எதிரிகள் எங்கும்!
இருக்கலாம்!
எச்சரிக்கை..!
புகழ் பாடுபவனை கவனி!
பின்னால்!
புறம் பேசக்கூடும்!
உனக்கு!
மேடை கட்டுவதாக சொல்பவன் உண்மையில் பாடை கட்டிக் கொண்டிருக்கலாம்!
உன் படகில்!
துடுப்புகளைத் தொடும் முன் துளைகளைத் துருவிப்பார்!
புழுவா இல்லை!
புழுவைப் போர்த்திய தூண்டில் முள்ளா!
புரிந்துகொள்!
சில புன்னகைகள்!
புதைகுழிகளை!
ஒளித்து வைத்திருக்கலாம்!
முகத்தில் வெகுளித்தனமும்!
அகத்தில் சகுனித்தனமும்!
கொண்டவர்கள் அதிகமுண்டு!
எட்டப்பர்களும் யூதாஸ்களும்!
எட்டி இருப்பதில்லை!
கிட்டேயே இருப்பார்கள்!
தூரத்தில் இருக்கும்!
எதிரியின் முகத்தை விட!
அருகில் இருக்கும் முகமூடிகள்!
ஆபத்தானவை
அ. முகம்மது மீரான்