தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

அழைப்பு

எதிக்கா
அழைப்பு!
---------------!
புனைபெயர் பலகொண்டு!
முகவரி சொல்லாமல் !
அணுகிவந்தாய்!
உனை !
ஏற்க !
மறுத்தேன் - இன்று !
நீ !
யாரென !
உணர்ந்து!
உனை ஏற்க !
மனம் ஏங்கி நிற்கிறேன் - ஆனால்!
நீயோ !
தொலை தூரம் !
போய்விட்டாய்

இந்தப் பாடல்.. என்னைத் தீயில்

அஷ்ரஃப் சிஹாப்தீன்
எறிந்தவள்!
01.!
இந்தப் பாடல்!
-------------------!
ஒரு தொட்டிலாக ஆட்டுவதற்கோ!
அன்றி!
ஓர் ஆரத்தித் தட்டாக ஏந்துவதற்கோ!
ஆகாதது இப்பாடல்!
ஒரு கனவை விபரிப்பதற்கோ!
அன்றி!
ஒரு கனவானைத் துதிப்பதற்கோ!
ஒவ்வாதது இப்பாடல்!
ஒரு சிரிப்பாக வெடிப்பதற்கோ!
அன்றி!
ஒரு கூத்தாக நடிப்பதற்கோ!
முனையாதது இப்பாடல்!
ஒரு காதலில் கசிவதற்கோ!
அன்றி!
அதன் கண்ணீரில் மசிவதற்கோ!
அணையாதது இப்பாடல்!
ஒரு காகம் போல் கரைவதற்கோ!
அன்றி!
ஒரு கிளியைப் போல் கதைப்பதற்கோ!
முயலாதது இப்பாடல்!
ஒரு கைத்துப்பாக்கியாக நீட்டவோ!
அன்றி!
ஒரு கைக்குண்டாக வெடிக்கவோ!
விரும்பும் இப்பாடல்!
02.!
என்னைத் தீயில் எறிந்தவள்!
------------------------------------!
நீ அறிய மாட்டாய்!
ஒரு!
பூ உதிர்ந்தால் கூடப் பொசுங்கும் மனசு இது!
உனது வருத்தம் உனக்குப் பெருஞ்சுமைதான்!
அவலத்தை உரைத்தாய் நீ!
எனக்குள் பூத்திருந்த!
ஒரு கோடிப் பூக்களிலும்!
தீப்பற்றிக் கருகிற்று!
நோன்பு நாட் காலையொன்றில்!
வந்திருந்தாய்!
வெளிநாடு போயேனும் வறுமை துடைப்பதற்கு!
சிறிசுகளுக்கேனும் சோறு இடும் கனவுகளைக்!
கலங்கிக் கிடந்த கண்ணில் வைத்திருந்தாய்!
‘பாஸ்போர்ட்’ உன்வயதை முப்பதெனக் காட்டிற்று!
சின்ன வயதில்!
நரை விழுந்து கிழடு தட்டி!
பாதிப் பல் விழுந்து பரிதாபமாய் நின்றாய்!
முப்பது வயதுக்குள் மூப்பான ரகசியத்தில்!
சந்தேகங்கொண்ட!
பெரும்பான்மைப் பெரியவரின்!
பிடியில் நீயிருந்தாய்!
உன் மொழியை அவர் புரியார்!
கவலை தின்று!
காற்றுக் குடிக்கின்ற கலையறிவாய் நீ!
அவர் அறியார்!
உன்னை விசாரிக்க என்னை ஏன் பணித்தார்!
சொன்னாய் நீ எல்லாம்!
அந்த அதிகாலை எனக்குள் பூத்திருந்த!
ஒரு கோடிக் கவிதைகளும் தீப்பற்றிக் கருகிற்று!
‘....ரெண்டு வரிசமாச்சி!
கொள்ளியெடுக்கப் போனவர சுட்டுப்போட்டாக...!
மூணு புள்ள எனக்கி!
ஒரு றாத்தல் பாண் வாங்கித் தின்னச் செல்லி!
தங்கச்சிக்கிட்ட பாரங்குடுத்துட்டு வாறன் வாப்பா...!’!
ஒரு!
பூ உதிர்ந்தால் கூடப் பொசுங்கும் மனசு இது!
நீ அறிய மாட்டாய்தான்!
என் கண்ணில் குளம் கண்டு!
உன்னை அனுமதிக்க!
போனாய் நீ பெண்ணே!
என்னை ஒரு பெருந்தீயில் எறிந்து விட்டு

