சிவதீபனுக்கோர் சபதம் கேள் - வித்யாசாகர்

Photo by Tengyart on Unsplash

01.!
சிவதீபனுக்கோர் சபதம் கேள்!!
--------------------------------------!
வன்னித் தீவின் தளபதியே!
நெஞ்சுக் கூடெரித்து நஞ்சுண்ட தீபமே !
ஆணையிரவில் ஆணையிட்டு -!
புலிக்கொடி நாட்டிய பகிரதா - கேட்கிறதா???!
எல்லி நகைத்தவரிடம்!
சொல்லி அடித்த வீரமே!
இருபத்தைந்து ஆண்டில் !
புலிகளின் வளர்ச்சியோடு வளர்ந்த போர்புயலே - கேட்கிறதா???!
சிங்களனாயிரம் சங்கருத்து!
முல்லைத் தீவுபிடித்து!
புலித்தலைவனின் படைக்கு மீண்டுமிரண்டு!
பீரங்கி பரிசளித்த சிவதீபமே - கேட்கிறதா???!
ஈழ கனவு சுமந்து !
போராட்ட நெருப்பு குழைத்து!
வீரமறவர் குருதிகளந்த மண் அணை கட்டி!
கிளிநொச்சியை காத்த மாவீரா - கேட்கிறதா??? !
அர்ப்பணிப்பு, வீரம், உறுதிக்கு வலு கூட்ட!
வடப்போர் முனையில் நின்று!
பரிசளிப்பு விழா நடத்தி - வீரர்களின் நெஞ்சுக்கு!
பேச்சுரம் பாய்ச்சிய கட்டளை தளபதியே - கேட்கிறதா???!
அறுபதாண்டு காலம் ஈழம் சுமந்த!
விடுதலையென்னும் ஒற்றை வார்த்தையை!
இருபத்தைந்தாண்டு காலம் நீ சுமந்து!
திருப்பித் தருகையில் உயிரையும் தந்த தீபனே;!
இதயம் முழுதும் ரத்தமின்றி!
பெற்ற உற்ற உறவுகளின்றி !
ஒற்றை மரமாகவேனும் நிற்போம்,!
நினைவில் எமை மறந்தும் ஒழிப்போம் -!
உனை மறவோம் கேள்;!
ஈழமுள்ளவரை நீயிருப்பாய்!
உன் நினைவற்று போகும் முன் !
ஈழம் படைப்போம்! !
வெள்ளையப் படைக்கு சிக்குண்டு மாய்ந்த!
இந்திய மரணங்களை மறந்து !
ஈழத்தில் - அடிமை சங்கிலி பூட்ட புகுந்த !
அமைதிப் படையென்ன -!
ஆயிரம் படை வரட்டும்;!
எப்படை வரினும் எம் படை வெல்லும் தினம்!
உனக்கே உனக்கே உரித்த-தெம் சபதம் கேள்!!!!
----------------------------------------------!
குறிப்பு: கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட!
தீபனின் இயற்பெயர் 'வேலாயுதபிள்ளை பகீரதகுமார். இயக்கப்பெயர் சிவதீபன்.!
இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டுள்ளார்
வித்யாசாகர்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.