இன்று - மாக்கிரட் கோட்லீப்

Photo by FLY:D on Unsplash

புதன்,13ம் திகதி.!
நேரம் ஒன்று முப்பது,!
இன்றுடன் முடிவு!!
!
சமையலை நீயே செய்துகொள்!
உனது உள்ளங்கிகளை!
நீயே தோய்த்துக்கொள்!
வீட்டைத்துப்பரவாக்கு,!
கட்டிலை ஒழுங்கு செய்,!
வீட்டைக்கழுவு,!
ஜன்னலையும் மறந்துவிடாதே,!
கிழமைக்கொருமுறை படிகளையும்.!
!
சிலவேளை நடுநிசியிலும்!
சிலவேளை வராமலும்!
காலையில் வெளியேறி!
மாலையில் நீ விரும்பியபடி!
திரும்பும் உலகம் .!
!
இன்னும் மூன்றுமுறை!
கூரைமேல் சுற்றுகிறேன்.!
புகைபோக்கி குளிராக உள்ளது.!
நான் சுதந்திரம் அடைந்துவிட்டேன்.!
!
Margret Gottlieb ஜெர்மன் மொழியிலிருந்து தமிழில் றஞ்சினி !
நன்றி இருள்வெளி
மாக்கிரட் கோட்லீப்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.