காருண்யன்- !
பேர்லின் பிரிசுவர் இருந்ததுக்கு அணுக்கம் !
நம் வீடுள்ள வீதிக்கு மேற்கே !
விரிந்திருக்கிறது அம்மைதானம். !
எப்போதாவது நாலு சிறுவர் சேர்ந்தால் !
சைக்கிள் விடுவர் அல்லது உதைபந்தாடுவர். !
மறுபடி அங்கதன்----- !
புல்லை மிதிக்கும் ஒரு குருவியை !
காக்கையை காண்டிடலரிது !
ஒரு நாளங்கு இத்தாலியிருந்து !
'புறொங்காலி' என்றொரு சேர்க்கஸ் வந்தது !
கூடாரம் விரித்தது காட்சிகள் போட்டது !
விண்தொட்டாடும் ஊஞ்சல்கள் விதூஷகம் !
பண்ணக் கோமாளிக் கூட்டங்கள் !
ஆயிரக் கணக்கில் மாந்தர்கள் கூடினர் !
சகல சந்திலும் வாகனம் தரித்தது !
சுவைமிகு தீனொடு கடைகள் பரவின !
பியர் பீப்பாய்கள் பீறிட்டுப்பாய்ந்தன !
மூன்றுமாதம் அமர்க்களம் போங்கள்! !
எங்கள் குழந்தைகள் தினம் சர்க்கஸ்” என்றனர் !
நுழைவுக்கிரையம் யாதென்று உசாவினேன் !
அய்யகோ எம்மாத 'பட்ஜட்டின் பாதி'யாமஃது !
ஏழை மனமோ நாளும் சபிக்கும் !
நாளும் சாக்குச் சொல்லித் தவிர்க்கும்! !
கூடாரம் தாண்டிச் சென்றிட நேரும் !
வேலையற்றோர் நாடோடிகள் ஏதிலிகள் !
காலம் துரத்தி ஒதுங்கிய அகதிகள் !
தஞ்சமடைந்தவர் சின்னக் குழந்தைகள் !
கூட்டினுள் பகலில் தூங்கும் கரடியை !
புலியைப் சிங்கத்தைக் குதிரையை !
வேலியால் எம்பிப் பார்த்துக் களிக்கும்! !
வித்தைகள் காட்டி மயக்கிய சேர்க்கஸ§ம் !
ஒருநாள் புறப்பட்டுப் பரதேசம்போனது !
அறுவடைதீர வயல் தனியானது !
ஆரவவாரங்கள் ஆர்ப்பாட்டங்கள் !
நீங்கியோய்ந்த மைதானம் நோக்கையில் !
மனம் வெளியாகுது சிறுவலி காணுது !
ஒரு சூரிய அஸ்த்தமனத்தில் ஆவதைப்போல! !
!
25.11.2004 Berlin