நெறி!
!
நிகரானவனே!
உன்னை நேசிப்பது நிஜம்.!
அதற்காக!
நெறிமீறாதே தோழனே!!
நெறிபடுத்தப்பட்ட!
சப்தங்களே!
சங்கீதமாய்.!
நெறிபடுத்தப்பட்ட!
வார்த்தைகளே!
கவிதையாய்.!
நெறிபடுத்தப்பட்ட!
அறிவே!
விஞ்ஞானமாய்.!
நெறி நிராகரிக்கப்படும் போது!
நிஜம்!
சுயமிழந்துபோகிறது.!
முதலிரவுமுடிந்து!
திருமணம்!
என்றாகாமல்!
நெறிக்குள்ளேயே நேசிப்போம்!!
நெறிபடுத்தப்பட்ட!
காற்று!
உயிராவது மாதிரி !!
!
விடுதலை!
!
உன்னை!
விடுதலை செய்யக்கோரி!
என் கனவுகளையும்,!
காதலையும்!
பணயக்கைதியாய்!
பிடித்துவைத்திருக்கும்!
காதலியே!!
இதோ விடுதலைசெய்கிறேன்!
உன்னையும்,!
என் உயிரையும்!!
தற்காலிக தவம்!
!
உயிரானவனே!
பொருளாதாரம் மட்டுமே!
என்னிலிருந்து!
உன்னை!
புறம்தள்ளுகிறது!!
புறப்படு!
சென்று வென்று வா!!
உனதுபயணம்!
பகட்டோடுதிரும்பட்டும்.!
என்னை!
பரிகசிக்கும் உறவுக்கு!
உன்னை காட்டவேண்டும்!
சொகுசுவழ்ந்தவனாய்!!
வெளிச்சமில்லாத விளக்கிற்கு!
இங்கு யாரும்!
விமர்சைசெய்வதில்லை.!
நான்!
பூத்த பூவுதான்!
ஆனாலும் காத்திருக்கிறேன்!
குளிர்ச்சாதனதில் வைத்த!
ஆப்பிள் போலவே
சிலம்பூர் யுகா துபாய்