அகநானூறு... காதல் திருட்டு

செ.ஹேமலதா
அகநானூறு !
காதல் உணர்வில் !
உயிரது பாதியாய் !
பறிபோகின்ற வேதனையை !
சிந்தாமல் சிதறாமல் !
அள்ளியெடுத்து அழகாய் !
கோர்த்த பாமாலையே !
அகநானூறு !
சிலைவடிக்கும் சிற்பியின் !
கவனமும் சிலநொடிகள் !
சிறகடித்துப் பறக்கமுடியும் !
கதவோரம் சாய்ந்து !
கால்கடுக்க காத்து !
கண்ணிமைகள் இமைத்தால் !
கண்ணாளன் வருகின்ற !
வழிதனை மறைத்திடுமென !
கண்ணிமைக்காமல் கிடக்கும் !
பெண்ணவள் உணர்ச்சியே !
அகநானூறு !
காதோரம் சுருண்டிருக்கும் கூந்தல் !
கன்னத்தை வருடுகையில் !
காதலன் தீண்டலென அலைபாயும் !
அவளது கண்களின் ஏக்கமே !
அகநானூறு !
ஆனால், !
சின்னதொரு குழப்பம் !
ஈருடலும் ஓருயிருமே !
காதல். !
பிரிவென்பது நினைப்பவர்க்கு !
பிரியாத மனமிருக்க !
உணர்வென்பது உடனிருக்க !
பிரிவென்ற பொய்யெதற்கு !
காதலில், !
காதலென்னும் ஊடலில் !
பிரிவு பொய்யானால் !
பிரிவென்னும் பொய்யினை !
மீண்டும் மீண்டும் கூறுவதே !
அகநானூறு !
காதல் ஊற்றினைக் !
காமக் கடலினைக் !
கண்முன் விரித்து !
கண்களைக் கட்டிக்கொண்டு !
விளையாடும் கண்ணாமூச்சி விளையாட்டே !
அகநானூறு !
2.காதல் திருட்டு !
களவுபோன !
கன்னியின் இதயம் !
களவாடிச் சென்ற !
கள்வனுக்கு எழுதுவது. !
இப்பொழுதெல்லாம் என் இதயம் துடிப்பதில்லையடா !
என் இதயம் திருடப்பட்ட இடத்தில் !
குடிவந்திருக்கும் உன் நினைவுகளே !
என்னில் விடாமல் துடிக்கின்றன !
காதல் திருட்டின்போது நீ விட்டுச்சென்ற அடையாளமாய் !
என் கன்னத்தில் !
உன் உதடுகளின் ரேகைகள் !
தண்ணீர் கேட்ட அம்மாவிடம் !
தலையணை எடுத்துக் கொடுக்கும் !
கிறுக்கியாய் என்னை மாற்றிவிட்டாயடா* !
என் கண்களுக்குள்ளும் !
காதல்நோய் பற்றிக் கொண்டதடா* !
என்ன புரியவில்லையா? !
சட்டென வந்த காற்று !
சம்மதம் கேட்காமல் !
என் உடையினை சரிக்க !
என் கண்கள் காற்றிடம் மொழிகின்றன !
இதற்கு உரிமையானவன் நீயல்லவென்று* !
என்னை வாட்டியெடுக்கும் !
காதல்நோயில் தீவிரத்தால் !
உன் இதயமென்னும் சிறையில் !
நான் கைதியாகிவிட்டேனடா* !
திருடியது நீ !
சிறைப்பட்டதோ நான்* !
என் உயிருக்குள் !
அணையாத நினைவென்னும் தீவைக்கும் !
காதல்நோயின் தீவிரம் தணிக்க !
உன் மணமென்னும் மணவறையில் !
என்னை மனைவியாக்க வாடா. !
இப்படிக்கு உன் திருட்டுக்கு !
உன்னுள்ளேயே காதல் கைதியான !
காதலி இதயம். !
தமிழச்சி செ.ஹேமலதா, !
இரண்டாம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி, !
விவேகானந்தா மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், !
திருச்செங்கோடு

