தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

நோட்டு மாலைகள்

ராமலக்ஷ்மி
பசித்துப்!
பாலுக்கு அழுதபடியே இருக்கும்!
பாவஜீவனாய்!
எங்கோ ஒரு கைக்குழந்தை!
மருந்துக்கு வழியின்றி!
ஏதோவொரு வீட்டின் மூலையில்!
விடாமல் இருமிக் கொண்டிருக்கும்!
முதிய தாய்!
உடைந்துபோன மூக்குக் கண்ணாடியின்!
சட்டத்தைத் தினம்தினம்!
தொட்டுப் பார்த்து!
மகனிடம் புதுசுக்கு!
மனுப்போட்டுக் காத்திருக்கும்!
வயோதிகர்!
அஸ்தமனம்வரை உழைத்து!
அரைவயிற்றுக் கஞ்சிக்காவது!
ஆகுமென ஆசையாய்!
உலைவைக்க வந்தவளிடம்!
உதைத்துப் பிடுங்கிக்கொண்டவன்!
பெயர்தான் வாழ்க்கைத்துணையாம்!
நொந்து சுருண்டவளாய்!
மனைவியெனும் ஒரு பிறவி!
'பரீட்சைக்குப் பணம் கட்டினாதான்!
பள்ளிக்கூடம் போவேன்'!
சொன்னாதாலே அடிவாங்கி!
கன்னம்வீங்கிக் கலங்கிநிற்கும்!
சின்னஞ்சிறு பாலகன்!
'இந்த ஒரு வருசமாவது!
பொறந்த நாளைக்கி!
புதுசு வாங்கித் தாப்பா'!
கிழிந்த பாவாடையில்!
வழிந்த கண்ணீரைத்!
துடைத்துக் கொள்ளும்!
பதின்ம வயது மகள்!
ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்!
ஒவ்வொரு நோட்டுக்குள்ளும்.!

என்ன செய்ய ?

ராமசுப்ரமன்யன்
மின்னல் வேக இணையம்.!
குதிரை வேக இயந்திரம்!
ஒலி வேக பயணம்.!
கையளவு தொலைபேசி.!
பையளவு கணினி என!
எல்லாம் வந்தாச்சு...!
எதுவும் போகவில்லை...!
லஞ்சம்.!
திருட்டு.!
ஊழல்.!
வறுமை.!
மற்றும்!
இவற்றை தடுக்க இயலாமை என!
எதுவும் போகவில்லை...!
!
ராமசுப்பிரமணியன்

இப்போது உனக்காக

நாவாந்துறைடானியல் ஜீவன்
நாவாந்துறை டானியல் ஜீவா- !
கனவுருகும் !
காலைப் பொழுதில்.. !
அவள் வந்து போவள்.. .. !
நானிருக்கும் தேசம் !
நீண்ட இருளில் !
மூழ்கும் போது... !
காதல் எப்படி !
என்னுள்... !
எழுச்சிகொள்ளும்.. !
!
எழுதுவதற்கும் !
எழும்புவதற்கும்.. !
சோம்பறித்தனத்தில் !
கண்களை மூடிக் கொண்டு !
கட்டிலில் !
உடலைத்தளரவிட்டேன். !
!
ஓசையற்று !
உறங்கிக் கிடந்த !
எனது ஊரில் !
அந்நிய முகங்களைக்கண்டு !
அவசரமாய் !
நாய்கள் ஊளையிட !
ஊரேவிழித்தது. !
இன்று மட்டுமல்ல !
எங்கள் வாழ்வே !
இப்படியாகிவிட்டது.. !
!
எலிக்காது போல் !
என்காதுகளும் !
மனக்கண்களும் !
விழித்தன... !
!
எங்கோ.. !
எழுந்த அழுகுரலோடு !
பின்னால் துப்பாக்கி வேட்டு !
தப்பிக்காமல் !
தலையை குறிபார்த்திருக்கலாம். !
!
அதன் பின் !
வாகனம்.. !
இரைச்சலோடு !
புறப்பட்ட வேக ஒலியைத்தவிர !
அந்தப்பின்னிரவு !
அடங்கிப்போனது. !
!
விடிந்ததும் !
முகம் கழுவ !
முகத்தோடு பலர்.. !
நானும் அவர்களில் !
ஒருவன் !
காலை விழிப்போடு !
காற்றும் வாங்கும் !
காலம் !
காலவரையற்று !
காணமல் போய் விட்டது. !
!
யாருபெற்ற பிள்ளையோ !
நானறியேன்.. !
வெட்டிப்பிளந்து !
வேடிக்கை பார்ப்பதற்காகவா !
போசக்குணவுண்டு !
பத்து மாதம் சுமந்தாய் !
உன் மகனை... !
!
இந்த மண்ணை நேசித்த !
இந்முகத்த உன்மகன் !
சுக்குநூறாய் !
சுருங்கிப் போவதற்காகவா !
சுடு மணலில் !
நார்க்கடகம் சுமந்து !
நாளாந்தம் !
மீன் விற்றாய். !
!
புனிதப் படுகையில் !
போர்த்துக்கிடந்த !
வெள்ளை மனங்கள் !
வெளுத்துப்போனது !
எப்படி? !
!
வாயிருந்தும் !
வார்த்தையிழந்து.. !
எனது வீதியில் !
நடைப்பிணமாய் !
நான் அலைந்ததை !
உனக்குத்தெரியுமா? !
!
இப்போது !
உனக்காக எதைச்செய்வேன் !
அழுவதைத்தவிர

