேகங்களினிடையிலும்!
வனங்களின் கூரைகளிலும்!
நின்று நின்று தேடுகிறது !
சமுத்திரவெளிகளிலும்!
சந்தைத் தெருக்களிலும்!
சுற்றித்திரிய நேரிடும்போது!
இரைச்சல்கள் எதுவும் தாக்கிடாமல்!
பொத்திக்கொள்கிறது பாடலை !
பறவைகள் தாண்டிப் பறக்கையிலும்!
காத்துக்கொள்ளப்படும்!
இசை செறிந்த பாடல்!
சலித்துக் கொள்கிறது!
ஓய்வின்றிய அலைச்சலின்!
எல்லை எதுவென்றறியாது !
தனிமைப்பட்டதை!
இறுதியிலுணர்ந்தது!
தெளிந்த நீர் சலசலக்கும்!
ஓரெழில் ஆற்றங்கரை!
மரமொன்றின் துளைகளுக்குள்ளிருந்து!
வெளிக்கசிந்து பிறந்த நாதம் !
இருளுக்குள் விசித்தழும்!
பாடலின் கண்கள் துடைக்கும் காற்று!
அதைச் சில கணங்கள்!
அந்தரத்தில் நின்று!
பத்திரமாகப் பார்த்திருக்கச் சொல்லி!
ஆவேசத்தோடு கீழிறங்கும் !
பின்னர் பாடலை அழ வைத்த!
காரணம் வினவி!
தான் காணும்!
வெளி, தெரு, சமுத்திரம், நதி, வனமென!
அத்தனையிலும் தன் சினத்தினைக் காட்டி!
அடித்துச் சாய்க்கும் !
இயலாமையோடு எல்லாம்!
பார்த்திருக்கும் பாடல்!
இறுதியில் கீழிறங்கி!
எஞ்சிய உயிர்களின்!
உதடுகளில் ஒப்பாரியாகி!
கோபக் காற்றெதிரில் செத்துப்போகும் !
காலம்!
இன்னுமோர் பாடலை!
காற்றுக்குக் கொடுக்கக் கூடும்
எம்.ரிஷான் ஷெரீப்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.