கலங்கமா கருப்பு? - தீபா திருமுர்த்தி

Photo by Sven Finger on Unsplash

இறக்கையின்றி !
ஓயாது !
பறந்து கொண்டிருக்கும் !
ஊரின் உளை வாய்க்கு !
ஓய்வு கிடைக்கும்! !
மதுவின் போதையில் !
பிதற்றிக் கொண்டிருக்கும் !
மாமனின் !
ஊமைக் கண்களுக்கு !
இதுவே ஒத்தடம் தரும்! !
தம்பியின் !
செவிட்டு வாய்க்கும் !
பூட்டு போடும்! !
பழுத்துத் தொங்கி கொண்டிருக்கும் !
முதிர்ச்சியின் முனகளொடு !
கொல்லையின் பலா நாசி நிறைக்கும்... !
வாய்க்குவரும் !
வயிற்றுக்குப் போகும் வரை! !
தோட்டத்து வேலி தாண்டி !
வாசம் நிறைக்கும் !
அம்மாவும் அப்பாவும் !
ஆசையோடு !
வளர்த்து வந்த மல்லிகை! !
உனது வெள்ளையும் !
எனது கருப்பும் !
சேர்ந்து விட்டாலே போதும் !
புதிய !
நிறம் ஒன்று !
பிறக்கும்
தீபா திருமுர்த்தி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.