விடியலுக்கு ஏங்கும் வெற்றுப் பிம்பங்கள்

ராமலக்ஷ்மி
ஆசை அலைகள்!
ஆர்ப்பரிக்கும்!
அரசியல் அரங்கிலுன்!
அடிப்படை!
நியாய உணர்வுகள்!
நசிந்து விடாதென்றே!
நம்பி இருந்தோம்!!
இன்று!
புல்லுருவிகள்!
புசிக்கத் தொடங்கி விட்டன.!
அவைஉன் பழைய!
புண்ணியங்களைப்!
புதைத்து விட்டுப்!
பணத்துக்காகப்!
பாவம் பண்ணச் சொல்லி!
பசியாறத் தொடங்கி விட்டன!!
அந்த!
நய வஞ்சகர்களின்!
கயமை மகுடிக்கு!
நர்த்தனம் ஆடும்!
நச்சுப் பாம்பாக!
நீமாறி விட்டதை!
முதலில்!
எம்கண்கள் நம்ப மறுத்தாலும்!
பின்னர் உன்னால்!
எம்நெஞ்சில் உருவாக்கப்பட்ட!
புண்கள்-!
அவை!
நிஜமே என்று!
நிச்சயப்படுத்தி விட்டன!!
அன்று!
உன் உதடுகள்!
உச்சரித்த!
உறுதி மொழிகளை!
உண்மையென்றே நம்பி!
உற்சாகம் அடைந்திருந்தோம்.!
அவை அச்சான!
தினசரிகளைக் கூட!
ஆதாரமாய்க் கையிலேந்தி-!
அன்றைய கஞ்சியைத் துறந்து!
ஆளுயர மாலையாக்கி-!
ஆவலுடன் உன்!
ஆடம்பர மாளிகையின்!
வாசல்தேடி வந்திருந்தோம்.!
கற்றைநோட்டுக்களைத்!
தந்து செல்லும்!
கனவான்களின்!
கார்களுக்கு மட்டும்!
விரியவே திறந்த!
வெளிக் கதவுகள்-!
கனவுகளைக் கண்களில்!
தேக்கிநின்ற எங்களைக்!
கடைசி வரை!
கண்டு கொள்ளவேயில்லை!!
அட!
போலிக்காகக் கூடப்!
பொது மக்களைப்!
பொறுத்துப் போகாத!
புதுமையை!
இங்குதான் பார்க்கிறோம்!!
குற்றம்யாவும் அந்தக்!
கூர்க்கன்மேல்தான் என்றெண்ணி!
அப்படியும் அயராமல்!
அடுத்தமுறை வந்திருந்தோம்.!
உன்!
தரிசனம் வேண்டி!
எமை மதியாத-அத்!
தலைவாசல் விட்டுச்!
சற்று தள்ளியே!
கவனமுடன் இம்முறை!
தவமிருந்தோம்.!
வெளி வந்ததுன்!
படகு வண்டி.!
தென் பட்டது!
உன் திருமுகம்.!
முன் வந்து!
முகம் மலர்ந்தோம்.!
கை கூப்பிக்!
கலங்கி நின்றோம்.!
நீயோ!
கண்டு கொள்ளாமல்!
வண்டியை விடச்!
சொன்னாய்.!
ஆனாலும்!
கணநேரத்தில் சுதாகரித்து!
காரினை மறித்துக்!
கரகோஷம் இட்டோம்.!
நீயோ!
காவலரை நோக்கிக்!
கண்ஜாடை காட்டியே-!
எம்மைக்!
கலைக்கச் செய்தாய்.!
உன் வாகனம்!
எம் நம்பிக்கைகள்மீது!
புழுதியை இரைத்துவிட்டுப்!
புறப்பட்டுச் சென்றது.!
அப்போதுதான்!
இந்த!
அப்பாவி!
ஜனங்களின் மனங்கள்!
யார் பாவி என்று!
தப்பின்றி உணர்ந்தது!
காலங்கடந்தே யாயினும்!
தப்பின்றி உணர்ந்தது.!
போலிக்காகக் கூடப்!
பொது மக்களைப்!
பொறுத்துப் போகாத!
புதுமையைப்!
பழகவும்!
தெரிந்து கொண்டோம்.!
ஓட்டு வீட்டில்!
வாழ்ந்த உன்னை!
ஓட்டுப் போட்டு!
