பரணி ஆற்றில் பள்ளிகூடம் போகாமல்!
சட்டையும் அரைகால்சட்டையும் அவிழ்த்து!
பாறை மீது வைத்து பறக்காதிருக்க கூழங்கல்லும் வைத்து!
அம்மணமாய் ஈட்டியாய் நீரில் பாய்ந்து !
குதியாட்டம் போட்டு பல்டி அடிக்க போய்!
காதில் மணலும் மூக்கில் தண்ணீரும் புகுந்து!
விரல்களில் தசைகள் சுருங்கி கண்கள் சிவந்து போக!
கண்கள் சிவப்பு போக்க ஒட்டஞ்சில் ஒத்தடமும்!
விளையாடிவிட்டு வருவதாக காண்பிக்க புழுதி தடவியும்!
மூக்கில் முட்டையிடும் சளி காட்டி கொடுக்க!
அரட்டி சிந்த சொல்லி சிந்தா மூக்கை பிடித்து !
சிந்தி சிந்தி ஒரு பக்கம் சாய்வாய் என் மூக்கு!
ஆனாலும் திருட்டுதன குளியல் தொடர!
ஆற்று நீரும் மூக்குக்கு பழகி போனதும்!
ஒட்டஞ்சில்லில் தவளை விட்டு மகிழ்ந்ததும்!
பூட்டிய குளியலறையில் வாசனை சோப்பு போட்டு!
குளித்தாலும் அந்தகுளியல் சுகம் என்றும் வராது!
இன்றும் ரோட்டில் எப்பவாது காணும் !
ஒட்டஞ்சில் சொல்லும்!
சூட்டு ஒத்தடத்தையும் !
ஆற்று நீர்பரப்பில் தவளை விட்டதையும்!
மகிழ்ச்சிக்காக குளித்ததையும்
வி. பிச்சுமணி