கடைசியில்!
நிகழ்ந்தே விட்டது!
உன்னோடான!
பிரிவும்……!
எதிர்பார்த்ததுதான்!
இருந்தும்!
இத்தனை!
சீக்கிரமா…?!
நீ!
அடிக்கடி சொல்லும்!
‘பிறகு சொல்கிறேன்’!
என்பதை!
சொல்லாமலே!
போய்விட்டாய்!
திருவிழாவில்!
குழந்தையைத் தொலைத்த!
தாயொருத்தியின்!
பதை பதைப்பும்!
அழுகையும்!
எனக்கு இன்னும்!
சில காலம்தான்…!
பிறகு!
இன்னொரு!
பிரிவை நோக்கிய!
உறவின் மீதான பயணம்!
இயல்பாகவே நிகழ்ந்துவிடும் !!
!
- நிந்தவூர் ஷிப்லி, !
தென்கிழக்கு பல்கலை, இலங்கை
நிந்தவூர் ஷிப்லி