மாடி வீட்டில்!
ஏற்றி வைத்தோமே?!
பதவிக்குநீ வந்தால்!
எம்பிள்ளைகள் படிப்பார்-!
பானைச்சோறு உண்பார்-!
படுத்துறங்க கூரைபெறுவார்-!
என்றெதேதோ எண்ணித்தானே!
ஊரோடு ஒட்டுமொத்தமாய்!
உனக்கோர்!
வெற்றிக்கொடி அளித்தோம்!!
தேடித்தேடி வந்தன்று!
தேனொழுகப் பேசியநீ!
உதவிகேட்டு இன்று!
கதறிவரும்!
எங்களைக் கண்டு-!
பதறியடித்து!
ஓடிவரா விட்டாலும்!
பாராமுகமாய் இருப்பதைக்!
கூடவா தவிர்த்திட!
இயலவில்லை?!
பட்டத்து அரசன்நீ!
கொத்தவரும் பருந்தானாய்.!
சிதறிப் போன!
நம்பிக்கைகளைச்!
சேகரிக்கும் முயற்சியில்!
சிறகொடிந்து போன!
சிட்டுக் குருவிகளாய்!
சீரழிந்து கொண்டிருக்கும்!
எங்களுக்கு-உன்!
சிந்தனையில் இடமுண்டா!
என்றறியோம்!!
உனக்கிருக்கும் இன்றைய!
தகுதியைத் தந்ததே உன்!
தொகுதி மக்கள்தாம்!
என்பது!
உனக்கு மறந்தேவிட்டது.!
உன்!
மனசாட்சியும் மரத்துவிட்டது.!
சுயநலம் எனும்!
சுகந்தமான கிரீடத்தைச்!
சூடிக் கொண்டு!
மனபலம் இழந்து!
மருண்டு போய்!
மருகும் எங்களுக்கோர் நல்ல!
மாற்றம் தர!
மறுக்கும் உன்!
மனசாட்சி மரத்தேதான்விட்டது!!
எமது!
உயிர்கள் இங்கே!
ஊசலாடிக் கொண்டிருக்க!
நீயோ!
உற்சாகமாய் ஊழலில் அங்கே!
ஊஞ்சலாடிக் கொண்டிருக்கின்றாய்!!
உலை வைக்கவும்!
வகையின்றி எம்!
உள்ளங்கள் உழலுவதை!
உணராமல் எம்!
உணர்வுகளுக்கு!
உலைவைத்து விட்டுநீ!
உல்லாசமாய் உலகைச்சுற்றி!
உலாவந்து கொண்டிருக்கின்றாய்!!
நீங்கள்!
வெற்றி பெறுவதே!
வெளி நாடுகளைச்!
சுற்றிப் பார்க்கத்தானே?!
ஆசை அலைகள்!
ஆர்ப்பரிக்கும் அரசியல்!
அரங்கிலுன் அடிப்படை!
நியாய உணர்வுகள்!
நசிந்து விடாதென்ற!
எங்கள்!
நம்பிக்கைகள்தாம்!
நசிந்து விட்டன!!
அடிப்படை!
வாழ்வாதார வசதிகள்!
என்பவை எமக்கு!
கானல்!
நீராகி விட்டன!!
வறண்ட வாழ்வெனும்!
வகுத்தலுக்கு விடைதேடும்!
வெற்றுப் பிம்பங்களாகி!
நிற்கின்றோம்!!
***!
ஒவ்வொரு தேர்தலும்!
நம்பிக்கையை விதைப்பதும்!
ஓரிரு திங்களில்அவை!
தேய்ந்து மறைவதுமாய்!
இடிதாங்கி இடிதாங்கி எம்!
இதயங்கள் வலுப்பெறுகின்றதா!
ஆடி ஆடி ஒருநாள்!
அடங்கியே விடப்போகின்றதா?!
இக்கேள்விகளுக்கு விடையைத்!
தேடிடத் தெம்பில்லாமல்!
எம்மைச் சுற்றிப்படர்ந்திருக்கும்!
சூனியம் சுட்டெரிக்கப்பட்டு!
வெளிச்சமானதோர் விடியல்!
வந்தேதீரும் என-!
நசிந்துபோன நம்பிக்கைகளை!
வழக்கம் போலப்!
புதுப்பித்துக் கொண்டு-!
இதோ கிளம்பி விட்டோம்!
இப்போதும் வாக்களிக்க

