தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

90களின் பின் அந்தி

ஸமான்
ஒரு ஊசாட்டமும் இல்லை!
என் செம் மண் தெருவை!
தார் ஊற்றி கொன்றது யார்!
90களின் பின் அந்தியா இது!
அப்போது காகங்கள் என்றாலும்!
தெருவை கலைத்துக் கொண்டிருக்கும்!
ராணுவ வீரர்களின் சூ கால்கள்!
தெருவின் விரை மீது!
ஊன்றி ஊன்றி மிதிக்கும்!
ஜீப் வண்டிகளின்!
டயர் தடங்களில் நசுங்கிய!
கைப் பாவைகளைக் கேட்டு!
எந்தக் குழந்தை என்றாலும்!
அழுது வடிந்து கொண்டிருக்கும்!
முரட்டு துப்பாக்கிகளைக் கண்டு!
தெரு நாய்கள் குரைத்து குரைத்து!
அச்சம் எழுப்பி!
தெருவெல்லாம் கதறி ஓடும்!
90-91 களின் அதிகாலை வெண் பனிக்குள்!
உடல் கொடுகி விழி நிமிர்ந்து!
கைகள் கெஞ்ச ஒவ்வொரு மின் கம்பங்களுக்கும்!
உரமாக விதைக்கப்பட்டவர்களின்!
குருதி சொட்டிய பரள் மண் துகள்கள்!
எங்கள் உம்மாக்களின் கண்களுக்குள்ளும்!
விழுந்து கரிக்கும்!
ஒரு ஊசாட்டமும் இல்லை!
கைகளும் கண்களும்!
கறுப்பு துணியால் கட்டபபட்டு!
சும்மா கிடந்தது தெரு!
மார்பில் இரும்பு துப்பாக்கிகள்!
அழுந்தியிருக்கவில்லை!
'நீல' வானத்தில் பறவைகளின்!
சஞ்சாரம் அறவே இல்லை பின் அந்தி 6.00 மணிக்கு!
எங்கள் விளையாட்டு திடல்களில்!
யுத்த விதை விழுந்து மண் பிளந்து!
வேர் கொண்டு எழுந்த நாட்களில்!
ஒன்றா இது!
1999ல் பயத்தோடு விளையாடி கழித்த!
முன் இரா ஒன்றில்!
'ஜஃபர் மச்சான்' இனம் தெரியாத!
இரண்டு பேரால் சுட்டு கொல்லப்பட்டார்!
அவர் மெளத்தாகி கிடந்த!
மஞ்சோண்ணா மர நிழல் மட்டும்தான்!
அவர் மரணத்திற்கு சாட்சியாய்!
இருந்தது!
பின் அதையும் கதற கதற!
சுட்டு கொன்றுவிட்டார்கள்!

செந்தமிழ் கவிதைகள் 21-10-07

செந்தமிழ், சென்னை
நிறுத்துங்க!
நிறுத்தத்தை தவறவிட்டவளின்!
இயலாமைக் குரல்!
அடுத்த நிறுத்தம் வரை!
காத்திரு!!
அலட்சியத்துடன் நடத்துனர்!
திடீரெனத் தாக்கும் காற்றில்!
அலைவுற்றுத் திரியும்!
ஒற்றைத் திரிபோல!
கிடந்து தவிக்கிறது மனம்!
மூதாட்டி இறங்கும்வரை!
!
3.!
மழை உதிர்த்த!
காலைப்பொழுதொன்றில்!
திடீரெனத் தோன்றினாய்!
உன்னைக்கொல்ல ஆயத்தமாகிறார்கள்!
உடலைத் துளைத்துச் செல்ல!
துப்பாக்கியும் குண்டுகளும் தேவைப்படவில்லை!
அறுபட்டுக் கூறுகளாக்க!
கூர்கத்தியும்...!
எரித்துச் சாம்பலாக்கத்!
ஒரு குச்சி நெருப்பும்...!
அணுஅணுவாளிணி உயிரெடுக்க!
துளி விஷமும்...!
தேவைப்படாமல்!
சமையறைச் சம்புடத்தில்!
துளி உப்பெடுத்து...!
தரையைக் கெட்டியாகப் பிடித்திருந்த!
கால்களற்ற உன் அட்டை உடல்!
ஒரு பிசிறும் மிஞ்சாமல்!
கரைந்துபோகிறது காற்றோடு!
அவர்களின் மனசாட்சியைப்போல!
_ செந்தமிழ்!
முகவரி:!
அ. மாரியம்மாள் (செந்தமிழ்)!
கே_1, கே. பிளாக்,!
விசாலாட்சி தோட்டம்,!
வாரன் ரோடு,!
மயிலாப்பூர், சென்னை _ 600 004.!
செல்: 99413 51099

