என்னை அவள்!
பத்திரமாக சுமக்கிறாள்!
முழுமை அடையாத!
கைகால்களை!
முடக்கிக்கொண்டு நான்!
தொப்புள்கொடிவழி!
சத்துக்கள் தந்து!
வளர்க்கிறாள்!
இருளாகத்தான்!
இருக்கிறது!
ஆனாலும் பயமில்லை!
இதமான கதகதப்பில்!
சுகமாகத் தூங்குகிறேன்!
அவயங்கள்!
மெல்ல வளர்கின்றன!
கொடியுறவு!
ஒருநாள்!
அறுந்து போகக்கூடும்!
சூழல் சூரியன்களால்!
இருள் மறைந்து!
வெளிச்சம் வந்துவிடக்கூடும்!
பயம் பற்றிக்கொள்ளக்கூடும்!
எல்லாம் சுயமாகிப்போகக்கூடும்!
நானும் மாறிப்போகலாம்!
மனிதனாகவோ!
அல்லது மிருகமாகவோ!
- இராம. வயிரவன்

இராம. வயிரவன்