என் தேவதை இருக்குமிடம்

ப.மதியழகன்
பசியடங்க உண்பதெல்லாம் !
ருசியற்றுப் போனது !
கடந்து செல்லும் பாவைகளிடத்தில் !
உன் சாயல் தெரிந்தது !
திசையெங்கும் உன் வாசம் !
வானெங்கும் உன் எழில் தோற்றம் !
தோட்டத்தில் மலர்ந்துள்ள பூக்களெல்லாம் !
என்னிடத்தில் !
உன்னைப் பற்றி நலம் விசாரிக்கின்றன !
'அவள் பொன்மேனியை !
மழையாய் நான் சற்று !
உரசலாமா'- என்று !
கருமேகம் கூட !
என்னைக் கிண்டல் செய்கிறது !
'அவள் கைகளில் தவழும் குடையாக !
நீ பிறந்திருந்தால் !
அவள் கூடவே இருக்கலாமென்று'- !
கதிரவன் என்னைப் பார்த்துக் !
கண்சிமிட்டியது !
'சொகுசுவாகனம் இல்லையென்று !
கலலைப்படாதே !
மேகங்களில் நீ அவளுடன் !
உல்லாசமாய் ஊர்வலம் செல்லலாமென்று' !
கிளியொன்று பறந்தோடி வந்து !
காதில் கிசுகிசுத்தது !
நேற்றிரவு என்னைப் பற்றிய !
நினைவுகளில் ஆழ்ந்து !
அவள் கன்னம் சிவந்ததாக !
வெண்ணிலா என்னிடம் !
ரகசியம் சொல்லிச் சென்றது !
'உனக்குறியவளின் மூக்குத்தியாக !
நான் மண்ணில் வந்து !
ஜொலித்திடவா' - என்று !
அனுமதி கேட்டு !
வான் நட்சத்திரங்கள் !
என் வீட்டு வாசலில் !
வரிசையில் காத்திருந்தன !
'என்னைப் பற்றிய கனவுகளின் !
இடைவிடாத தொந்தரவுகளால் !
உறக்கம் வந்து அவளைத் !
தழுவுவதே இல்லை' - என !
புவிமகள் வந்து புது செய்தியொன்றை !
விடியலில் தந்தாள் !
'தேன்நிலவுக்கு தேவலோகம் !
வந்துவிடுங்கள்' - என்று !
தேவேந்திரன் வேண்டுகோள் வைத்தான் !
இந்திரனிடம் நான் சொன்னேன் !
என் தேவதை இருக்குமிடமே !
எனக்குத் தேவலோகமென்று