ஐய்யனாரு சாவதில்லை

முத்தாசென் கண்ணா
முட்ட வந்த கெடாவ !
எட்டி உதைக்கப் போன என்னைய !
தடுத்துவிட்டு !
ஆத்தா சொல்லுச்சி !
கூடாதய்யா அது ஐய்யனாரு !
கூழு ஊத்தின நாளப்போ !
அப்புச்சி அதைய வெட்டி போட்டிருச்சி !
ஆத்தா ஐய்யனாரு !
செத்துப் போச்சுன்னேன் !
இல்ல மவராசா !
அந்தா பாருன்னு !
குங்க மஞ்ச தடவி வச்சுருந்த!
கருப்பாயி வீட்டு சேவலுக்கு நேரா !
கைய நீட்டிச்சி என் ஆத்தா !
!
-முத்தாசென் கண்ணா

காதல் பூக்கும் காலம்

இ.இசாக்
இசாக் !
புதிதாக எடுத்ததாக !
புகைப்படமொன்றை அனுப்பினாய் !
அதை !
பார்த்து இரசிக்க !
என்னை !
எப்போது அனுப்பி வைப்பாய்! !
!
அடேய் !
ஏதேதோ கனவுகளால் பின்னப்பட்டிருந்தன !
பல இரவுகள் !
நாம் !
நேருக்கமாக சந்தித்துக் கொண்ட !
அந்த இரவு !
பார்வையிலேயே கழிந்தது !
பார்த்தலே காதலில் இன்பமா.? !
!
நீ தான் முதலில் !
இல்லை நீ தான் முதலில் என !
ஒரே நேரத்தில் !
நாம் !
கொடுத்துக்கொண்ட !
தொலைபேசி முத்தங்களின் !
வானலை சந்திப்புதான் !
மின்னலோ. !
!
நீயென்ன கடிவாளமா !
உன் அறிமுகத்திற்கு பிறகான !
பயணங்கள் !
மிக இயல்பாக நிகழ்கிறது !
எந்த சலனமுமற்று. !
!
ஒரு பிறந்த நாளில் !
வித்தியாசமான பரிசொன்று அளித்தேன் !
உனக்கு. !
நீ !
உன் வாழ்வையே !
பரிசாக அளித்தாய் !
எனக்கு. !
!
நாம் !
நம் நேசிப்பின் !
ஆழம் !
அறிவதற்கான பயணத்தை தொடங்கினால் !
அது !
அடிவானத்தை தொடுவதற்கான !
பயணம் போல. !
!
[ விரைவில் வெளிவரவுள்ள காதல் பூக்கும் காலம் தொகுப்பிலிருந்து ]