சாட்சிகளேதுமற்ற மழை

எம்.ரிஷான் ஷெரீப்
கதவு யன்னல்களிலிருந்து!
வழிகின்றன முகங்கள்!
கொட்டப்படும் நீர்த்தாரைகளைப் போல !
கைகளில் கட்டப்பட்டிருக்கும்!
நுண்ணிய கயிறுகளை அவிழ்த்துக் கொண்டு!
பார்த்திருக்கும் அவற்றின் விழிகளில்!
நிழலாக அசைகின்றன!
பாதையோர மரங்களும்!
ஈரப் பறவைகளும் மழையும்!
ஒரு தெருச் சண்டையும் !
புன்னகையும் சிரிப்பும் எள்ளலும்!
சுழிப்பும் முணுமுணுப்பும்!
அருவருப்பும் கலந்த உணர்ச்சிகள்!
மழைச்சாரலிடையில்!
அங்கிங்கு தாவும் தவளைகளைப் போல!
அவதானித்திருக்கும் முகங்களில் மாறிட!
பேய்களின் வாய்களுக்கெனவே!
பிறப்பெடுத்தவை போல!
வெளியெங்கும் வீச்சமேற்றுகின்றன!
பிணங்களின் வாடையுடனான!
அழுக்கு மொழிகள் !
இடி வீழ்ந்து!
இலைகள் கிளைகள் எரிய!
மொட்டையாகிப்போன மரமொன்றென!
நடுத்தெருவில் நின்று ஓலமிட்டழுதாள்!
மேலாடையுரிக்கப்பட்ட குடிகாரனின் மனைவி!
புதைக்கப்பட்ட விரல்களில்!
புழுக்களூர்வதைப் போல!
நேச உணர்வேதுமற்றவன்!
தன் தாக்குதலைத் தொடர்ந்தான் !
நத்தைகள் ஆமைகளைப் போல!
தங்களை உள்ளிழுத்து!
கதவுகளைப் பூட்டிக்கொண்டன!
தெருவில் நிகழ்ந்த!
கொலையைக் கண்டமுகங்கள்!
எதையும் காணவில்லையென்ற!
பொய்யை அணியக்கூடும்!
இனி அவர்தம் நாவுகள்

என்னவள் ஒரு தேவதை IV, V

ராம்ப்ரசாத், சென்னை
என்னவள் ஒரு தேவதை - IV & V!
!
IV. !
என்னவள் ஒரு தேவதை!
----------------------------!
மொழி ப‌யின்ற‌தென்ன‌வோ!
உன் இத‌ழ்க‌ள்தான்!
எனினும்!
அதிக‌ம் பேசுவ‌தென்ன‌வோ!
உன் விழிக‌ளே...!
ஆனால்,!
இப்ப‌டி காத‌ல் பேச‌!
யாரிட‌ம் க‌ற்ற‌ன‌ அவைக‌ள்!
என‌க்கேட்டால் என்னையே!
காரணம் காட்டுகிறாய்...!
மழைக்காகத்தான் குடைகள்...!
எனினும்,!
உன் மடியில்!
நான் சாய‌!
இமைக்குடை விரிக்கும்!
உன்னிரு கருமீன்களின்!
க‌ருணைப்பார்வையில்!
எப்போதும் என் கண்களில்!
மழைதான்...!
இனியவளே,!
நீ பேசப்பேச‌!
திகட்டாமல் இனிக்கிறது!
எந்த மொழியும்...!
புரியாத மொழியில்!
நீ என்ன பேசினாலும்!
எனக்குப் புரிகிறது!
அது காதல் தானென்று...!
V.!
என்னவள் ஒரு தேவதை !
-------------------------------!
உத்திர‌த்தில் க‌யிறுக‌ட்டி!
அந்த‌ர‌த்தில் ஆடிக்கொண்டிருந்த‌!
ஊஞ்ச‌லின் ம‌டி!
அம‌ர்ந்திருக்கிறாய்,!
என் ம‌டி வேண்டாமென்று!
வ‌ழ‌க்க‌ம்போலொரு ஊட‌லில்...!
அது பொய்யெனப் புரிந்த‌வ‌னாய்!
உனதுருவ‌ம் பொறித்த‌!
த‌லைய‌ணையை நீயென‌!
பாவித்து ம‌டிய‌ம‌ர்த்திக்!
கொஞ்சுகிறேன்...!
என் கொஞ்ச‌ல் மொழி!
த‌ன‌க்கு ம‌ட்டும்தானென!
ஓடிவ‌ந்து தலையணை விரட்டி!
உனை கொண்டு!
நிர‌ப்புகிறாய்...!
அக‌வை மூவெட்டை!
தாண்டிய‌ குழ‌ந்தையென‌!
உனை ம‌டியேந்தி!
தாலாட்டுகையில் இறையிட‌ம்!
வேண்டுகிறேன்!
இனி எப்பொழுதும்!
இப்பொழுதாய் என்றும்!
இனிய‌தாய் கடந்திட‌வேண்டுமென‌