வலையும் வலமும்

சு.திரிவேணி, கொடுமுடி
தோழமையே... !
உலகின் உன்னதம் நட்பாம் !
சொல்கிறார்கள் இன்னமும்! !
நானும் கூட நம்பியிருப்பேன் - !
உன்னைக் காணாதிருந்தால்! !
உலகின் சுகந்தங்கள் எல்லாம் !
ஒன்றாய்த் திரண்டிருப்பதாக கருதி !
இருப்பேன் !
பறவை தேடும் வேடனாய் !
உறவை நாடுவாய் நீ! !
பறவைகளை நாடிய போதிலும் !
அவன் பறவை நேயம் கொண்டோனில்லை !
பறவையின் வலி எப்போதும் !
வேடனுக்குப் புரிவதில்லை !
நாடலும் புண்படுத்தி வெல்லலும் !
அவன் இயல்பு! !
கால எல்லைகளுக்குக் கட்டுப்படாமல் !
வலிகொண்டலைய வேண்டியது !
எதிர்ப்புத் திறனில்லாப் பறவைதான்! !
வலி கொண்டலையும் பறவையின் !
அழுகுரல் எவர் செவிகளையும் !
எட்டியதில்லை !
எட்டிய செவிகள் அவ்வுணர்வுகளை !
உணர்வதுமில்லை !
திறனில்லாப் பறவையும் கேளாச் !
செவிகளும் !
இருக்கும் வரை !
வலை விரித்து நீயும் சுகமாய் !
உலகை வலம் வரலாம்

கால நதி

இப்னு ஹம்துன்
இப்னு ஹம்துன் !
!
கொண்டாடியும் !
குறை சொல்லியும் !
பயணித்துக்கொண்டேயிருக்கின்றன !
பல கோடி பாதங்கள். !
பாதை நகர்ந்துக் !
கொண்டிருக்கிறது !
ஆழமானதொரு நதியைப் போல !
அமைதியாக..! !
புலன்களின் அனுபவச்சாயத்தை !
பூசிக்கொள்ளும் பாதங்கள் !
வேறு வழியின்றி !
விமர்சிக்கத் தொடங்குகின்றன !
பாதையினை. !
பயணம் நின்றுப்போகும் !
ஓர்பொழுதில் !
பாதங்கள் ஆகிவிடுகின்றன !
பாதையின் துளியாக... !
குறைந்தபட்சம் !
கண்ணுக்குத் தெரியாத !
ஒரு ரேகையாக