உச்சியில்

ராஜா கமல்
தத்துவ தேடல்கள்!
நதிகரையாய் நீளும்!
மனதுக்குள் கேள்விகள்!
கடல் அலையாய் எழும்!
படிக்க படிக்க வளரும்!
வாழ்கை பாடம்!
பலரும் புரியாமல்!
பிறந்து மறையும் சோகம்!
பள்ளிப் பிஞ்சுகளுக்கே!
பணம் தேடும் பாடம்!
நெஞ்சக் குமுறல்கள்!
ஓசையின்றி மறையும்!
நியாயங்களுக்கு!
மவுனப் பூட்டு!
நேர்மைக்கு!
இருட்டறைச் சிறை!
இலக்கணமில்லா!
இறையாண்மை!
வரம்பு மீறல்களே!
வாழ்கைச் சட்டம்!
கேவலங்களே!
கேளிக்கை!
நாணம் இன்று!
அவ நாகரிகம்!
வசதிகள் மட்டுமே!
வாழ்கை லட்சியம்!
மனிதம் என்பது!
மகான்களுக்கு மட்டும்!
ஆம், நாம் இன்று!
நாகரிகத்தின் உச்சியில்

எது வெற்றி

ஜெ.நம்பிராஜன்
கடைசி ஓவர்களைத் தவறாமல் பார்த்து விட !
அலுவலகத்திலிருந்து அவசரப் பயணம் !
சிக்னலில் ஒருபுறம் !
கைக்குழந்தையுடன் பிச்சைக்காரி !
மறுபுறம் !
வசூல் வேட்டையில் சாலைக்காவலர் !
இடதுபுறம் போகலாமென்றால் !
மூத்திர வாடை அடிக்கும் முட்டுச்சந்துகளில் !
டாஸ்மாக்கர்களின் சுகமான தூக்கம் !
வலதுபுறமோ !
தண்ணீர்க் குடங்களின் அணிவகுப்பு !
நேர்ச்சாலையில் !
குழிகளில் தடுக்கி விழாமல் வீடு சேர்ந்தால் !
தங்கக்கோப்பை பரிசு நிச்சயம் !
தட்டுத்தடுமாறி வீடு சேர்ந்ததும் !
கதவு திறந்த மனைவி சொன்னாள் !
இந்தியா வின் !
-ஜெ.நம்பிராஜன்

பருக, தீர்ந்துபோனது கனவல்ல

கலாசுரன்
மனமுடைந்து சிதறிய!
துகள்களின் நிழலில்!
குளிர்காயும் ஞாபகங்கள்...!!
கருவிழி அசையாது அர்த்தமின்றிப்!
பார்த்திருக்கும் கண்முனை வெற்றிடத்தில்!
அர்த்தமிகு ஆயிரம் கனவுகளின் வீதிநாடகம்...!!
சொல்வார்த்தை கேட்காமல்!
சற்று தனிமை விரும்பி முன்னிருந்த!
தேநீர்க் குவளையில் குதித்தது கனவொன்று...!!
கடைவிழி முறைப்போடு மெல்ல மெல்ல!
பருக, தீர்ந்துபோனது கனவல்ல!
சலனமின்றி சில நினைவுகள் மட்டும் தான்...!!
வார்த்தைத் தொகுப்புகள் கைகூடாது!
நழுவிட எட்டிப்பிடிக்கையில்!
விழுந்து நொறுங்கியது தேநீர்க் குவளை....!!
நொறுங்கிய துண்டுகளில்!
என் கனவுகளின் உருவங்களும்!
மிச்சம் சிந்திய தேநீரில் என்!
நினைவுகளின் ஈரமும் கண்டேன்...!!
கருவிழிகள் சலனமுற்று!
சிந்திய விழிநீர் முத்துக்களின்!
பிரிதலும் என்னை மீண்டும் கனவுகளில்!
தள்ளிவிட்டு சிரித்தன