நீ என் குழந்தை

நாச்சியாதீவு பர்வீன், இலங்கை
வாப்பா என்றழைக்க !
வந்துவிட்டாள்...!
என் மகள் மரியம்..!
நதியோடு பேசும் !
புது ராகம் அவள் !
நிலவோடு விளையாடும் !
மழை மேகம் அவள் !
பூக்களை நேசிக்கும் !
சின்னப் பனி துளியவள்.!
இரவென்ன பகலென்ன!
அவள் இதழோரம்!
புன்னகைதான் !
பஞ்சுக் கரங்களால் !
வருடும் மான்குட்டி!
பிஞ்சிக் கால்களால் !
உதையும் பூந்தொட்டி !
என் ஆனந்த வாழ்வில் !
அழகான பரிசு அவள் !
தேவதைக்கு பிறந்த !
தேன்-வதையவள்.. !
சோகத்திடலில்!
விழுந்து கிடந்தேன்!
பாசக் கடலாய் !
வந்தாய் மகளே !
நேசம் நிறைந்த !
வல்லோன் இறைவன் !
தந்தான் உன்னை !
நீ என் குழந்தை

ஓரு கோடையின் கடைசிக்காலம்

மாலியன்
1 !
குதர்க்கமாய் குத்திட்டு நின்றன !
சைபீரியன் பறவைகள் !
ஓடும் Ridaeau வுக்கெதிரே! !
ஆற்றின் வேகம் எவ்வளவு நாள்தான் !
நீடிக்குமோ தெரியாது, !
Winter வரப்போகும் சிலமன் கொஞ்சம் !
கொஞ்சமாய் தெரிகிறது! !
மரங்களும் இலையுதிர்த்தலுக்காய் வண்ணம் !
பூசவும் தொடங்கிவிட்டன. !
தெருவழி மனிதரும் சற்றே தரித்து ஆற்றை - !
அழகை ரசித்தலில் !
கோடையை விடைகொடுத்தல் கூடும் !
!
2 !
பிரிதலும் சேர்தலும் பிரிந்தே போதலுமாய் !
புலம்பெயர் வாழ்வு! !
நேற்று நிஐங்களாய் இருந்த உறவுகளும் !
தொலைந்தே போகும் தூரே - !
தேடுதல் சாத்தியமில்லை !
இருத்தலுக்காய் இயந்திரமாகாவிடின் !
அன்னியமாகி தொலைந்தேவிடுவோம் !
!
3 !
மீண்டும் சைபீரியன் பறவைகள் !
நெஞ்சை நிமிர்த்தி !
நீரினுள் பாய்ந்தன! ஏதிர்த்து முன்னே நீந்தின !
மூச்சை அடக்கி உணவைத் தேடின !
அதில் ஒன்று சற்றே நிமிர்ந்து ஏளனமாய் - !
ஏ மனிதா நாடு துறத்தலும் நாடு இழத்தலும் !
எமக்குமொன்றும் புதிதில்லை - ஆயினும் !
வாழ்வின் இழப்புகளுக்கிடையிலும் !
வாழ்தலில் குறியாய் உள்ளோம் !
மீண்டும் மீண்டும் எம்மை Winter கள் !
துரத்தல் கூடும் !
ஆயினும் சிறகுகள் இன்னும் இருக்கின்றது! !
!
4 !
மௌனியாய் மேற்கே சூரியன் மெல்ல கரைதலில் காற்று குளிரைக் காதில் உரைக்கும் - !
மெல்ல எழுகையில் !
வாழ்வின் சூட்சுமம் உரைத்த !
பறவை எங்கோ மறைந்திருந்தது. !
மாலியன் !
1-10-2002 !
குறிப்பு: !
Ridaeau - Ottawa, Canada வில் உள்ள ஆறு

