ஒரு வரி கூட எழுதவில்லை - வேல் கண்ணன்

Photo by Paweł Czerwiński on Unsplash

ஒரு வரி கூட எழுதவில்லை !
முதல் ஜாமம் கடந்து விட்டது !
இரண்டாம் ஜாமம் கடந்து போகிறது !
ஒரு வரி கூட எழுத முடியவில்லை !
இள மஞ்சள் இளங்காற்று தொடரும் கண் அயர்ச்சி !
பதற்றத்துடன் எழுதல் அல்லது எழுப்பபடுதல் !
இயற்பியல் சித்தாந்தங்களின் !
பக்கங்கள் வலுக்கட்டாயமாக !
திருப்பப்படும் திணிக்கப்படும் !
பற்றிக்கொண்ட வேகம் !
வெப்பம் வெப்பக்காற்று !
வெக்கை வெக்கை வெக்கை !
தெறித்து விடும் கண்ணெரிச்சல் !
நகுலன் ஒரு சமயம் எரிந்தது போல் !
காண்பதெல்லாம் !
என்கையில் ஒரு கத்தி எதிரே பல !
தளர்ந்த நடை நரம்பு தளர்ந்த மஞ்சள்!
இருப்பினும் !
தளராத நெரிசல் அதிகரித்த கவுச்சி !
பாதி வேக்காட்டை முழு வேகத்துடன் முழுங்கி !
சாயும் போது ........'ஒரு வரி கூட எழுதவில்லை!
இன்று எழுதி விட வேண்டும் !
ஒரு வரியாவது'
வேல் கண்ணன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.