மழைக்கடுதாசி .. ஆர்வமழை

சின்னப்பயல்
01.!
மழைக்கடுதாசி !
--------------------!
அன்றும் மழை!
பெய்து கொண்டிருந்தது!
நீர்த்திவலைகளை வாரி!
இறைத்துக்கொண்டு,!
மூடிய கதவின் பின்!
தபால் பெட்டியில்!
சிறு ஓட்டை வழி!
கடிதங்களும் சிறிது!
நனைந்து தான் விட்டது.!
அனுப்புனர் விலாசம்!
எழுதும் இடத்தில்!
முழுதும் மழைத்துளிகள்!
அன்றும் மழை!
பெய்து கொண்டிருந்தது!
!
02. !
ஆர்வமழை !
---------------!
மழையில்!
எந்த மழை சிறந்தது?!
சிறு தூறலா,!
இல்லை அடித்துப்பிளக்கும் மழையா?!
வெறுமனே போக்குக்காட்டி விட்டு!
போகும் மழையா?!
அல்லது!
சிறிதும் எதிர்பார்க்காத கணத்தில்!
கிளையிலிருந்து!
சட்டெனப்பறந்து போகும்!
பறவை போல,!
தூறிக்கொண்டிருந்து விட்டு!
சட்டெனக்கலையும் மழையா? !
அல்லது!
நேற்றுப்பெய்த மழையா ?!
இல்லை, அது கொஞ்சமே பெய்தது.!
இன்று பெய்து கொண்டிருக்கும் மழையா?!
அது இன்னும் பெய்து முடியவில்லையே!
பிறகெப்படி சொலவது ? !
அன்று பெய்த மழை,!
நேற்று பெய்த மழை!
இன்றும் பெய்யும் மழை!
நாளைக்கு பெய்தாலும்!
பெய்யும் மழை !
எதுவானால் என்ன ?!
அதுவும் மேலிருந்து!
கீழிறங்குவதைப்!
பார்ப்பதில் தான்!
நமக்கு!
எத்தனை ஆர்வம்...?

இல்லாத ஒன்று

ராமலக்ஷ்மி
வெறுமை மனதை வியாபித்து நிற்க!
நிம்மதி நாடி அமைதியைத் தேடி!
நடந்தேன் இலக்கின்றி வருத்தமாய்!
அழுத்தும் சுமையை எங்கிருந்து எடுப்பது!
எவரிடம் எப்படி இறக்குவது!
தெரியாமல் திணறியது மனது குழப்பமாய்!
பாதையோரம் காண நேர்ந்த!
பார்வையிழந்த இளைஞன்!
கம்பீரமாய் நம்பிக்கையாய்!
நிமிர்ந்து நடக்க உதவியாய்!
கூடச் சென்ற கைத்தடி..!
கேட்காமல் கேட்டது என்னை!
இல்லாத ஒன்று எப்படியாகும் பாரமாய்!
புரியாதது புரிந்திட திகைத்து நின்றேன்!
எடுத்துக் குறைத்திட ஏதுமற்றவனாய்!
இதுவரை கிடைத்த நல்லன யாவும்!
நினைவுக்குவர நன்றி மிகுதியில்!
நெஞ்சம் நனைந்தவனாய்!
வெறுமையென மயங்கிய மனதுக்கு!
வலிமைதர என்றைக்கும்!
பெற்ற அனுபவங்கள் துணையிருக்கும்!
என்பதனை மறந்தயென்!
மடமையை எண்ணி வெட்கிச் சிரித்தவனாய்.!

முகங்கள்

கீதா ரங்கராஜன்
அரசு பேருந்தில் சுகமான பயணம்!
ஜன்னலோர இருக்கையின் சிலு சிலுப்பில்!
விழி விரித்து வெளி நோக்க!
அப்பப்பா நிறுத்ததில் எத்தனை முகங்கள்!
அவற்றில் எத்தனை நிறங்கள்!
வளமான வாழ்வில் செழித்திருக்கும் !
பொலிவான முகங்கள்!
விடியலை நோக்கி காத்திருக்கும் !
வெளுத்த முகங்கள்!
கனிவான அன்பை பொழியும் !
காதல் முகங்கள்!
உழைப்பில் வியர்த்திருக்கும்!
களைத்த முகங்கள்!
துயரத்தில் ஆழ்ந்திருக்கும்!
கருத்த முகங்கள்!
பேருந்திற்கு காத்திருக்கும் !
கடுத்த முகங்கள்!
அப்பப்பா எத்தனை முகங்கள்!
அதில் எத்தனை நவரசங்கள்!
என நான் அதிசயித்திருக்க!
மெல்ல நகர்ந்தது பேருந்து