ஓரம் போ

கண்ணப்பு நடராஜ்
மனித சாரம் வரட்டும்!
உடைபட்ட முகங்களின்!
இலையுதிர்வின் சுருக்கங்கள்!
ஒரு பருவத்தின் மீளா துயரில்!
மீளும் ஆதிப் பொருளின் கதிர்ச்சொட்டுக்கள்...!
பலகோணங்களைக் காட்டும்!
ஒரு உருவத்தின் ஒப்பனை நிழல்கள்!
யாரோ விதைக்க யாரோ அறுக்க!
உண்டியற்ற வண்டியின் சுருக்கம்!
ஊதிப்போன தொந்தியின் பெருக்கம்!
ஒருபாதி நிழல் மறுபாதி அனல்!
இரத்த வர்ணம்!
வியர்வை உப்புக்கோடு!
அறுபட்ட தலைக் கொழுந்து!
மிதிபட்ட நெஞ்ச குமுறல்!
போரைப்போல்!
சுனாமிப் பேயலையைப் போல்!
பாலைவனப் பசி!
தொற்றுநோய் நாய்கள் போல்!
விலக்கப்பட்ட மனிதன்!
ஒதுங்க முடியா¢ நகரவீதி!
எங்கும் கல்வேலிகள்..!
நிழலிலும் எரிமலைப் பொறி!
பூமி நல்லதுதான் சொர்க்கம் தான்!
ஏரெடுத்தவனுக்கா? தேர்செய்தவனுக்கா?!
அதோ அந்தக் குளிரூட்டப்பட்ட மாருதிகள்!
கானல்நீரை அலைசேறாய் அடிக்கின்றன..!
செருப்பற்றகால்கள் செல்கின்றன!
அனல்தாரை பூசிக்கொள்கின்றன!
பூமியைச் செய்தவன்!
வானக் கூரையின் துவாணத்தில்!
பூமியைப் பறித்தவனின் னசணத்தில்!
எலும்பும் தசையுமாய் எழும்பும் மனிதன்!
தோலும் நரம்புமாய் உயிர்காத்த மனிதன்!
தோள் தாங்கமுடியாயச்; சுமைதாங்கியாய்!
வலிகொண்ட மூப்பனின் முழங்காற் சில்லு!
தேர்ச்சில்லில் மன்னன்!
பல்லக்கில் பவனி!
என் ஊன்று கோலை ஏன் பறித்தாய்?!
உரிமைச் சோற்றை ஏன் தடுத்தாய்?!
பந்தல் போட்ட நிழல் மரங்கள் எங்கே?!
ஏன்? ஏன்?!
இந்தப் பூமியில் சாமியாய் வந்தாய்?!
ஓரம் போ..!
மனித சாரம் வரட்டும்!
என் கூரை!
உன் கூரை!
என் இரை!
உன் இரை!
ஒரு தலைவிதி!
ஒரு பூமிமனிதர்க்கு விதிக்கப்படட்டும்!!
இந்த நீதி நிசமாகட்டும்.!
!
-கண்ணப்பு நடராஜ்

தாய்ப் பூ

எஸ்.நளீம்
கண்டுகொள்ளப் படாத!
ஒரு கொய்யாப் பூவாய் !
ஒரு பிஞ்சாக !
ஒரு காயாக !
என்னை ஒட்டி வளர்த்தாய் !
வௌவால்கள் வட்டமடிக்கும் !
ஒரு மரத்தின் !
ஒரு மூலையில் !
இலை மறைவில் !
எனை விளைவித்தாய் !
அணில் கொறித்துத் தின்னும் !
ஒரு கனிந்த நாளில் !
கமழும் வாசனையில் !
பல கண்கள் நமைப் பார்க்க !
அப்போதும் !
ஒரு கொய்யாக் கனியின் !
தொப்புள் உருவாய் !
தாய்ப் பூவே !
நீயும் ஒட்டியேயிரு!
என்னை

ஜடம்

இமாம்.கவுஸ் மொய்தீன்
மரத்தினால் ஆனதாலோ!
உலோகத்தினால் ஆனதாலோ!
கண்கூடாய்க் காண்பவற்றை!
வெளி கூறாது!
ஜடமாயிருந்திருந்து!
ஜடமாகி விட்டதாலோ?!
'ஜடம்' என்றே அழைக்கப்படுகிறது.!
இதுவும் ஓர் நாடகமேடைதான்!!
எத்தனை யெத்தனை காட்சிகள்!
நாடகங்கள் அரங்கேற்றங்கள்!
மந்திரங்கள் சத்தியங்கள்!!
அனைத்தையும் கண்டு!
ரசிப்பதோடு சரி!!
மற்றபடி 'ஜடமே' தான்.!
பெரிய மனிதர்!
உத்தமர் சாதனையாளர்!
மாவீரர் மதிப்புக்குரியவர்!
எல்லாமே வெளித் தோற்றம் தான்!!
நாற் சுவற்றுக்குள்!
அவரின் மிருகத்தனம்!
அப்ப்ப்ப் பாடா.........!!!
புலிகள் எலியாவதும்!
யானைகள் பூனைகளாவதும்...!
எதையும் காணாதது போல்!
'ஜடமா'கவே... கட்டில்! !
!
-இமாம்.கவுஸ் மொய்தீன்