போய் விட்டது

A. தியாகராஜன்
டி வி -யைப் பார்த்தபடி-!
நான் பார்க்கவில்லை!
அது ஒரு இன்டெராக்டிவ் கருவி!
நான் அதனுள்....!
என் மகனே!
நீ எப்போது போனாய்,!
உன் பள்ளியின் இறுதியிலா!
முன்னமேயா!
சரியாக எனக்குத் தெரியவில்லை!
உன்னுடைய பறத்தல்!
அவ்வளவு கரவாக!
நானறியாது...!
அறிந்தது!
இது மட்டு மெ!
நீ சென்றுவிட்டாய்!
மெய்யாலுமே...!
அவசியாமான!
(கட்டாயமான?!
இல்லை- தவிர்க்கவியலாத!)!
இழப்பு!
நான் அழுவதா?!
ஏதோ ஒரு சலனம்!
டி வி யில்!
என்னை பங்கேற்க அழைப்பு-!
நான்!
பார்வெர்ட் பொத்தானை அமுத்தி!
உன்னைப் பிடிக்க முடியுமா?!
இன்னொரு எபிசோடில்!
வேறொரு நேரத்தில்!
உன்னையே போன்றதொரு!
சாயலில்?!
இல்லை..!
இது சாத்தியம் இல்லை!
எனக்குத் தெரியும்!
நீ தனி.. !
நகலில்லா ஒரே பிரதி!
எதன் சாயலும் அற்ற!
எதன் பிம்பமாயும் இல்லாமல்!
என்ன்ன மிச்சம்!
என்னிடம்!
ஆவிகள் தவிர!
பூதமோ (பிசாசா?)!
தவிர?!
செல்லுலாய்ட்!
பிரதிபலிப்புகள்!
தவிர....!
- அ.தியாகராஜன்

பூ

வேதா மஹாலஷ்மி
= !
- வேதா மஹாலஷ்மி !
என்றைக்கும் போல் !
இன்றைக்கும் ஒரு பூ.. !
அந்த செடியில்! !
இதுவரை பூத்ததெல்லாம் !
எதற்கோ பூத்துவிட, !
அங்கங்கே சில மொட்டு மட்டும் !
உச்சி திறக்க, உரசி நிற்க, !
காதலின் வண்ணமாய் !
காம்பு வரை மணம் நிறைத்து !
காற்றும் தீண்டா கவிதையாய் !
ஆயிரம் பவுர்ணமியின் அழகே அழகாய் !
அதோ ஒரே ஒரு பூ மட்டும்.... !
யாருக்காகப் பூத்திருக்கோ... !
என்றைக்கும் போல் !
இன்றைக்கும் ஒரு பூ.. !
அந்த செடியில்! !
!
veda

ஆட்சி மாற்றத்தில்.. பிரசவம்

செண்பக ஜெகதீசன்
ஆட்சி மாற்றத்தில்.. பிரசவம்!
--------------------------------!
!
1.ஆட்சி மாற்றத்தில்!
ஆட்சி மாறுகிறது!
அகிலத்தில்,!
காட்சி மாறுகிறது!
காலையில்..!
ஆமாம்,!
இதுவரை-!
இரவெலாம் இருந்த!
இருளின் ஆட்சி!
அப்புறப்படுத்தப்பட்டுவிட்டது!
இளைய தலைவனாம்!
இரவியின் வரவால்!!
2.விண்ணிலுமா�!
வானில்!
வனப்புகாட்டும் நட்சத்திரங்கள்-!
பகலெல்லாம் படுத்துறங்கிவிட்டு!
இரவில்!
வானவீதியில் வந்துநின்று!
வழியில் வருவோரை!
தொழிலுக்கு அழைத்து!
கண்சிமிட்டும்!
விண்ணகத்து மேனாமினுக்கிகள்!!
3.சலித்துப் போய்�!
பார்க்கக் கூடாத!
பலவீட்டுச் சமாச்சாரங்களைப்!
பார்த்துச் சலித்ததாலே!
அடிக்கடி எடுக்கிறானோ!
விடுப்பு,!
அந்தரத்துச் சந்திரனும்�!!
4.பிரசவம்!
சப்தமிட்டு!
சண்டையிட்டுக் கெடுத்துவிடாதீர்கள்!
இரவின் அமைதியை,!
இருக்கிறது அது!
பிரசவ வலியில்,!
பின்னிரவும் வந்துவிட்டது,!
இப்போது!
பொழுதும் விடிந்துவிட்டது,!
பிரசவமும் முடிந்துவிட்டது �!
பகலாக,!
சுகப்பிரசவம்தான்